வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label கேட்டால் கிடைக்கும். Show all posts
Showing posts with label கேட்டால் கிடைக்கும். Show all posts

Friday, September 21, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !! (தொடர்ச்சி)

 நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறையே.... அரசாங்கத்தை ஈசியாக குறை சொல்லிவிடுகிறோம். ஆனால், அவர்கள் சரி செய்ததை பாராட்டவோ அல்லது சரியாகி விட்டது என்று சொல்லவோ செய்வதில்லை.இதே தவறை தான் நானும் மூன்று நாட்களாக செய்திருக்கிறேன்.

சென்ற திங்கள் அன்று பதிவிட வேண்டும் என்று இருந்தேன். நேரமின்மைக் காரணமாக இன்று பதிவிடுகிறேன்.


அதன் பின் TN CM cell க்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒரு வாரம் பொருத்திருந்து பார்த்தேன். பெரிதாக பலனில்லை. இரண்டு நாள் கலித்து, 'கேபிள்' சங்கர் அவர்கள் மேயரின் முக நூலில் போஸ்ட் போட்டதற்கு சரியான பதில் கிடைத்தது என்று கூறியிருந்தார். CM cell சரியாக வேலை செய்யாத போது, மேயர் மின்னஞ்சல் மட்டும் சரியாக வேலை செய்யுமா என்ற அவ நம்பிக்கையோடு தான் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், அடுத்த இரண்டு நாளில் ஒரு குழி முடப்பட்டது. ( இதில் இருக்கும் அரசியலுக்கு நாம் போகாமல் இருப்பது நல்லது.)

இந்த குழியில் தான் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு ஆபத்தாக இருந்தது. அப்படியும், இரண்டாவது குழியை அவர்கள் மூடவில்லை. ஐந்து நாளாகியும் ஒரு குழி மட்டும் மூடப்படாமல் இருந்தது.

ஏ.ஈ தொடர்பு கொண்டு கேட்டேன். கொஞ்சம் வேலை இருந்தது. இன்று முடிந்துவிடும் என்று அன்றே குழியை முடிவிட்டார். 


நான்கு தெருவும் சேரும் முனை என்பதால் இந்த குழி மூடியதும் ஒரளவு போக்குவரத்து பரவாயில்லை.

 குழி தொண்டிய சுவடு மட்டும் சாலையில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான சாலையின் கதி அது தானே !!!

Thursday, August 30, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !!

பதினைந்து நாள் போராட்டத்திற்கு பிறகு மிகுந்த வெருப்புடன், மன வேதனையுடன் இந்த பதிவு எழுதுகிறேன்.

பெரம்பூர் வடிவேலு முதலி தெருவில் (நெல்வயல் நகர்) நான்கு அடிக்கு இரண்டு குழிகள் தோண்டி ஒன்றரை மாதங்களாக மூடப்படாமல் இருக்கிறது. விவேகானந்தா, மான்போர்ட், ஞானஜோதி, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி என்று பள்ளி மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கு ஆபத்தாக அந்த குழி இருக்கிறது. வயதான முதியவர்களும் மார்க்கெட்டுக்கு அந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

அந்த குழிக்கு மிக அருகில் தமிழ அரசு குடி மக்கள் தஞ்சமடையும் டாஸ்மார்க் இருக்கிறது. இரவு குடி போதையில் செல்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 குழி நெ.1 (வெளிப்புரம்)

 குழி நெ.1 (உள்புரம்)

 இப்படி, முக்கிய பகுதியில் பல நாட்களாக குழி மூடப்படாமல் இருக்கிறதே என்று விசாரிக்க, மெட்ரோ வாட்டர் தோண்டிப் போட்டதாக கூறினர். நானும் அவர்களிடம் சென்று புகார் கொடுத்தேன்.

எதோ எண்ணை அழுத்தினார். நான் பார்த்து முடித்து விடுகிறேன் என்றார். மூன்று நாட்கள் ஆனது. குழி முடப்படவில்லை. (அவர் பெயரை கேட்காமல் விட்டுவிட்ட தவறை இப்போது உணர்கிறேன்.)

மீண்டும் மெட்ரோ வாட்டர் சென்று புகார் கொடுத்தேன். இந்த முறை குரலை உயர்த்தி பேசினேன். "நீங்க போய் கவுன்ஸ்லர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க" என்றார். எதற்காக குழி தோண்டியிருக்கிறார்கள் என்று சரியான பதில் கூட சொல்லவில்லை.

குழி நெ.2


இவர்கள் குழி தோண்டுவார்கள், அதை மூடிவதற்கு கவுன்ஸ்லர், எம்.எல்.ஏவிடமா செல்ல வேண்டும் ? இதற்கிடையில் இன்னொரு எண் கொடுத்தார்கள். எப்போது போன் செய்தாலும் அவங்க சீட்டுல இல்ல... நாங்க பக்கத்து டிவிஷன் என்கிறார்கள்.

சரி ! இணையத்தில் தேடி http://www.chennaicorporation.gov.in/ ல் இருக்கும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அடித்தேன்.

 “Digged road is not closed more than one month. Vadivelu mudali street and nelvayal road inter section point. ( Near vellayan market), perambur.

என்று 9789951111 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் (22 ஆகஸ்ட்). குழி மூடப்படாமல் இருந்ததால், இரண்டு நாள் கலித்து 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். யாரும் போன் எடுக்கவில்லை. இணையத்தில் போடும் முன்பு, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று மீண்டும் 1913 எண்ணுக்கு போன் போட்டேன். என்னுடைய பெயர், முகவரி, போன் நம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டு புகார் எண் சொல்லாமல் இணைப்பை தூண்டித்துவிட்டார்.

இவர்கள் என் புகார் எடுத்துக் கொண்டார்களா ? என்று எதை வைத்து நம்புவது. ஒரு வாரம் கலித்து கேட்டால் இப்படி ஒரு புகார் வரவில்லை என்று சொல்லுவார்கள்.

பள்ளிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த .. மாணவர்கள் ஸ்ரூத்தி, ரஞ்சன் மரணமடைய வேண்டியிருக்கிறது.. அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய பிறந்த குழந்தை எலி கடித்து சாக வேண்டியிருக்கிறது. சென்னை கார்ப்ரேஷனில் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்ய... இன்னொரு சிறுவன்/சிறுமி உயிர் தேவைப்படுகிறதா ? என்று தெரியவில்லை.

உயிர் பலி வரும் இவர்கள் அலட்சிய போக்கு தொடரும் என்று நினைக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails