கண்ணதாசனுக்கு அதிகம் கவலை தந்த படம். அவர் தயாரித்த முந்தையப் படங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் நஷ்டம் கொடுக்கவில்லை. ஆனால், இந்தப்படத்தில் சந்திரபாபு ஒத்துழைப்பு இல்லாததால் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை.
படப்பிடிப்பு இடையில் சந்திரபாபு பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்டார். அந்தக் காலக்கட்டத்தில், சிவாஜி வாங்கிய சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை சந்திரபாபுவுக்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது என்று கண்ணதாசன் தனது சுயசரிதையில் புலம்பியிருப்பார். வேறு பல தடைகளும் இந்த படத்திற்கு இருந்தது என்பது தனிக்கதை.
படம் மிகப் பெரிய தோல்வி. இருந்தாலும், கண்ணதாசன் வரிகளில் சந்திரபாபுவின் குரல் வரும் பாடல்கள் நம்மை எதோ செய்யும்.
சில வரிகள் நமது ஆறுதலாக இருக்கும், இன்னும் சில வரிகள் நம்மையறியாமல் கண்ணீர் சிந்த வைக்கும்.
குறிப்பாக, “பிறக்கும் போதும் அழுகின்றாய்” என்ற பாடலில்...
”இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.”
நமது சோகத்தை மறு பரிசீலனை செய்ய வைக்கும் வரிகள்.
ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றிருந்தால், இரண்டு கலைஞர்கள் மனது ஆறுதலான பாடல்களை கொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள்.
”கவலை இல்லாத மனிதன்” இரண்டு கலைஞர்களுக்கு மன உலைச்சல் கொடுத்தாலும், ரசிகன் மனதுக்கு ஆறுதலாக பாடல்களை கொடுத்திருக்கிறது
பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல்
கவலையில்லாத மனிதன்
No comments:
Post a Comment