வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 17, 2012

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 3 : ஸ்விஸ் வங்கி பணத்தை மீட்ப்பு

பாகம் - 1, பாகம் -2

ஹிட்லர் இருபதாம் நூற்றாண்டின் ராஜபக்சே. இந்த உலகில் எல்லா நாடுகளில் இருந்து இவரை பற்றிய புத்தக வந்துள்ளது. யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலக போரும் நீக்கிவிட்டு ஹிட்லர் வரலாறு பார்த்தால் நிச்சயம் அவர் ஒரு வரலாற்று நாயகன். அவர் செய்த மிக பெரிய இரண்டு தவறு அவரின் சாதனையை மறைத்துவிட்டது.

உலக நாடுகளுக்கு வில்லனாக இருந்த அவர் ஜெர்மனியர்களுக்கு நாயகன் என்பதற்கு ஒரு சுவையான தகவல்.

1929ல் வால் ஸ்டிரீட் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடும் சரிவும், ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கமும், மக்கள் பலர் வேலை இழந்தனர். பணக்காரர்கள் தங்கள் பணத்தை வரியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்தனர்.

1933ல் பதவிக்கு வந்த ஹிட்லர் தனது நாட்டின் பணம் அந்நிய நாட்டில் இருப்பது அவரை கோபப்படுத்தியது. தனது வழக்கமான ஸ்டைலில் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் மரண தண்டனை என்று அறிவித்தார்.


ஒரு தனி குழு அமைத்து ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் பண முதலைகளை கண்டு பிடித்தார். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணங்களை தன் நாட்டு கொண்டு வந்து, பதுக்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார். இதில் ஜெர்மனியர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள். ஜெர்மனியர்களை விட யூதர்களே அதிகம் பணம் பதிக்கி வைத்துள்ளார்கள்.

அரசாங்கத்தை ஏமாற்றி ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை எப்படி கண்டு பிடித்தார் ?

ஒரு பெரும்புள்ளி ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார் என்று சந்தேகப்பட்டால் அவர் பெயரை சொல்லி அவர் கணக்கில் பணம் போட செல்வார்கள். அங்கு அவர் வங்கி கணக்கு இல்லை என்று சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால், இவர் இங்கு தான் கணக்கு வைத்திருக்கிறார் என்று சொன்னால் தீர்ந்த்து விஷயம்.

வாடிக்கையாளர் பெயரை சொல்லி பணத்தை போட்டு, அவர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு ஆண்டாக பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பெற்றுவிடுவார்கள். ஸ்விஸ் வங்கியில் இருக்கும் பணத்தை ஜெர்மனுக்கு கொண்டு வருவதோடு இல்லாமல், பணம் பதுக்கி வைத்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

1938க்கும் 1945 இடைப்பட்ட கால கட்டத்தில் அப்படிக் கொண்டு செல்லப்பட்ட தங்கம் சுமார் நூரு டன் என்றும், ஸ்விட்சர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பணத்தின் மதிப்பு ஆறு பில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது.

ஹிட்லரால் இனப்படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் பலர் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு இறந்த யூதர்களின் வாரிசுகளுக்கு புது வாழ்க்கை தொடங்க பணம் தேவைப்பட்டது. அவர்கள் ஸ்விஸ் வங்கியிடம் பணம் பெற நினைக்கும் போது அவர்களால் முடியவில்லை. எந்த ஆதாரம் இல்லாததால் ஸ்விஸ் வங்கி பணம் தர மறுத்துவிட்டது.

ஸ்விஸ் பணம் கிடைக்காத யூதர்கள் ‘Holocaust Victim’ என்ற அமைப்பை உருவாக்கி ஸ்விஸ் வங்கியிடம் தங்கள் மூதாதயரில் பணம் பெற முயற்சித்தனர். போதிய ஆதாரம் காட்டினால் பணம் தருவதாக கூறினார்.

கொத்துக் கொத்தாக இறந்த யூதர்களுக்கு யார் டெத் சர்ட்டிபிக்கேட் கொடுப்பது ? பல வருடங்களாக இரண்டாம் உலகப் போர் இறந்த யூதர்களின் பணம் ஸ்விஸ் வங்கியிலே இருந்து வருகிறது.

12000 பேர் கொண்ட ‘Holocaust Victim’ குழு அமெரிக்க அரசிடம் முறையிட்டது. பல போராட்டகளுக்கு பிறகு 1997ல் ஸ்விஸ் வங்கி போதிய ஆதாரங்கள் காட்டினால் பணம் தருவதாக ஒத்துக் கொண்டது.

யோசித்து பாருங்கள் சுதந்திரம் பெற்று இவ்வளவு வருடங்களில் எத்தனை ஊழல்கள். பி.ஜே.பி கட்சி வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தைப் பற்றி பேசு போதெல்லாம காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டியதில்லை. 2G , CWG, ஆதர்ஷ் என்று ஊழல் பட்டியல் பெறுகியது தவிர ஊழல் பணத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர முயற்சி அவர்கள் செய்ததில்லை.

நம் நாட்டில் பசி என்ற பெயரில் எத்தனையோ பேர் இறக்கிறார்கள். ஆனால், அரசியவாதிகள் பலர் ஸ்விஸ் வங்கியில் தங்களது பணத்தை பதுக்கி வைத்து அவர்களும் அனுபவிக்காமல் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் பணத்தை தன் நாட்டுக்கொண்டு வந்த ஹிட்லர் நல்லவரா ? தானும் அனுபவிக்காமல், மற்றவர்களும் அனுபவிக்காமல் பணம் பதுக்கி வைக்கும் நம் அரசியல் தலைவர்கள் நல்லவர்களா ?



கட்டுரைக்கு உதவி நூல் :
ஸ்விஸ் பேங்க் – எஸ். சந்திரமௌலி

2 comments:

Gobinath said...

ஹிட்லரின் பலமுடிவுகள் பிழையாக இருந்த போதிலம் இது சரியாகத்தான் தெரிகிறது.

kumar said...

Super ggg

LinkWithin

Related Posts with Thumbnails