வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 8, 2010

சவால் சிறுகதை : டைமண்ட்

நெற்றில் இரத்தம் சொட்ட சொட்ட இருந்தாலும் காமினி அழகாக இருந்தாள். அவளை காப்பாற்ற மருத்துவமனையில் வேலை செய்பவர்களை உதவிக்கு அழைத்தான் சிவா.

ஒருவன் ஸ்டெச்சர் கொண்டு வர, சிவா காமினியை படுக்க வைத்தான்.

"காமினி...! உனக்கு ஒண்ணுமாகாது. நா உன்ன எப்படியும் காப்பாத்துவேன்" என்று கத்தியப்படி அவளுடன் சென்றான் சிவா.

ஸ்டெச்சர் ஐ.சி.யூ வந்ததும் டாக்டர் சிவாவை நிறுத்தினார்.

"நீங்க உள்ள வரக் கூடாது "

"டாக்டர் ! என் ஓய்ப்ப எப்படியாவது காப்பாத்துங்க...?"

"டோன்ட் வொரி.... நாங்க பாத்துக்குறோம் " என்று டாக்டர் ஆறுதல் கூறி அவளை ஐ.சி.யூ அறைக்கு அழைத்து சென்றனர்.

பதற்றத்துடன் சிவா வெளியே நிற்க, டாக்டரும், நர்ஸூம் காமினிக்கு சிகிச்சையை பார்த்தனர்.

"சிஸ்டர் ! பெஷன்ட் உடம்புல இருக்குற பிலட்ட தொடைங்க... "

" டாக்டர்.... ! பீரித்திங் விட சிரமப்படுறாங்க..."

" மாஸ்க் எடுத்து மாட்டுங்க…! அப்புறம் ஹார்ட் பீட் வயர் எடுத்து அவங்க உடம்புல பிக்ஸ் பண்ணுங்க....”

"பெரிசா காயம் இருக்குற மாதிரி தெரியல... எதுக்கு இதெல்லாம் "

"மேடம் ! இங்க நீங்க டாக்டரா ! நான் டாக்டரா.... மாசம் ஆன உங்களுக்கு சம்பளம் தரனும்ல... எப்படி தரது. இப்படி சின்ன அடி வந்தவங்கள... பெரிசா காட்டினா தான் நாலு காசு பார்க்க முடியும்."

நர்ஸ் பேசாமல் இருந்தார்.

கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. காமினி இயல்பாக முச்சு விட தொடங்கினாள்.

" ஓ.கே சிஸ்டர். பக்கத்து ரூம்ல இருக்குற மந்திரிய கவனிங்க..."

" அவருக்கு தான் ஒண்ணுமில்லையே டாக்டர்" !

" ஹார்ட் அட்டாக் சொல்லி படுத்திருக்காரு. இப்படி எதாவது கவனிச்சா தான் பத்திரிகைக்காரங்க நம்புவாங்க... கிளம்பும் போது அவரும் நம்பள நல்ல கவனிப்பாங்க...”

டாக்டர் சொன்னும் சிஸ்டர் வெளியே சென்றார். கொஞ்சம் நேரத்தில் ரவுன்ட்ஸ் செல்ல டாக்டர் வெளியே வந்தார். பதட்டமாக இருந்த சிவாவுக்கு ஆறுதல் கூறி சென்றார்.

கண்ணாடி வழியே சிவா காமினியை பார்த்தான்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

எல்லாம் சிவாவின் திட்டப்படி சரியாக செய்தாள் காமினி.

**

சிவா என்றைக்கும் எந்த விஷயத்திலும் சொதப்பியதில்லை என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு இருந்தது. கூடவே, காமினி சென்று இருக்கிறாள். எந்த கவலையும் இல்லாமல் பரந்தாமன் வெளிநாட்டு விருந்தாளிகளை கவனிப்பதில் இருந்தான்.

ஆனால், நேரமாக ஆக பரந்தாமனுக்கு பயம் பற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டைமண்ட் வரவில்லை என்றால் வெளிநாட்டு வியாபாரிகள் சென்றுவிடுவார்கள். உள்ளூர் வியாபாரிகள் கேட்கும் விலையை கொடுத்தால் பெரிதாக லாபம் இருக்காது. இதை விற்க சிரமப்பட வேண்டும். சிவாவின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது.

**வருமான வரிக்கு பயந்து மாஜி மந்திரி மாரடைப்பு என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு இல்லாமல், பல கோடி மதிப்புள்ள டைமண்ட்டை தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தார். போலீஸ் ஏமாற்றி, யாருக்கும் சந்தேக வராமல் இருக்க ஒரு பொய்யான விபத்தை ஏற்ப்பட்டுத்தி சிவா, காமினி மருத்துவமனையில் நுழைந்தனர்.

யார் கண்ணிலும் படாமல் இருக்க அந்த மாஜி மந்திரி டைமண்ட்டை பாத்ரூமில் வைத்திருப்பதாக அவனின் காரியதர்சி பரந்தாமன் கூட்டத்திற்கு உளவு சொல்லியிருப்பதை வைத்து அதை கொள்ளையடிக்க சிவா திட்டம் போட்டு மருத்துவமனைக்கு வந்திருக்கிறான். கிடைக்கும் லாபத்தில் 20% அந்த காரியதர்சிக்கு தர வேண்டும்.

ஐ.சி.யூவின் ஜன்னலில் வெளியே இருந்து மந்திரி ரூம்மின் பாத்ரூம் ஜன்னலுக்கு செல்ல முடியும். சிஸ்டர் மந்திரியை மருத்துவம் பார்க்கும் சமயத்தில் பாத்ரூம்மில் இருக்கும் டைமண்ட்டை எடுத்துவிட வேண்டும்.

இரண்டே நிமிடத்தில் மந்திரி பாத்ரூம் கண்ணாடியை அகற்றி பாத்ரூம்க்குள் நுழைந்தாள்.

அவர்களுக்கு உளவு சொன்னவர் ப்ளஷ் டாங்க்கில் வைத்திருப்பதை சொன்னதால், காமினிக்கு அதை எடுக்க அதிக நேரம் பிடிக்கவில்லை.

சிஸ்டர் மந்திரி சிகிச்சை பார்த்து வெளியே செல்லவும் , காமினி டைமண்டுடன் பாத்ரூம்மில் இருந்து குதிக்கவும் சரியாக இருந்தது.

**
" பரந்தாமன் ! எனக்கு முக்கியமான வேலை இருக்கு..." என்று சொல்லி விருந்தில் இருந்து முக்கிய வாடிக்கையாளர் ஒருவர் செல்ல இருந்தார்.

" இருங்க...! இன்னும் முக்கியமான சரக்கு வரல... அத பார்த்தீங்கன வாங்காம விடமாட்டீங்க..."

" ஓ.. அப்படியா..! வெய்ட் பண்ணுறேன்" என்று சொல்லி அந்த வாடிக்கையாளர் செல்போனில் காலதாமதமாக வருவதை கூறிக் கொண்டு இருந்தார்.

சிவா, காமினி எப்படியும் டைமண்ட்டோடு வருவார்கள் என்ற நம்பிக்கையில் பரந்தாமன் தன் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் வர வழைத்து விட்டான்.

பரந்தாமனுக்கு டென்ஷன் ஏறிக் கொண்டே இருந்தது.

**
காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை தன் ஜாக்கெட்டில் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தப்படி மருத்துவமனை விட்டு வெளியே வந்தாள். நோயாளிகளில் அலறல், உறவினர்களின் கதறலுக்கு நடுவில் நோயாளி வேடத்தில் வந்து சென்ற காமினியை யாரும் கவனிக்கவில்லை.

அவர்களின் திட்டப்படி சிவா மருத்துவமனைக்கு வெளியே காரில் இருந்தான். காமினி சுற்றம் பார்த்து காருக்குள் நுழைந்தாள்.

" சிவா ! இந்த டைமண்ட் " என்று அவன் கையில் காமினி கொடுத்தாள்.

புன்னகைத்தப்படி சிவா காமினி கையில் இருக்கும் டைம்ண்டை வாங்கினான்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"டமால்" என்று காரில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது.

**
இரண்டு முக்கிய வியாபாரிகள் வெளியே செல்ல தொடங்கினர்.

இனி அந்த டைமண்டை விற்க முடியாது என்ற நம்பிக்கை இழக்கும் போது காமினி அறைக்குள் நுழைந்தாள். ஆனால், அவளுடன் சென்ற சிவாவும், மற்றவர்களும் வரவில்லை.

" காமினி ! டைமண்ட் என்ன ஆச்சு ? சிவா எங்கே ?? " என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடியது.

" டைமண்ட் எடுத்து வரும் போது சிவாவ போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க... நா மட்டும் டைமண்ட்டோட தப்பிச்சேன் " என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை ஆசையாய் வாங்கி பார்த்தான். தன்னை இன்னும் சில நிமிடங்கள் இந்த டைமண்ட் கோடிஸ்வரனாக்க போகிறது என்ற பூரிப்பில் இருந்தான்.

தீடிர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒளித்தது.

அந்த அறையை சுற்றி போலீஸ் வலைத்தனர். காமினி, பரந்தாமனோடு அவனின் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

காமினி மட்டும் தனியாக பெண் போலீஸ் அழைத்து சென்று ஐ.ஜி முன் நிறுத்தினர்.

" கமான் காமினி ! யூ டன் ஒன்ஸ் அகேன்"

" தாங்க் யூ ஸார் !"

"எவ்வளவு வருஷம எத்தன உளவாளி வச்சும் கண்டுப்புடிக்க முடியாத கொள்ள கூட்டத்த மூனு மாசத்தில கண்டு புடிச்சு கொடுத்துட்ட..."

மூன்று மாதங்களாக அவர்கள் கூட்டத்தில் நெருங்கி பழகி உளவு சொன்ன காமினி தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிவாவை சுட்ட விபரத்தை ஐ.ஜிக்கு விளக்கினாள்.

1 comment:

Madhavan Srinivasagopalan said...

காமினி நல்லவளா ? ok.. வெற்றிபெற வாழ்த்துக்கள்..

(மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)

LinkWithin

Related Posts with Thumbnails