இந்த நீதிமன்றம் பல வழக்குகளை கண்டுள்ளது, புதுமையான மனிதர்களை கண்டுள்ளது. இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல…
வழக்காடவந்தவனும் நானும் புதுமையாவன் அல்ல…
கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன், கடவுள் இல்லை என்று கூறினேன். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். இப்படியெல்லாம் குற்றச் சாட்டப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை நிச்சமயாக இல்லை.
கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன். அனைத்து சாதியினர் புன்னியம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. கோயில் ஒரு சாதியினருக்கு சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காக.
கடவுள் இல்லை என்று கூறினேன். அவர் எனக்கு அருள் வழங்காததற்காக அல்ல. கடவுள் என்ற பெயரில் பக்தியை வியாபாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக…
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். பெண்களின் வாக்குவங்கிகாக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக…
உனக்கு ஏன் அக்கரை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை. என்று கேட்பீர்கள்.
நான் பாதிக்கப்பட்டவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட இல்லை.
நடிப்பு என்பீர்கள். என் நடிப்பிலும் நல்ல எண்ணமே கலந்துள்ளது.
ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.
என்னை குற்றவாளி என்கிறீர்களே… இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன.
தென்றலை தீண்டியதில்லை நான். தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே இந்த திருவாரூலிலே பிறந்தவன் நான்.
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
சென்னை என் உயிரை வளர்த்தது. அண்ணாவின் தம்பியாக்கியது. ஐந்துமுறை முதல்வராக்கி அழகு பார்த்தது. ஆறாம் முறை முதல்வராக்கி காவிகளுக்கும், பச்சை இலைக்கும் சவாலாக இருக்கலாம் என்று தேர்தலில் போட்டியிட்டேன்.
தம்பியாக இருந்த ஒருவன் ம.ந.கூட்டனி என்ற பெயரில் எதிர்கட்சி அம்மையாரை முதல்வராக்கினார். அவர்கள் சரியான ஆட்சி செய்தார்களா? செய்யும் ஒவ்வொரு வேலையும் லஞ்சத்தை தட்சணையாக கேட்டார்கள்.
மருத்துவனையில் அந்த அம்மையார் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மர்மமாகவே நடத்தினர். முதல்வர் உயிரோடு இருக்கிறாரா என்ற மக்களின் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார்கள்.
முதல்வர் மரணத்திற்கு பிறகு முதல்வர் பதவியை பச்சை குழந்தை பந்தை தூக்கி விளையாடுவது போல் விளையாடினார்கள். இந்தியளவில் தமிழனின் மானத்தை பறக்கவிட்டார்கள். கூவத்தூர் ரெஸார்ட்டில் குடித்தனம் நடத்தினார்கள்.
’திராவிடம்’ என்ற பெயரில் சுயமரியாதை வளர்த்து ஆட்சி செய்தவன் முன் அடிமைகள் மத்தியிலிருப்பவர்களுக்கு அடிப்படிந்தனர். GST, Sterlite, NEET, எட்டு வழி சாலை என்று மக்கள் பிரச்சனைக்கு மௌனமாக இருந்தனர்.
மோடி வருகைக்கு கருப்பு கொடிக்காட்டினோம், 2ஜி வழக்கை காட்டி பயமுறுத்தினர். வழக்கில் வென்றெடுத்தோம். செயல் தலைவரை ஆட்சியை கலைக்காததால் செயல்ப்படாத தலைவர் என்றனர்.
வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை. அதுவும் என் வழக்குதான். தமிழ்நாட்டு மக்களின் வழக்கு.
தமிழ் மொழிக்காக வாழ்க்கை முழுதும் போராடினேன். வங்கியிலும், தேர்விலும் ஹிந்தியை கட்டாயமாக்கினார்கள். போராடினேன்.
திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கினேன். பெண்களை மானபங்கப்படுத்துவர்களுக்கு அடைக்களம் கொடுத்தார்கள். போராடினேன்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேர்தலில் முன்னுரை வழங்கினேன். மாட்டிறைச்சி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டவர்களை தாக்கினான். போராடினேன்.
விமர்சனங்களுக்கு பதிலளித்து பழக்கப்பட்டவன் நான். கேள்வி எழுப்பும் விமர்சனர்களை மதத்தின் பெயர் கொண்டே அடக்க முயன்றனர். போராடினேன்.
போராடினேன்… போராடினேன்… நான் மடிந்தப் பிறகும் கல்லறை செல்லும் வரை போராடினேன். எனது போராட்டத்தின் கோரிக்கை நிறைவேற்றியிருக்க வேண்டும். சமூக சமநிலை உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் தான் செய்தார்களா ? நான் எதிர்த்ததை அனைத்தும் மீண்டும் கொண்டு வந்தார்கள்.
பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்? வாக்களித்த வாக்காளர்களின் குற்றமா ? நாம் தேர்வு செய்யாதவர்கள் ஆண்டு கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் மக்களின் குற்றமா ?
சாமியார்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் காவிகள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகள் குறைய போவதில்லை.
எனக்கு ஒதுக்குவதாக சொன்ன இரண்டு எக்கர் நிலத்தை பத்திரமாக பாதுகாத்துகொள்ளுங்கள். நாளை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தை உங்கள் சடலத்திற்கு கூட தராமல் போகலாம்.
அடிமைகளை விரட்டுகள். காவிகள் தானாக திரும்பி செல்லும்….
வாழ்க திராவிடம்.