நேரு நேதாஜியின் மரணத்தை நம்புகிறார் என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் இந்தியா நாட்டின் பிரதமர். அவர் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்புகிறார் என்றால் ‘நேதாஜி இறந்ததை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், ”நேருவின் கருத்தை இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா” என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப்பாய் படேலிடம் கேள்விகள் கேட்டப்பட்டது.
”போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இந்திய அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது ?” என்று கேட்டனர்.
”போஸ் பற்றி கிடைக்கும் ஆதாரங்கள் பல வித சந்தேகத்தை எழுப்புவதால், அவரைக் குறித்து எந்த விதக் கருத்து கூற முடியாத நிலைமையில் இந்திய அரசு இருக்கிறது. ” என்றார்.
“அவரைப் பற்றி ஏதாவது விசாரணை நடத்தப்படுமா” என்று கேட்டனர்.
“இல்லை” என்றார்.
(இன்றைய பா.ஜ.கவில் ஒருவர் கருத்துக் கூறி சர்ச்சையை கிளப்பினால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று சொல்வது போல் அன்றைய பட்டேலில் பேட்டி இருந்தது.)
*
காந்திஜி, நேரு இருவரும் போஸின் மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவருக்காக வெள்ளையரை எதிர்த்து யுத்தமிட்ட ஐ.என்.ஏ வீரர்கள் இதை நம்பவில்லை.
'அவர் உயிருடன் இருக்கிறார்’ என்றே நம்பினர். அவர் மீண்டும் வருவார். எங்கள் போராட்டத்திற்கு அடுத்த திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்று கூறினர்.
ஒவ்வொரு நாளிதழும் நேதாஜி மரணத்தைப் பற்றி ஒவ்வொரு விதமாக வெளியிட்டது.
“நேதாஜி மரணச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை. இதோ அந்த விபத்தில் தப்பிய ஜப்பானிய வீரரின் பேட்டி என்று United Press of India செய்தியை வெளியிட்டனர்.
”நேதாஜிவி உடலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி தாய்பே என்ற பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்று சென் பீ ஷா என்பவர் சீனாவில் இருந்து வரும் Central New Agency என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். சென் பீ ஷா ஒரு மருத்துவ செவிலியர்.
நேதாஜி மரணத்தை பத்திரிக்கையை உறுதி செய்துக் கொண்டு வெளியிட Hindustan Times story பத்திரிக்கை ’’Netaji is Not dead என்ற தலைப்பில் நேதாஜி சென்ற விமானம் வெடிக்கவில்லை. அதே விமானம் திட்டப்படி ஹாங்காங் வந்திறங்கியது. விமானம் வெடித்ததற்கான எந்த ஆதாரம் இல்லை என்று கூறியது.
*
போஸ் சென்ற விமானத்தில் அவருடன் சென்றவர் கர்னல் ஹபிபூர் ரஹ்மான். விமான விபத்து நடந்ததாக சொல்லப்படும் பயணத்தில் கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் காயம் ஏற்ப்பட்டிருக்கிறது. அவருடன் பயணம் செய்ததால் இவருடைய சாட்சியம் மிகவும் முக்கியம்.
“போஸ் இறந்தது உண்மை தான். அந்த விமான விபத்தில் நான் சில காயங்களோடு தப்பித்தேன். பலத்தக் காயங்களோடு போஸ்யை மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு தான் அவர் உயிர் பிரிந்தது.” என்று கூறினார். ( இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில், கர்னல் ஹபிபூர் ரஹ்மான் பாகிஸ்தான் குடியேறினார்.)
ஆனால், அவரின் சக ஐ.என்.ஏ வீரர்களான தர், சந்திரா குமார் போன்றவர்கள் போஸ் கர்னல் ஹபிபூர் ரஹ்மானை அப்படி பொய்ச் சொல்லச் சொல்லியிருப்பார் என்று கூறினர். அப்போது தான் போஸ்ஸால் சுதந்திரமாக செயல்ப்பட முடியும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.
**
போஸ் நிஜமாகவே தப்பித்திருந்தால் ஜப்பானின் உதவியில்லாமல் நடந்திருக்காது. பல ஆயிரம் கதைகள் சொன்னாலும், போஸின் போர் நடவடிக்கை, திட்டம் அனைத்தும் ஜப்பானுக்கு தெரிந்திருக்கும். போஸின் அனைத்து யுத்த நடவடிக்கைகளுக்கு ஆயுதம் வழங்குகிறோம் என்று ஜப்பான் உறுதி அளித்திருந்தது.
ஆதலால், போஸ் தன் திட்டத்தை ஜப்பானுக்கு சொல்லாமல் இருந்திருக்க மாட்டார். ஆனால், இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஜப்பான் தனது யுத்த ஆவணங்களை அனைத்தும் அழித்திருக்கிறது. செம்படைகளிடம் இருந்து யுத்தக் குற்றவாளி பட்டியலில் தங்கள் இராணுவ தளபதிகளையும், கூட்டணியில் இருப்பவர்களையும் காப்பாற்ற இப்படி செய்ததாக கருதப்படுகிறது.
ஒரு வேளை தப்பித்தது உண்மையென்றால், போஸ் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அழித்திருப்பார்கள் என்ற நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு வேளை போஸ் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் அதை ஆய்வு செய்து வெளியிட ஜப்பானிடம் கொரிக்கை வைப்பது இந்தியாவின் கடமையாகும்.
இந்தியாவிடம் இருக்கும் ஆவணங்களே முழுமையாக வெளியிடாதப் போது மற்ற நாடுகளுடன் கொரிக்கை வைக்கமாட்டார்கள் என்பது நிதர்சண உண்மை.
**
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தைப் போல நேதாஜி இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை கூறினர். ஆளுக்கு ஒரு கதை, ஆளுக்கு ஒரு ஆதாரத்தை கூறினர். எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்த்து கூற முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அதே சமயம் எதையும் நிராகரிக்க முடியவில்லை.
போஸ் இறந்தாரா ? இல்லையா ? மாறு வேடத்தில் வாழ்ந்தாரா ? பல யூகங்கள், கதைகள், கருத்துக்கள் என்று உலவிக் கொண்டு இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது.
எல்லாவற்றிருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
ஒரே வழி ! போஸ் மரணத்தை குறித்து விசாரிக்க வேண்டும் !!
கட்டுரைக்கு உதவியது :