1983 உலகக் கோப்பை வென்ற பிறகு ஒவ்வொரு உலகக் கோப்பையும் இந்தியாவுக்கு கனவு கோப்பை தான். எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் பறக்கும் ப்னிஃக்ஸ் பறவைப் போல் பல முறை கனவு தகர்ந்து மீண்டும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற ரசிகர்களின் ஆசை.
1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்களை கூவித்தார் ராகுல் ட்ராவிட். 2003ஆம் ஆண்டு இந்தியா இறுதி சுற்று வரை அழைத்து சென்ற கங்குலிக்கு லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதே உலகக் கோப்பையில் சச்சின் டென்டுல்கர் அதிக ரன்கள் கூவித்ததற்காக பல பரிசுகள் வாங்கினார். இப்படி, நெற்று வரை இந்திய அணியில் ஹீரோவாக இருந்தவர்கள்.... இன்று வெறும் ஜீரோவாக தெரிகிறார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அதிக ரன்களை கூவிப்பது இந்திய வீரராக இருப்பார். ஆனால், இந்த முறை அந்த பெருமைக் கூட இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பொருப்பற்ற தன்மையாக இருந்தாலும்.... அதை உருவாக்கி கொடுத்தவர்கள் கிரிக்கெட் ரசிகர்களும், பத்திரிக்கைகளும், விளம்பர நிறுவனங்களும் தான்.
ஒரு போட்டியில் சதம் அடித்தால் போதும். மன்னர், ராஜாதி ராஜன், சூரன், வீரன் என்று பல புகழ் மாலைகள். விளம்பரப் படங்களும், விளம்பர நிறுவனத்தின் பணங்களும் கூவிக்கின்றன. சாதிக்கும் முன்பே பல புகழ் மாலையில் அவர்களை சாதிக்க விடாமல் செய்து விடுகிறோம்.
வந்த புதிதில் அகர்கரை அடுத்த ‘கபீல் தேவ்’ என்று புழந்தார்கள். அதன் பிறகு அவர் விளையாட்டில் தோய்வு தான் காணப்பட்டது. ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட் வீழ்த்திய கும்ளேவை ‘ஜம்போ’ என்று புழந்தார்கள். அதன் பிறகு தன் பௌளிங்கில் அதிக ரன்களை தான் கொடித்தார். 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்கும் முன்பே டென்டுல்கர் உருவப்படம் பொருந்திய பெரிய தங்க நாணயம் டென்டுல்கருக்கு வழங்கப் பட்டது. அந்த ஆண்டு டென்டுல்கர் தந்தை இறந்ததால் அவர் சரியாக விளையாட முடியவில்லை. அதிகம் புகழ்ந்து நன்றாக ஆடக் கூடியவர்களை கூட பல்லத்தில் தள்ளி விட்டது ரசிகர்களும், பத்திரிக்கைகளும் தான்.
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்” என்பார்கள். இந்திய வீரர்களுக்கு புகழ் தான் விஷம். பத்திரிக்கைகளும், ரசிகர்களும் அதிகமாய் புகழ்ந்தே அவர்களை ஹீரோவாக்கினார்கள். இப்போது அவர்களை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் தகுதி உள்ளவராக இருந்தாலும் அதற்கு தகுந்தால் போல் புகழ வேண்டும்.
சமிபக் காலமாக இந்திய வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பது தான் உண்மை. ஆனால், பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று நம்பியதும், அதை பற்றி எழுதியதும் தவறு என்று இப்போழுது உணர்ந்திருப்பார்கள். அதிகமாய் புகழ்ந்தது தவறு செய்த ரசிகர்கள் அதிகமாய் அவர்களை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உருவப் படத்தை எரித்தும், இந்திய வீரர்களை தவறான வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்த ரசிகர்கள் இந்த முறை அவர்களை அவமானப் படுத்தும் விதம் மிகவும் வேதனையாக உள்ளது. தோனி வீட்டை உடைத்தும், ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை சவ ஊர்வலம் போல் தூக்கி சென்று சுடுக்காட்டில் எரிப்பதும், இணையத்தளத்தில் இந்திய வீரர்கள் பிச்சை எடுப்பதுப் போல் அமைப்பதும் என்று பல காரியங்கள் செய்கிறார்கள்.
NDTV யில் அதிக ஊழல்க் கோண்ட பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம். எப்போதாவது ஊழல் செய்த அரசியல்வாதியின் வீட்டை உடைத்திருப்பார்களா ? கிரிக்கெட் விளையாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள். ஒன்று விளையாட்டில் சம்பாதித்து இருப்பார்கள் அல்லது விளம்பரத்தில் சம்பாதித்து இருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க தான் அரசியலுக்கே வருகிறார்கள். அரசியல்வாதிகள் சம்பாதிக்கும் பணம் பெரும் பாலும் ஊழல் பணம் தான். கிரிக்கெட் வீரர்களை பேசியது போல் ஒரு நாளாவது ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பொது மக்கள் பகிரங்கமாக தாக்கி பேசியிருப்பார்களா...? நாளை இந்திய அணிக்கு ஒரு ஹீரோ கிடைப்பார்கள். ஆனால் அரசியலில்.....?
( நன்றி : தமிழ்.சிஃபி.காம் (tamil.sify.com/general/worldcup07/fullstory.php?id=14426315) மற்றும் நம் உரத்தசிந்தனை :ஏப்ரல்,2007 )