வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 2, 2016

1983 ( Malayalam - 2014)

Pelé: Birth of a Legend படம் பார்க்கும் போது என் நினைவுக்கு வந்தது நிவின் பவுலி நடித்த 1983 படம். தந்தையின் கனவை மகன் சுமக்கும் அதே கதை களன். ஆனால், Pele உண்மை கதை. 1983 பல தந்தையினர்களின் கதை. 

இந்தியா 1983வில் உலகக் கோப்பையில் தொடங்கியது அனைத்திந்தியர்களின் கிரிக்கெட் சாபம். ஒவ்வொரு இளைஞர்களின் கையில் கிரிக்கெட் மட்டை. தேசிய விளையாட்டான ஹாக்கியை பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் மதமாக மாறிவிட்டது கிரிக்கெட். 



நிவின் கிரிக்கெட் ஆர்வத்தால் தந்தையின் இன்ஜினியரிங் கலைகிறது. காதலியை தொலைக்கிறான். வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனை வந்தாலும், கிரிக்கெட் அவனை மறக்கடிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் தந்தையின் மோட்டார் ரீ-பேர் வேலையை ஏற்க வேண்டியதாக இருக்கிறது. சச்சின் என்றால் யார் என்று தெரியாதப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு மகன் பிறக்கிறான். 

தொலைந்த தனது கனவை மகன் வடிவில் நிறைவேற்றி கொள்கிறான். தந்தையின் கனவு மகனுக்கு லட்சியமாக மாறுகிறது. 

தந்தை கனவை தீணிப்பது வேறு. கனவை கொடுப்பது வேறு. இந்தப் படம் இரண்டாவது வகை. 

1983 படத்தில் ஒரு தந்தை தனது கனவை மகனிடம் மிக அழகாக கொடுக்கிறார். மகனுக்குன் அந்த கனவு பிடித்திருக்கிறது. மகன் களத்தில் விளையாடும் போது அவனையே பார்க்கிறான். 

இந்தப் படத்தை மகனின் லட்சியத்தை ஆதரிக்கும் தந்தையின் படமாக பார்ப்பதைவிட, மகன் மூலம் தன்னை பார்க்கும் ஒரு தந்தையின் படமாக பார்க்க வேண்டும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails