படம் ரொம்ப ஸ்லோவா போகுதா ? இல்லைங்க.
அஜீத் கேவலமா நடிச்சிருக்காரா ? இல்லைங்க.
ரொம்ப அதிகமா உழைச்சிருக்காரு.
பாட்டு நல்லா இல்லையா ? சூப்பர் சொல்ல முடியாது. ஒகே ரகம் தான்.
வேறு என்ன தான் பிரச்சனை.
ஆரம்பக்காட்சியில் காஜல் அகர்வால் வரும் இரண்டு காட்சியை தவிர்த்து மற்ற எல்லாக் காட்சியில் யாராவது துப்பாக்கியால் சுட்டு கொண்டே இருக்கிறார்கள். கண்ணு வலிக்குது.
அப்படியா ! இது அக்ஷன் படம். உளவாளி படம் என்றால் அப்படிதான் இருக்கும். ஜெம்ஸ்பாண்ட் படங்கள் இப்படி தான். டூ பீஸ்ஸில் நடிகைகள் வராதது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம்.
வேறு என்ன பிரச்சனை ?
சண்டைக் காட்சியில் லாஜிக் இல்லை.
அது எம்.ஜி.ஆர், ரஜினி படங்களில் இருந்து தொடரும் பிரச்சனை. ஒரு படத்தில் மாற்ற முடியாது… அடுத்தது என்ன ?
யோவ் ! படம் மொக்க அவ்வளவு தான். விடுவியா ??
அடப்பாவிங்களா !!! மொக்கப்படம் சொல்லுறது ஒரு நியாயமான விஷயம் கூட சொல்ல முடியல. எப்படிடா மொக்கனு சொல்லுறீங்க…? அதுவும், படம் அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது எல்லாம் ‘ரொம்ப ஓவர்’ மட்டுமல்ல. வன்மம். 100% அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
**
படத்தில் கலாய்க்க இரண்டு விஷயம் தான் என் கண்ணில் பட்டது. ஒன்று அஜீத்தின் Introduction. தனி மனிதனாக தாக்குதல் நடத்திவிட்டு பல ஆயிர அடி நீர் வீழ்ச்சியில் குதித்து தப்பிப்பது. அதேப் போல் செர்பியா மாஃபியா கூட்டத்தின் நடுவில் தனிமனிதனாக தாக்குதல் நடத்துவது.
இரண்டாவது, க்ளைமாக்ஸ் பாடல். தெலுங்கு பட பாணியில் நாயகன் – வில்லன் சண்டையின் போது நாயகி பாடுவது மிக பழைய ஸ்டைல்.
மற்ற லாஜிக் பிழைகள் எல்லாம் படத்தின் அக்ஷன் மெஜிக்கில் உங்களால் கவனிக்க முடியாது.
திரைக்கதையில் ஏதாவது பிரச்சனையா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை. அடுத்தக் காட்சி என்னவென்று உங்களால் யூகிக்க முடிந்ததா? நாயகன், வில்லன் Cat & Mouse விளையாட்டு எவ்வளவோ வந்துவிட்டது. அந்தப்படங்களில் பல விஷயங்களை நீங்கள் யூகித்திருப்பீர்கள். இப்படி Technologyயை பயன்படுத்தி இதை செய்யப்போகிறான் என்று விவேகம் பார்க்கும் போது உங்களால் யூகிக்க முடிந்ததா ?
ஒரு காட்சி முடிந்து என்ன நடந்தது என்று நாம் உணர்வதற்கு அடுத்தக் காட்சியின் வேகம் தொடங்கிவிடுகிறது. ’தம்’ அடிக்கக்கூட உங்களால் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வேகமாக செல்கிறது.
**
கபாலி போன்று ரூ.2000 டிக்கெட் விற்பனை செய்யவில்லை. சாதி அரசியலை பேசவில்லை. நடிகைகள் யாரும் அரைகுறை ஆடையில்லோ, ஐட்டம் பாடலோ இல்லை. 100% அக்ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இருந்தும் விவேகம் எதிரான இணைய கருத்துகளை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன்.
ஒன்று. சிறுத்தை சிவா மீது மற்ற இயக்குனர்கள் / உதவி இயக்குனர்களின் பொறாமை. ‘Collection King’ அஜீத்தின் கால்ஷீட் Wholesaleஆக வாங்கி வைத்திருப்பதால் அவர் மீது பொறாமை இருப்பது இயல்பே !! இவர்கள் யாரும் அஜீத்தின் உழைப்பை கூறவில்லை. சிறுத்தை சிவாவை விட்டு வாருங்கள் அஜீத் என்று அட்வைஸ் தான் கொடுக்கிறார்கள்.
இரண்டாவது. படம் ஒரு சிலருக்கு புரியவில்லை. Hacking, Satellite, 900m Sniper, Morse code Communication, Secret Society என்று ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கதை அடுக்கிக்கொண்டே போகிறது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்குள் அடுத்த காட்சியின் வேகம் எடுத்துகொள்கிறது.
தொய்வில்லாத ஒரு திரைக்கதையை எப்படி ’மொக்கை’ என்று உங்களால் சொல்ல முடிகிறது? அஜீத் நடித்த ஆழ்வார், அஞ்சநேயா போன்ற மொக்கப்படங்களை பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் நடித்த பல கமர்ஷியல் படங்களை ரசித்திருக்கிறேன். பில்லா – 2 தவிர்த்து வேறு எந்த அஜீத் படத்தை குறித்தும் நான் எழுதியதில்லை. தேவை ஏற்பட்டதுமில்லை. இணைய வன்மத்திற்காக இந்தக்கட்டுரை எழுதுகிறேன்.
விவேக் ஒப்ராய், காஜல் அகர்வாஜ், அக்ஷரா போன்றவர்கள் நடித்திருப்பது மூலம் அஜீத் தனக்கான ஹிந்திப்பட மார்க்கெட் உருவாக்கி இருக்கிறார். அதற்காக பல காட்சிகள் உருவாக்கியிருப்பது புரிகிறது. இதுவும் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். இது அஜீத்தின் பிழையல்ல... அடுத்தக்கட்ட முயற்சி செய்தாமல் வேடிக்கை பார்ப்பவர்களின் பிழை.
’விவேகம்’ தமிழில் வந்த ஆங்கில அக்ஷன் படம். உங்கள் வன்மத்தை பலியாகும் படமல்ல.
1 comment:
Well said.. the real fantastic review ..
Post a Comment