வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, November 29, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - இரண்டாவது பாகம்

'ஹிட்லரும் நல்லவர் தான்' என்ற தலைப்பில் வலைப்பதிவு எழுதியிருந்தேன். நண்பர் ராபின் அவர்கள் நான் ஹிட்லருக்கு வக்காளத்து வாங்கும் வழக்கறிஞர் என்று நினைத்துக் கொண்டாரோ என்னோவோ தெரியவில்லை. "கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் மனப்பான்மை" என்று கூறி கண்டித்திருந்தார். அவர் கண்டித்தற்காகவே 'ஹிட்லரை' பற்றிய இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். ஹிட்லர் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளையும் நாம் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

முந்தைய பதிவு ஹிட்லரை ஆதரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ‘அமெரிக்காவை காட்டிலும் ஹிட்லர் நல்லவர்’ என்று சொல்ல வந்தேன். ஆனால், இந்த பதிவு ஹிட்லருக்கு இருந்த நல்ல எண்ணத்தை சொல்லுவதே என் நோக்கம். அதற்கு முக்கிய காரணம், ஹிட்லருக்கு தன் தாய் நாட்டின் மீது இருந்த தேசப்பற்று யாருக்கும் தங்கள் தாய் நாட்டின் மீது இருந்திருக்காது.

ஒருவன் நொய்டாவில் எத்தனை சிறுமிகள் பாலியல் கொடுமையில் கொன்று புதைத்திருக்கிறான். இங்கிலாந்தில் பதினாறு வயதில் இருக்கும் பெண்கள் எண்பது சதவீதம் பேர் கற்பத்தை கலைத்துக் கொள்கிறார்கள். சிறு வயதில் பாலியல் ரிதியாக பாதிக்கப்படும் சிறுமிகளை பாதுக்காக்க பாலிய திருமணத்தை ஆதரித்தார் ஹிட்லர். பாலிய திருமணத்தால் பாலியல் ரிதியானா எண்ணங்கள் மாறிவிடிகிறது. சிறு வயதில் இருந்து பாலியல் உணர்ச்சி வளர்வதால் வாலிபவ பருவத்தில் பெண்களை கற்பழிப்பது, சிறிமிகளை கொலை செய்வது என்று மனதில் வளர்த்துக் கொள்கிறார்கள். இது போன்ற தவறுகளை தடுக்க பாலியல் திருமணமே சரியான வழி என்பது ஹிட்லரின் கருத்து. (பாலியல் திருமணத்தை நான் ஆதரிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.)

மூன்று தலைமுறை முன்பு நம் நாட்டில் பாலியல் திருமணம் இருந்திருக்கிறது. கணவனை இழந்த சிறுமிகளை உடன் கட்டை எரிப்பதும், மொட்டை அடித்து காவி உடை அணிவிப்பதும் போன்ற கொடுமைகள் நடந்து உள்ளன. விதவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையாக அன்று இருந்துள்ளது.(இதை எடுத்துக் காட்டியதே அன்றைய "பராசக்தி" படம் தான்.) இந்த கொடுமைகளை தவிர்க்க பாலிய விவாகம் அரசால் ரத்து செய்யப் பட்டது. ஆனால், நொய்டா சிறுமிகளை பாலியல் கொடுமையில் கொன்றது, மருத்துவம் பார்க்க வந்த பெண்களை நிலப்படம் எடுத்த மருத்துவர், போலி சாமியார்கள் மன்மத லீலைகள் இது போன்ற செய்திகளை தினமும் செய்திதாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பாலியல் விவாகம் இருந்த காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. பாலியல் உணர்ச்சி கட்டுப்படுத்தும் முயற்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. இதை எல்லாம் படிக்கும் போதும், கேட்கும் போது பாலிய விவாகமே பரவாயில்லை தோன்றும் அளவிற்கு பல செய்திகள் நம் மனதை கொள்கிறது.

பாலியல் திருமணத்தை ஆதரித்த ஹிட்லரின் எண்ணம் பலருக்கு கோமாளித்தனமாக தெரிந்தாலும், பாலியல் கொடுமைகளை ஒழிக்க நினைத்த அவரது குணத்தை பார்க்க வேண்டும். ஹிட்லர் பாலியல் கொடுமைகளை ஒழிக்க பாலியல் விவாத்தை மட்டும் சொல்லவில்லை. சரியான தேக பயிற்சி, சண்டை பயிற்சி மூலம் பாலியல் உணர்ச்சிகளை குறைக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். தேக பயிற்சி மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று இன்றைய மருத்துவம் கணடறிந்த உண்மை. ஆனால், 1920 ஆம் ஆண்டுகளிலே ஹிட்லை இதை பற்றி எழிதியிருக்கிறார். இன்று மருத்துவம் சொல்லும் உண்மை, அன்றே ஹிட்லர் தெளிவுப்படுதியிருக்கிறார்.

ஹிட்லர் பாலியல் உணர்ச்சியில் தவறு செய்ய நினைத்த வாலிபர்களை தேக பயிற்சி செய்து இராணுவத்தில் சேர்வதற்கு உற்சாகமுட்டினார். இன்று எத்தனையோ இளைஞர்கள் மென்பொருளிலும், வன் பொருளிலும் வேலை செய்ய விரும்புகிறார்கள். அரசாங்கமும் அதற்கு தகுந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால், ஹிட்லர் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் தான் உற்சாகமுட்டினார். மற்ற நாடுகளை பிடிக்க இராணுவத்தை பலப் படுத்தும் சுயநலம் ஹிட்லருக்கு இருந்தாலும், இளைஞர்களை தவறான பாதையில் செல்லாமல் நாட்டுக்காக சேவை செய்ய தூண்டிய பொதுநலமும் இருந்தது. பல இளைஞர்களுக்கு இராணுவத்தில் வேலைக் கொடுத்தால் ஜெர்மனியில் வேலையில்லாத திண்டாட்டம் ஹிட்லர் காலத்தில் ஒழிந்தது. (அமெரிக்கா இன்றும் தங்கள் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாமல் தவிப்பதை நினைத்து பாருங்கள்.)

இன்று நம் நாட்டில் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ, ஹிட்லர் தன் நாட்டு இளைஞர்களை செயல் படுத்தி காட்டினார். நண்பர் கமல் சொன்னது போல் என்னதான் கொலைகாரனாக, கொடுங்கோலனாக இருந்தாலும் ஹிட்லர் காலத்தில் தான் ஜெர்மனி மிகப்பெரிய நாடாக வளர்ந்தது.

Thursday, November 20, 2008

வித்யாகிட்ட சொல்லிடாதீங்க...

வித்யாவுக்கு இன்று கடைசி நாள். எனக்கும் இன்று தான் கடைசி நாள். தினமும் அவளை பார்க்கிறேன். ஆனால், ஒரு நாள் கூட அவளிடம் நான் பேசியதில்லை. ஒரே குழுவில் தான் வேலை செய்கிறோம். இருந்தும் முகம் பார்த்து பேச எங்களுக்கு தோன்றவில்லை. ஒரு முறை ஆபிஸ் பார்ட்டியில் எல்லோரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு இருக்க, அவள் மட்டும் யாருடன் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

இது வரை அவளிடம் பேசாத நான், இப்போது பேசினால் நன்றாக இருக்குமா ? ஒரு முறை எனக்குள்ளே கேள்வி கேட்டுப்பார்த்தேன். இதில என்ன தப்பு இருக்கு ? எந்த கம்பேனி போறாங்கனு தெரிஞ்சா நமக்கும் யூஸ்சா இருக்கும். இப்படி கேள்வி கேட்பதும், அதற்கு அவனே பதில் சொல்வதும் ரகுக்கு புதிதில்லை. மெல்ல மெல்ல தயங்கி அவளிடம் பேசினான்.

"எந்த கம்பேனி போறீங்க...?" என்றான் ரகு. வித்யா விடுப்பு தாளை நிரப்பிக் கொண்டு இருந்ததில் ரகு சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"வித்யா... உங்க கிட்ட தான்..."

"ம்.. சொல்லுங்க... ரகு..."

"போற கம்பேனி ரொம்ப ஸீக்ரெட்டா..."

" அப்படியெல்லாம் இல்ல பார்ம் பார்த்துக்கிட்டிருந்தேன். என்ன கேட்டிங்க..."

அவள் சற்று மனக் குழப்பத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டேன். அதைத் தெரிந்து கொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை.

"எந்த கம்பேனி போறீங்கனு கேட்டேன்..."

"எனக்கு வேலை செய்ய பிடிக்கல.. இனிமே வீட்டுல தான் இருக்க போறேன்.."

எனக்கு அவள் பேசியது முட்டாள் தனமாக தோன்றியது. வித்யா விவாகரத்தானவள். ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சூழ்நிலையில் வேலையை விட்டு அவள் என்ன செய்வாள் என்று தெரியவில்லை. பரம்பரைச் சொத்து ஏதும் இருக்கக் கூட வாய்ப்பில்லை. தினமும் அவள் பஸ்சில் தான் ஆபிஸ்க்கு வருகிறாள். இப்படிப்பட்ட நிலைமையில் அவளுக்கு வேலை நிச்சயமாக மிக முக்கியமான ஒன்று.

" தப்பா நினைக்காதீங்க... வேற ஏதாவது விதத்துல உங்க குடும்பத்துக்கு பண வரவு இருக்கா...!"

"அப்படி எதுவும் இல்ல. இந்த கம்பேனிய விட்டு போனா போதும்னு இருக்கு..."

அவளுடைய பதில் எனக்கு மேலும் வியப்பை தந்தது. எங்கள் குழுவில் வேலை சுமைகள் அவ்வளவு பெரிதாக கூட இல்லை.

" உங்களுக்கு இந்த கம்பேனி பிடிக்கலையா? வேல ரொம்ப ஜாஸ்தி கொடுக்குறாங்களா.." என்றேன்.

" வேலை புடிக்கல ரிசைன் பண்ணுறேன்... உனக்கு என்ன வந்தது. சும்மா கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுற.." - இப்படி வித்யாவிடம் இருந்து பதில் வருமோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. பல நாள் பழகிய நண்பனிடம் தன் சோகத்தைக் கூறுவது போல் கூறினாள்.

"என் ஹஸ்பன்ட் இந்த ஆபிஸ்ல தான் இருக்காரு..." என்றாள்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு வேளை ஆபிஸின் பெரிய தலைகளில் ஒருவராக இருப்பாரோ என்ற சந்தேகம்.

" யார் அவரு...?"

" இப்ப... பாம்பேல இருந்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்திருக்காறே... பிராஜக்ட் மேனேஜர் ராஜூ.. அவரு தான்.."

அவருக்கும் எங்கள் வேலை விஷயத்தில் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி இருக்கும் போது வித்யா இந்த நிறுவனத்தில் தைரியமாக வேலை செய்யலாம். ஆனால், அவள் மனம் பட்ட பாடை என்னிடம் கொட்டித் தீர்த்தாள்.

" தினமும் அவர நான் பார்க்கனும்னா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவர பார்க்கவே கூடாதுன்னு இருந்தேன். இப்ப மறுபடியும் அவர பார்க்க எனக்கு இஷ்டமில்ல. அதான் இந்த முடிவு..."

" மேடம்... நான் சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க... இவ்வளவு வருஷமா பழகின ஒருத்தர உங்களால எதிர் கொள்ள முடியலைனா... எப்படி வாழ்நாள் முழுக்க பல பேர சந்திக்கப் போறீங்க.."

வித்யா ரகுவின் முகத்தை உற்று பார்த்தாள்.

"வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கும். தனியா போராடனும் முடிவெடுத்திட்டு இப்படி கோழை மாதிரி ஒடிப்போகனும் நினைக்குறீங்களே ! நீங்க இப்படி இருந்தா நாளைக்கு உங்க பொண்ணும் இதே மாதிரி தானே வளர்வா..."

" அட்வைஸ் பண்ணுறது ரொம்ப ஈசியாயிருக்கும்.. அவுங்களுக்கு கஷ்டம் வந்தா தான் தெரியும்..."

" மேடம்... நான் இப்போ போற கம்பேனியில எனக்கு வேல கிடைச்ச காரணமே என் மனைவி தான்.... முன்னால் மனைவி..."

ரகு சொன்னதை கேட்டு வித்யா அதிர்ந்து நின்றாள்.

" என் மனைவிக்கும், அவ ஆபிஸ்ல வேல செய்றவனுக்கும் கொஞ்ச நாளா தொடர்பு இருந்தது. அதுக்கு அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்னு அவ என் கிட்ட சொன்னா. முதல்ல கேட்கும் போது கஷ்டமா இருந்தது. எனக்குத் தெரியாம அவங்க தப்பு பண்ணுறதுக்கு தெரிஞ்சே செய்யட்டும்னு நான் விலகிட்டேன்..."

" விலகிட்டேன்னா..."

" நாங்க இரண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டோம். அவங்க இரண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணிவெச்சேன்."

என் கதையைக் கேட்டவுடன் வித்யாவின் கண்கள் நீர் தழும்பின. அவன் சோகத்தை சொல்லும் போது கூட மன தைரியம் இழக்காமல் பேசினான். அவன் பேச்சு வித்யாவுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்தது.

" எப்படி... மறுபடியும் உஙளுக்கு துரோகம் பண்ணியவர்களிடம் பேச முடியுது..."

" மேடம் லைப்ல எல்லாமே ஈசியா எடுத்துக்கனும். முடியலையா ஈசியா எடுத்துக்க முயற்சி பண்ணனும். இல்ல வாழ்க்கையே சுமையா போய்டும். என் சி.விய அவள்தான் ரெஃப்பர் பண்ணி எனக்கு வேலை வாங்கி கொடுத்தா... தினமும் நாங்க இரண்டு பேரும் பார்க்க வேண்டியதா இருக்கும். முடிஞ்ச விஷயத்துக்காகக் கவலைப்படாம நடக்கப் போற விஷயத்தைப் பத்தி யோசிங்க..."

" உங்க கஷ்ட கேட்கும் போது என்னுடைய கஷ்டம் எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைக்கிறேன்."

" நம்மல விட கஷ்டப்படுறவங்க பல பேரு உலகத்துல இருக்காங்க... அத நினைச்சா போதும் நம்ம கஷ்டம் மறந்திடும் "

"த்தாங்க்ஸ் ரகு... என்னுடைய சி.வி. உங்களுக்கு ஃபார்வட் பண்ணுறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி ரெஃப்பர் பண்ணச் சொல்லுறீங்களா..."

" கண்டிப்பா! இந்தாங்க என் மெயில் ஐ.டி.." என்று என் மின்னஞ்சல் முகவரியை வித்யாவுக்கு கொடுத்தேன்.

வேலை செய்ய வேண்டாமென்று இருந்த வித்யாவின் எண்ணத்தைத் என் சோகக்கதையால் அவள் மனதை மாற்றிய என்னைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...? கல்யாணத்தில ஏமாந்தவன்னுதானே...

கடைசியா ஒரு விஷயம் உங்க கிட்ட மட்டும் சொல்றேன்... நான் ஒரு கட்டப் பிரம்மச்சாரிங்க... இதை மட்டும் வித்யாகிட்ட சொல்லிடாதீங்க...


நன்றி : முத்துகமலம்.காம்
http://www.muthukamalam.com/muthukamalam_kathai21.htm

Thursday, November 13, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன்

காதுவரை மீசை வளர்த்தால் வீரம் என்று நினைத்தவர்கள் மத்தியில் தன் அரை இன்ச் மீசையில் உலகை அளந்தவன். ‘ஹிட்லர்’ என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது சர்வாதிகாரமும், அவன் செய்த கொலைகளும் தான். அடிப்படையில் நல்ல ஒவியர், ஜெர்மன் நாட்டின் படை வீரன் என்று தன் வாழ்க்கையை தொடங்கினான். ஒரு உலகத்தை வியக்கும் அளவிற்கு மட்டுமல்லாமல், அச்சுருத்தும் அளவிற்கு வளர்ந்தான். இன்றும் ஹிட்லரை கெட்டவனாகத் தான் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.



சரித்திர பக்கங்கள் வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுகிறது. தோல்வி அடைந்தவர்களை மிகவும் கெட்டவனாகவும் அல்லது கோமாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். தோல்வியாளர்களின் சரித்திரத்தை யாரும் படிக்க விரும்புவதில்லை. வெற்றியாளர்கள் மீது எல்லோரும் கவனம் செலுத்துகிறார்கள். கிரிக்கெட் எடுத்துக் கொண்டாலும் ஆஸ்திரலேய அணி வெற்றி பெற்றால் அவர்கள் வெற்றி கையாண்ட விதத்தை சொல்கிறார்கள். தோல்வி அடைந்தால் அவர்கள் செய்த தவறுகளை சொல்கிறார்கள். பங்காதேஷ், கென்யா போன்ற வலுயில்லாத அணிகளை பற்றி யாரும் விமர்சனம் செய்வதில்லை. இவர்கள் வலுவான அணியிடம் வெற்றி பெற்றால், குறுட்டு அதிஷ்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

என்னை பொருத்த வரையில் ஹிட்லரும் ஒரு வெற்றியாளர் தான். ஒரு விடுதியின் காப்பாளர் விடுதியை கண்டிப்பாக வைத்துக் கொண்டால் அந்த காப்பாளருக்கு ஹிட்லர் என்ற புனைப் பெயர் வைப்பார்கள். ஆசிரியர் கண்டிப்பாக இருந்தாலும் அவர்களும் இதே பெயர் தான்.
வீட்டில் தந்தை சொல்வது தான் செய்ய வேண்டும். யாரும் அவரை எதிர்த்து பேசக் கூடாது என்று இருந்தால், அந்த வீட்டில் ‘ஹிட்லர் ராஜ்ஜியம்’ என்றே கேலி செய்கிறோம்.ஹிட்லரை நாம் மறைமுகமாக அங்கிகரித்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கேலிப் பேசுபவர்கள், இன்னும் ஒவ்வொரு நாட்டு ராணுவத்திலும் ஹிட்லர் முறையை தான் பயன் படுத்துகிறார்கள். ஹிட்லரின் சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றாலும், ராணுவத்தில் சர்வாதிகார ஆட்சியை தான் பின்பற்றுகிறார்கள். போர் நடக்கும் போது வீரனின் தாய் அல்லது மனைவி இறந்தாலும் அவன் போருக்கு தான் செல்ல வேண்டும். இந்த முறைகள் எல்லாம் ‘ஹிட்லர்’ கையாண்டது.

எந்த வேலையாகயிருந்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் மிக எளிதில் வேலையை விட்டு வெளியே வந்துவிடலாம். இராணுவத்தில் மட்டும் வேலையை விட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இராணுவத்தில் வேலையாக கருவதில்லை, நாட்டின் சேவையாகவே கருதுகிறார்கள். ஒருவர் குடும்பத்துகாக போரை விட்டு சென்றால், மற்றவர்களும் தங்கள் குடும்பத்தை நினைக்க தொடங்கி விடுவார்கள். இதனால் போரில் கிடைக்கும் வெற்றியை பாதிக்கும்.

போர் சமயத்தில் ஒருவனின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து ஊருக்கு அனுப்பினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி ஊருக்கு செல்ல பார்ப்பார்கள். அதனால், இராணுவத்துறையில் மட்டும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நாட்டின் வெற்றியை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். இராணுவ வீரர்கள் சற்றும் மனதளராமல் இருப்பதற்காக சர்வாதிகார முறையை கையாள்கிறார்கள். சர்வாதிகார முறை இருப்பதால் எல்லா வீரர்களும் தங்கள் மேலாளர்களின் கட்டளை கீழ்பணிவது தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். இராணுவ விதிப்படி மேலாளர் கட்டளை கீழ் பணியாதவர்கள் தண்டிக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனநாயகத்தையும், மனித உணர்வுகளையும் பற்றி பேசிக் கொண்டு இருந்தால் கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இராணுவத்துறையில் மட்டும் ஹிட்லர் கையாண்ட சர்வாதிகார முறையே சரியானது.
இராணுவத்துறை தவிர வேறு எதிலும் சர்வாதிகார ஆட்சி செய்வது தவறானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. ஹிட்லர் தன் சர்வாதிகார ஆட்சியை இராணுவத்தில் மட்டுமே செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் மக்கள் மீது செலுத்தியதால் சரித்திர பக்கங்களில் அவரை கொடுங்கோளனாக பார்க்கிறார்கள்.

ஹிட்லர் தன் ஆட்சியில் பல நல்லதுகளை செய்துயிருக்கிறார். அவைகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகள் பின் பற்ற வேண்டிய ஒன்றாகும். ஒரு வேளை தன் ஆட்சி காலத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் ஹிட்லர் இறந்திருந்தால், உலகில் பெரும் தலைவர்களின் ஹிட்லர் பெருமையாக போற்ற பட்டிருப்பார். ஆனால், அதிகார பலம் தலைக்கு எறியதில் தலைக்கால் தெரியாமல் ஆடியதால் அவர் செய்த நன்மை யார் கண்ணுக்கும் தென்படுவதில்லை.

ஒசமா பில்லெடனுக்காக அமெரிக்க தாலிபன் நாட்டை எதிர்க்கும் விதமாக போர் செய்தது. இரண்டாம் உலகப்போரை ஹிரோஷிமா, நாகசாக்கியை அனுகுண்டு மூலம் அழித்தது முதல் தாலிபம் நாட்டை போர் வரை அமெரிக்கா உலகத்தின் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு லட்ச யூதர்களை கொன்ற ஹிட்லர் கேட்டவன் என்றால், ஜப்பானின் இரண்டு நகரத்தை அழித்த அமெரிக்காவை என்னவென்று சொல்வது ? தனி ஒரு மனிதனை பிடிக்க முடியாமல், அந்த நாட்டின் அப்பாவி மக்களை கொன்ற அமெரிக்காவின் போரில் எதாவது நியாயம் உண்டா ? மற்ற நாடுகளும் அமெரிக்காவிற்கு பயந்தே ஆதரிக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி அமெரிக்கா ஒன்றும் அறியாத மக்களை தான் கொன்று குவிக்கிறது. தாலிபன் வீரர்களை நிர்வானப்படுத்தி அமெரிக்க வீரர்கள் செய்ய செயலை செய்தித்தாளில் பார்த்திருக்கிறோம். இப்படி கொடுமை செய்பவர்கள், ஐ.நா.சபையில் உலக அமைதியை பற்றி இவர்கள் பேசுவதை மற்ற நாடுகள் கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் மன வேதனையில் அமெரிக்காவைக் காட்டிலும் ஹிட்லரே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது.

தாலிபன் நாட்டு உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நாடு என்று உலக அரசியலில் பேசும் அளவிற்கு செய்தது அமெரிக்கா. ஒரு வேளை அமெரிக்கா நிலைமை சரியும் போது ஹிட்லரை பேசுவது போல் அமெரிக்காவையும் பேசுவார்கள் போல் தெரிகிறது.

ஹிட்லரின் இறந்த பிறகே அவன் ஆட்சியை பலர் விமர்சனம் செய்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது அவரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியமில்லை. அமெரிக்காவில் யார் அதிபராக வந்தால் அவர்கள் குணத்தின் நிறம் மாற போவதில்லை. அவர்களை காட்டிலும் 'ஹிட்லர்' நல்லவர் தான்.

Tuesday, November 4, 2008

உரையாடலில் ஒளிந்திருக்கும் ஆபத்து

நுணலும் தன் வாயால் கேடும் என்பார்கள்.

ஒரு சிலர் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களை கேட்டவர்களாக பிரதிபலிப்பது அவர்களுடைய நாவு தான். எங்கு எதை பேச வேண்டும் என்பது தெரியாது. பேச வேண்டடுமே என்பதற்காக பேசிவிட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த இசைப்பாளர் மற்ற இசைப்பாளர்ப் போல் இல்லை. மிக குறைவான காலத்தில் நல்ல இசைகளை அமைத்துக் கொடுப்பார் என்றார். இவர் புகழ்வது போல் மறைமுகமாக யாரோ இசையாமப்பாளரை தாக்குகிறார் என்று புரிகிறது. அந்த இயக்குநர் இசையாமப்பாளர் பெயரை கூறிப்பிட்டு பேசியிருந்தால் அந்த பேச்சே அவருக்கு எதிரியாய் போயிருக்கும்.

அந்த இயக்குநருக்கு மேடையல் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது. சமிபத்தில் ஒரு நடிகை திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியே அவர்களுக்கு எதிரியாய் போனது. அவர்களுக்காக கோயில் கட்டியவர்கள் கூட அவர்களை எதிர்த்து நின்றார்கள்.

செய்கையால் வரும் பிரச்சனையை விட நாவால் வரும் பிரச்சனை அதிகம். நாவால் வரும் விளைவுகளும் அதிகம். அதனால் தான் வள்ளுவர் கூட எதை அடக்க விட்டாலும் நாவை அடக்க சொன்னார்.

தெனாலிராமனுக்கு 'விகடகவி' என பெயர் எடுத்துக் கொடுத்ததும் அவருடைய நகைச்சுவை பேச்சு தான்.

அண்ணாதுரைக்கு 'பேரறிஞர்' என பெயர் கொடுத்ததும் அவருடைய திறமையான பேச்சு தான்.

எந்த சேவை செய்யாமல் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் இருந்து ஓட்டுகள் வாங்கி தருவதும் அவர்களுடைய பேச்சு தான்.

வாயுள்ள புள்ள பொலச்சிக்கும் என்பார்கள். நாம் திறமையா, அளவோடு பேசினால் அதை விட மிக பெரிய பலம் இல்லவே இல்லை.

இன்று கணிப்பொறி துறையில் திறமையில்லாமல் ஆங்கிலம் பேச தெரிந்துக் கொண்டு தன் பிழப்பை நடத்துபவர்கள் பல பேர் உண்டு. திறமையிருந்தும் ஆங்கிலம் பேச தெரியாமல் பல வாய்ப்புகளை தவர விட்டவர்களும் உண்டு.

எதை எப்படி பேச வேண்டும் என்ற வரம்பு முறைகளை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பெண்களிடம் சென்று வயதை கேட்பதும், ஆண்களிடம் சென்று சம்பளத்தை கேட்பதும், சிறுவர்களிடம் சென்று மதிப்பெண்கள் கேட்பதும் இப்படி கேட்டவருக்கு எப்படி இருக்குமோ என்று தெரியாது. ஆனால் கேட்டபவருக்கு தர்ம சங்கடமாக இருக்கும். அதுப் போன்ற கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரியாமே பலர் கேட்கிறார்கள்.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரிந்தால் அந்த கேள்வியை கேட்காமலே தவிர்ப்பது நல்லது. அவர்கள் போய்யான பதிலளிக்கும் போது மனதில் நம்மை எத்தனை முறை வெடித்துக் கொண்டாரோ என்பது யாருக்கு தெரியும்.

ஒரு சிலர் திருமணத்துக்கு முன்பு என்ன நடந்ததோ அப்படியே மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சொல்பவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்களே தவிர நிம்மதியாக வாழ்வது அறிது தான். மனைவியையும், அன்னைக்கு வரும் சண்டைகளை சமாததான படுத்த பல பொய்கள் சொல்லியாக வேண்டிய நிலையில் இருப்பார்கள். கண்வர்கள் உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனைவிமார்கள் கூட , கணவர்கள் சொல்லும் உண்மைகளை நம்புவதில்லை.

இங்கு அமைதியாய் இருக்கும் மூட்டாள்கள் அறிவாளியாக காணப்படுகிறார்கள். அதிகமாய் பேசும் அறிவாளியே மூட்டாளாக தெரிக்கின்றான்.

காதலில் எடுத்துக் கொண்டால் கூட அதிகமாய் பேசும் ஆண்களை விட அமைதியாய் இருக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். காரணம், அதிகமாய் பேசும் ஆண்கள் தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்வார்கள். ஆனால், அமைதியாய் இருப்பவர்கள் அப்படியில்லை. விளம்பரங்கள் வியாபாரத்திற்கு உதவலாம் காதலுக்கு உதவாது.

நம் நாட்டில் வாய் சொல்லில் வீரர்கள் பல பேர் உண்டு. பேசிய சாதித்து விடலாம் என்று பல பேர்கள் நினைப்பதால் கட்டப்படாத மேம்பாலம் பாதியிலே பல காரியங்கள் நிற்கிறது. அளவாய் பேச வேண்டும். அதற்குறிய செயல்கள் வேண்டும். இந்த இரண்டுமே என்றும் சிந்தனையில் இருக்க வேண்டும்.

(கல்வெட்டு பேசுகிறது, அக்டோம்பர்,2006 )

Monday, November 3, 2008

மனம் (+) மனம் (-) மனம் (!)

“அறிவுக்கும் மனசுக்கும்
சிக்கல் எற்படும் போது
நீ மனசு சொல்வதை மட்டும் கேள்
அறிவு சொல்வதை கேட்காதே !
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கும் உன்னை மட்டும் தான் தெரியும் !”
- விவேகானந்தர்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Mind is fater than wind”. காற்றை விட அதி வேகமாய் மனம் செல்லும். சென்னையில் சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால், மனிதன் மனம் சென்னையில் இருந்துக் கொண்டு அமெரிக்காவுக்கு செல்வதைப் பற்றி யோசிப்பான்.

நூறு கிராம் தான் இதயம். ஆனால் அதில் டன் கணக்கில் ஆசைகள். பதவி, பெண், பொருள், பொன், புகழ், பணம், நிலம் இதிலேயே தன் மனதில் கவனம் செலுத்தி வருகிறான்.இவைகளை அடைவதற்காகவே பல முயற்சிகள் செய்து வருகிறான்.

விழித்திருக்கும் போது இதயத்துடிப்பு அதிகமாய் துடிக்கும். உறங்கும் போது அதை விட சற்றுக் குறைவாகவே இதயதுடிப்பு துடிக்கும். ஆனால், மனதில் இருக்கும் ஆசைகள் உறங்கும் போது கனவாய் உலாவருகிறது. விழித்த பிறகு அந்த ஆசைகள் மனதில் இரட்டிப்பாய் வளர்கிறது.

ஒரு முனிவர் பத்து வருடங்களாக தவம் செய்து தண்ணீரில் நடப்பதற்கு வரம் வாங்குகிறார்.வரம் வாங்கிய பிறகு யமுனை கரையை நடந்து சென்று நண்பனைப்பார்க்க செல்கிறார். முனிவர் நண்பனிடம் “நான் பத்து வருடங்களாக கடும் தவம் புரிந்து நீரில் நடந்து செல்ல வரம் வாங்கி வந்துள்ளேன். இப்பொதுக் கூட யமுனைக் கரையை நடந்தே கடந்து வந்தேன்” என்றார். அதற்கு அந்த நண்பர் “அவ்வளவுதானா .. இதற்கு பத்து ரூபாய் ஓடக்காரரிடம் கொடுருந்தால் அவன் யமுனைக் கரையை கடக்க உதவியிப்பான். இதற்காக பத்து வருடம் வீணாய் செலவு செய்து விட்டீரே” என்றார். அந்த முனிவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.

மற்றவர் நம்மை பாராட்டவே மனம் செயல் படுகிறது. நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலையும் செய்கிறோம். அதை யாரும் பாராட்டாத போது மனம் வாடுகிறோம்.

இளம் வயதில் உடலை வருத்திக் கொண்டு பணத்திற்காக மனம் உழைக்க சொல்லும். சற்று நரை வளர்த்த பிறகு உடல் நலத்திற்காக மனம் பணத்தை செலவு செய்ய சொல்லும். காலத்திற்கு ஏற்றதுப் போல் நம்மை அறியாமலே நம் மனது இயங்கும்.

நாம் மனதை ஆலயமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். குறைந்தது ஆலயத்தில் வெளியே கிடக்கும் செருப்பாக நம் மனம் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரி, அசோகன், சோழ நாட்டு மன்னர்கள் இவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டு பெயர் எடுத்தவர்கள். விவேகானந்தர், ராம கிருஷ்ணர், சாக்ரடீஸ் இவர்கள் எல்லாம் தங்கள் மனதையாண்டு பெயர் எடுத்தார்கள். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டை ஆட்சி செய்து பெயர் எடுப்பதை விட மனதை ஆட்சி செய்து பெயர் எடுப்பது சுலபம். ஆதலால், மனதர்களே மனதை ஆட்சி செய்யுங்கள்.

( நன்றி : 'தாய் மண்' இலக்கிய மாத இதழில் ஜூலை,2006 வெளிவந்தது )

LinkWithin

Related Posts with Thumbnails