தாசி
படுத்தவனிடம் கேட்பது போல்
தினமும் கேற்கிறேன்
என் மேலாளரிடம்
" நேரமாச்சு... நான் போகனும்"
*
ஒவ்வொரு முறையும்
பேப்பரில் கை தொடைக்கும் போது
பேனாவால் எழுதும் போதும்
என்னை நானே கேள்விக் கேட்டுக் கொள்கிறேன்
"எத்தனை மரங்கள் வெட்டப்பது ?"
*
மனைவியை தீண்டும் போது
என்னையும் அறியாமல்
நினைவுக்கு வருகிறது
"பழைய காதலியை முத்தமிட்ட நினைவுகள்"
*
தெருவோரம் குழந்தைகள்
பிச்சை எடுக்குக்கும் போது
கண் முன் வந்து நிற்கும்
"என் செல்ல குழந்தை"
*
பல கேள்விகளுக்கும்
உருத்தலுக்கும் நடுவில்
பணம் சேர்த்து வைக்கிறேன்
நாளை வாழுவேன் என்ற நம்பிகையில்.....!?
Thursday, March 17, 2011
Wednesday, March 16, 2011
உலக சினிமா : Good bye lenin
எல்லோருக்கும் அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்ற தேடல் இருக்கும். அடுத்த நொடிக்கான சிந்தனை. நாளைய எதிர்காலத்தை நினைத்து கற்பனை. இப்படி, தற்போதைய நிகழ்வுகளை மறந்து வரப்போகும் நிமிடங்களுக்கு மனிதன் அதிக முக்கியத்துவம் கொடுகிறான். அதே சமயம், புகழின் உச்சிக்கு சென்ற பிறகு இறந்த காலத்தை நினைத்து கண்ணீர் விடுகிறான். இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் மத்தியில் அம்மாவுக்காக நாட்டையே பின்னோக்கி காட்டிய மகனின் பாசம் பற்றிய கதை தான் ‘Good bye lenin’.
1978ல் அலெக்ஸ் கர்னர் சிறுவயதில் அம்மாவுடன் இருந்த ஞாபகங்களில் இருந்து படம் தொடங்குகிறது. 1989ல் இளைஞனான அலெக்ஸ், தன் சகோதரி அரியன், அரியனின் குழந்தை பால், அம்மா கிரிஸ்டினாவோடு கிழக்கு பெர்லினில் வசிக்கிறான். கிரிஸ்டினா ஒரு கம்யூனிச ஆதரவாளர். வேலையை முடித்து வீட்டுக்கு திரும்பும் வழியில் மக்கள் போராட்டம் நடக்க போராட்டக்காரர்களோடு அலெக்ஸ் கைது செய்யப்படுகிறான். அதை அவன் அம்மா கிரிஸ்டினா பார்க்கிறாள். தன் மகன் கைதாவதை பார்த்த கிரிஸ்டினாவுக்கு மாரடைப்பு ஏற்ப்படுகிறது. கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில் பிரிக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியும், வடக்கு ஜெர்மனியும் ஒன்று சேர்ந்து ஜெர்மனியாக உருவெடுக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையில் இருக்கும் பெருஞ்சுவர் உடைக்கப்படுகிறது. அதுவரை கம்யூனிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனி மெல்ல மெல்ல முதலாளித்துவம் நுழைகிறது. கிரிஸ்டினாவை கவனத்துக் கொள்ளும் நர்ஸ் லாரா மீது அலெக்ஸ்க்கு காதல் வருகிறது. வீடியோ படம் எடுக்கும் டெனிஸ் என்ற நபரின் நட்பு அலெக்ஸ்க்கு கிடைக்கிறது. அலெக்ஸின் சகோதரி அரியனுக்கு வடக்கு ஜெர்மனி பகுதியில் இருந்து புது காதலன் கிடைக்கிறாள். கிழக்கு ஜெர்மனிப் போல் அவர்கள் வீடும் முழுவதுமாக முதலாளித்துவ பொருட்களாக கொண்ட வீடாக மாற்றுகிறார்கள்.
கோமாவில் இருந்த கிரிஸ்டினா கண் விழிக்கிறாள்.
டாக்டர் அலெக்ஸிடம், கிரிஸ்டினாவுக்கு வருத்தமோ, அதிர்ச்சியான தகவலோ, விஷயமோ கேள்விப்பட்டாமல் மீண்டும் மாராடைப்பு ஏற்ப்படும் என்று சொல்கிறார். நாட்டில் நடந்த தற்போதைய மாற்றத்தை அம்மா கேள்விப்பட்டால், கம்யூனிச ஆதரவாளராக இருக்கும் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று அலெக்ஸ் நினைக்கிறான்.
கிரிஸ்டினா கோமாவிற்கு முன்பு எப்படி வீடு இருந்ததோ மீண்டும் அப்படியே வீட்டை மாற்றுகிறான் அலெக்ஸ். கிழக்கு ஜெர்மனி இருந்த போது பொருட்கள் தயாரித்த பல நிறுவனங்கள் இப்போது இல்லை என்பதால், அவர்களின் காலி டப்பா, கவர் கொண்டு தற்பொதைய பொருட்களை நிரப்புகிறான். தன் நாடு மாறிவிட்டதை அம்மாவுக்கு சந்தேகம் வராததுப் போல் நடந்துக் கொள்கிறான். டி.வி பார்க்க வேண்டும் என்று கிரிஸ்டினா ஆசைப்படும் போது, தனது நண்பன் டெனிஸ் வைத்து கம்யூனிச செய்திகளை வாசிக்க வைக்கிறான்.
ஒரு நாள் தன் வீட்டு ஜென்னலில் ’கோக்ககோலா’ நிறுவனத்தின் விளம்பரத்தை பார்க்கிறாள் கிரிஸ்டினா. அது ஒன்றுமில்லை என்று அலெக்ஸ் பேச்சை மாற்றுகிறான். பிறகு டெனிஸைக் கொண்டு ’கோக்ககோலா’ சோஷலிச குடி பானமாக அரசாங்கம் அறிவித்து போல் செய்தியை ஒளிப்பரப்புகிறான். இன்னொரு முறை, அலெக்ஸ் தூங்கிக் கொண்டு இருக்கும் போது கிரிஸ்டினா வெளியே வந்து பல வெளிநாட்டு நிறுவன விளம்பரத்தை பார்த்து அதிர்கிறாள். லெனினின் சிலை எலிக்காப்டரில் தூக்கி செல்வதை பார்க்கிறாள். தூங்கி விழித்த அலெக்ஸ் அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து, வடக்கு ஜெர்மனியில் இருந்து பலர் அகதிகளாக வேலை தேடி கிழக்கு ஜெர்மனி வந்திருப்பதாக கூறுகிறான். அதனால் சில வடக்கு ஜெர்மனி விளம்பரங்களும், நவீன உடைகள் அணிந்திருக்கும் மனிதர்கள் இருப்பதாக பொய் சொல்கிறான். அதை நம்ப வைக்கும் விதமாக டெனிஸ்ஸைக் கொண்டு டி.வி செய்தியையும் ஒளிப்பரப்புகிறான். உடனே, கிரிஸ்டினா நாமும் வடக்கில் இருந்து வரும் ஒரு குடும்பத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று சொல்கிறாள்.
கிரிஸ்டினாவை அழைத்துக் கொண்டு அலெக்ஸ், அரியன் தங்கள் காதலர்களோடு அவர்களின் விடுமுறைக்காக வெளியே அழைத்து செல்கிறான். வழியில் இருக்கும் மாற்றங்கள் தெரியாமல் இருக்க கிரிஸ்டினாவை கண்ணை கட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவதாக சொல்கிறான் அலெக்ஸ். தன் மகன், மகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கும் போது கிரிஸ்டினா தன் கணவன் வடக்கு ஜெர்மனி சென்ற போது தான் கிழக்கு ஜெர்மனியில் இருக்க முடிவு எடுத்ததை நினைத்து வருத்தப்படுகிறாள். தன் கணவன் ராபர்ட்டை பார்க்க ஆசைப்படுவதாக சொல்கிறாள். அன்று இரவு, கிரிஸ்டினா உடல் மேலும் மோசமாகிறது.
இந்த முறை, கிரிஸ்டினா உடல் பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொல்கிறார். அலெக்ஸ் தன் அப்பாவிடம் பேசி அம்மாவை பார்க்க அழைத்து வருகிறான். அன்று, கிழக்கு-வடக்கு ஜெர்மனி இணைந்த ஒரு வருட கொண்டாட்ட நிகழ்வு நடைப்பெற இருக்கிறது. அலெக்ஸ் டாக்ஸி ட்ரைவரை புதிய கிழக்கு ஜெர்மன் அதிபராக நடிக்க வைத்து, கிழக்கு-வடக்கு ஜெர்மனி இணைந்ததாக பழைய செய்தியோடு தொகுத்து வீடியோ தயாரிக்கிறான். இரண்டு நாடு இணைவதால் கம்யூனிசத்திற்கு எந்த பங்கமும் வராது என்று அதிபர் உறுதி மொழி வழங்குவது போல் அந்த செய்தி உள்ளது. படுக்கையில் இருக்கும் கிரிஸ்டினா முதலாளி நாடாக வடக்கு ஜெர்மனி கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட சந்தோஷ்த்தில் இறக்கிறாள்.
இறந்த தன் அம்மாவின் அஸ்தியை கிழக்கிலும் இல்லாமல், வடக்கிலும் கழக்காமல் அவள் அஸ்தியை ராக்கெட்டில் விட்டு வெடிக்க வைத்து காற்றில் கலக்கிறான்.
தன் அம்மா கடைசி வரை கம்யூனிச நாட்டில் வாழ்கிறோம் என்ற நம்பக்கையில் இறந்ததாக அலெக்ஸ் சொல்கிறான். தன் அம்மாவின் நினைவுகள் தன் பழைய கிழக்கு ஜெர்மனியோடு தொடர்பு கொண்டது. அம்மா நினைவு இருக்கும் வரை அந்த நாட்டின் பற்றிய நினைவு இருக்கும் என்று அலெக்ஸ் பாத்திரம் சொல்லும் போது படம் முடிகிறது.
சோவியத், இந்தியா என்று ஒன்றாய் இருந்த எத்தனையோ நாடுகள் உடைந்து விட்டாலும் பிரிந்த இரண்டு நாடு ஒன்றாயானது என்றால் அது ஜெர்மனி தான். ஜெர்மனி இணைப்பு பின்னனி வைத்து நகைச்சுவையும், சோகமும் கலந்த கதை கொடுத்த இயக்குனர் பாராட்டியாக வேண்டும்.
அம்மாவுக்காக இல்லாத ஒரு நாட்டை அலெக்ஸ் பாத்திரம் உருவாக்கி காட்டும் பல இடங்களில் நெகிழ வைக்கிறது. குறிப்பாக, அம்மா இறக்க போகிறார் என்று தெரிந்தும் போலி செய்தி தொகுப்பை ஒளிப்பரப்பும் போது ஒரு பக்கம் சிரிப்பை வர வழைத்தாலும், அந்த பாத்திரத்திற்காக அம்மா பாசமும் தெரிகிறது.
அலெக்ஸ், அரியன் 30 வருடங்களாக கிரிஸ்டினா சேர்த்த பணத்தை புது நாட்டில் மாற்ற நினைக்கும் போது பணம் மாற்றும் நாள் முடிந்து விட்டதாக அதிகாரி சொல்லி பணம் வாங்க மறுக்கிறார். முதலாளித்துவ நாட்டில் ஏழைகளை ஏழைகளாக இருக்க வைப்பதை இந்த காட்சி காட்டுகிறது.
கோல்டன் க்ளோப், BAFTA, ஈரோப்பியன் விருது என்று பல விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது.
இன்றைய தலைமுறைக்கு எதிரியாக தெரியும் பாகிஸ்தான், அறுபது வருடங்களுக்கு முன்பு சுதந்திரத்துக்காக போராடிய நாடு இரண்டாக பிரிக்கும் போது எப்படி இருந்திருக்கும் ? பொது எதிரியை வெளியே அனுப்பிய கையோடு நமக்கு நாமே எதிரியாகிவிட்டதை நினைத்து அன்றைய மக்கள் மனது எவ்வளவு பாதித்திருக்கும் ? மக்களுக்காக கவலைப்படாத அரசியல் சூழ்னிலையில் வாழும் நாம் பிரிவு வந்தாலும் கவலைப்பட போவதில்லை. கவலைப்படவும், கோபப்படவும் நேரமில்லை.

Tuesday, March 8, 2011
உலக சினிமா : The Song of Sparrows
அத்தியாவசிய பொருட்கள் எல்லாமே ஆடம்பர பொருட்களின் விலையாகிவிட்ட பிறகு, விரும்பும் பொருளை வாங்க எப்படியாவது பணம் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நேர்மை, மனித நேயம் விட்டு அதிக விலை சொல்லி விற்றால் தான் தங்களுக்கு தேவையான பொருளை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த ’எப்படியாவது’ என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கும் மனிதனை விலைவாசி கொலை செய்வதை பார்த்துக் கொண்டுயிருக்கிறோம். வாழ்நாள் தேவை எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது. அவனை மீண்டும் பழைய பாதை எப்படி திரும்பிகிறான் என்று சொல்லும் கதை தான் ’The Song of Sparrows’.

ஆஸ்ட்ரிட்ச் பறவைகளை பராமரிக்கும் வேலை செய்கிறான் கரீம். ஒவ்வொரு ஆஸ்ட்ரிட்ச் பறவையும் தன் குழந்தையை போல் பார்த்துக் கொள்கிறான். வேலை செய்யும் போது கரீமின் நண்பன் அவனை மனைவி அழைத்ததாக கூறுகிறான். வீட்டுக்கு சென்ற கரீம் தன் மகள் கேளாத கருவி நீரில் விழுந்ததை மகனும், அவனது நண்பர்களும் தேடுவதை பார்க்கிறான். அதை பார்த்ததும் கரீமும் தேடுகிறான். அப்போது கரீமின் மகன் இங்கு மீன் வளர்க்கலாம் என்று யோசனை சொல்கிறான். கழிவு நீர் செல்ல அடைக்கப்பட்டதாகவும், அதை சுத்தம் செய்ய அதிக செலவாகும் என்று சொல்லி கரீம் மறுக்கிறான். தன் மகளின் காது கேளாத கருவி அவளுக்கு பொருத்துகிறான். ஆனால், அது உடைந்ததால் அவளுக்கு காது கேட்டவில்லை.
அந்த கருவி சரி செய்ய முடியாது, புது கருவி தான் வாங்க வேண்டும் என்று உள்ளூர் விற்பனையாளர் சொல்கிறான். இந்த சமயத்தில் அவன் பாதுகாப்பில் இருக்கும் ஆஸ்ட்ரிட்ச் பறவை ஒன்று தப்பி ஓட, கரீமின் வேலை பரிபோகிறது.
அடுத்த மாதம் தேர்வு தொடங்க போகும் மகளுக்கு காது கேளாத கருவி வாங்க நகரத்துக்கு போகிறான். அதை சோதித்தவரும் புதிதாக வாங்க வேண்டும் என்கிறார். அதற்காக பதிவு செய்த்தால் மூன்று, நான்கு மாதம் காத்திருக்க வேண்டும். வெளி சந்தையில் வாங்கினால் 3,50,000 தோமன் செலவாகும் என்கிறார்.
என்ன செய்யலாம் என்று விழி பிதுங்க தவிக்கும் போது ஒருவர் திடீர் என்று அவன் இரு சக்கிர வாகனத்தின் பின் அமர்ந்து ஒரு இடத்திற்கு போக சொல்கிறான். கரீமும் அவனை விடுகிறான். அந்த மனிதன் விட்டதற்கு கரீமுக்கு பணம் தருகிறான். அன்றில் இருந்து ‘பைக் டாக்ஸி’ தொழில் நடத்துகிறார் கரீம். ஒருவர் மட்டுமே ஏற்றி சென்று அவர்கள் சொல்லும் இடத்தில் விட வேண்டும். சில சமயம் பொருட்களை சுமந்து செல்ல வேண்டும். அதில் வரும் வருமானத்தில் வீட்டுக்கு உணவு பொருட்களை வாங்கி செல்கிறான். நகரத்தில் தேவையில்லை என்று வீசப்பட்ட டி.வி ஆண்டனாவை தன் வீட்டு உபயோகத்திற்காக எடுத்து வருகிறான். கிராமத்தில் தன் வீட்டில் மட்டும் ஆண்டனா டி.வி இருப்பதை பெருமையாக நினைக்கிறான்.
பொருட் தேவை, பணம் சம்பாதிக்கும் ஆசை அவனிடம் இருக்கும் நேர்மையும், பிறருக்கு உதவும் குணம் மாறுகிறது. நகரத்தில் இருந்து தேவையில்லாத வீசப்பட்ட பொருட்களை தன் வீட்டுக்கு எடுத்து வருகிறான். அப்படி கரீம் எடுத்து வந்த ஒரு கதவை கரீம்மின் மனைவி பக்கத்து வீட்டில் உதவியாக கொடுக்க, அதை கரீம் மீண்டும் எடுத்து வருகிறான். தன் வண்டியில் வந்தவர் தவறுதலாக 10,000 தோமன் அதிகமாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் தயங்கியப்படி தன்னுடன் வைத்துக் கொள்கிறான். ஃபிரிட்ஜ் டெலிவரி கொடுக்க சொன்னவரை பின் தொடர தவறவிட்டதும், அதை விற்க முயற்சிக்கிறான்.
தன் மகனும், அவனது நண்பர்களும் வீட்டு அருகில் நீர் தேக்கத்தை சுத்தம் செய்வதை பார்த்து அவர்களை அதட்டி விரட்டுகிறான். ஆனால், அந்த சிறுவர்கள் நீர் தேக்கத்தை சுத்தம் செய்து, மீன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கு தங்கள் தோட்டத்தில் வளர்த்த பூக்களை விற்பனை செய்து பணம் சேர்க்கிறார்கள். தன் மகள் உட்பட சாலையில் பூ விற்பதை பார்த்த கரீம் கோபப்படுகிறான். தன் மகன் மீது இருக்கும் கோபத்தில் நீர் தேக்கத்தை சுற்றி இருக்கும் சுவர்களை உடைக்க செல்கிறான்.
கழிவு நீ தேங்கியிருந்த இடத்தில் சுத்தமான நீர் இருக்கிறது. பாம்புகள் தங்கியிருந்த இடத்தில் குருவிகள் கூடு கட்டி முட்டை போட்டிருந்தது. அதை பார்த்ததும் உடைக்காமல் கரீம் மௌனமாகிறான்.
அவன் நகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை சுத்தம் செய்யும் போது எல்லா பொருளும் அவன் மீது விழுந்து, பலத்த காயம் ஏற்ப்படுகிறது. அவனால் நடக்கக் கூட முடியாத நிலைமையில் தள்ளப்படுகிறான். வேலைக்கு செல்ல முடியாத அவனுக்கு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் உதவுகிறார்கள்.
நகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருளை விற்பனை செய்ய உறவினர் ஒருவர் உதவி செய்து, அந்த பணத்தை கரீம் குடும்பத்திற்கு கொடுக்கிறார். தேடி தேடிக் கொண்டு வந்த எல்லா பொருளும் ஒரே நாளில் அவனை விட்டு பிரிந்தது. அதே சமயம் அவனுக்கு உதவி செய்யும் மனிதர்கள் இருப்பதை பார்க்கிறான்.
கரீமின் மகனும், அவன் நண்பர்களும் பூக்கள் விற்ற பணத்தை பக்கெட் முழுக்க மீன்களை வாங்கிறார்கள். கரீமும், அவனது உறவினர் ஒருவரும் பூ தொட்டியோடு, மீன் பக்கெட்டையும் ஏற்றி ஊருக்கு வந்துக் கொண்டு இருக்கும் போது, பக்கெட் உடைந்து தண்ணீர் கீழே சிந்துவதை சிறுவர்கள் பார்க்கிறார்கள். மீன்களை காப்பாற்ற பக்கெட் மேல் இருக்கும் பூ தொட்டிகளை தூக்கி வெளியே ஏறிந்து, பக்கெட்டை வெளியே எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் முயற்சி தோல்வியில் முடிகிறது. வண்டியில் ஊருக்கு திரும்பும் போது ஒரு மீனோடு வருகிறார்கள். மீன்களை காப்பாற்றும் போது அடிப்பட்ட தன் மகன் கைக்கு கட்டு போடுகிறான். அவர்களை மகிழ்விக்க கரீம் பாட்டு பாடுகிறான். வாங்கி வந்த மீன்னை கரீமின் மகன் ஆசையாய் நீர்தொட்டியில் விடுகிறான்.
அடிப்பட்ட தன் காலில் இருக்கும் மாவு கட்டில், படம் வரைய கரீமின் மகன், மகள் சண்டைப்போடும் போது அவர்களுக்கு தன் காலில் இரண்டு இடம் கொடுத்து வரைய சொல்கிறான். விழிக்கும் போது ஒரு குருவி அவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறது. அந்த குருவிக்கு உதவ உட்கார்ந்தபடி நகர்ந்து கதவை திறக்கிறான். குருவி பறந்து செல்கிறது. இதுவரை அடைப்பட்ட அவன் மனமும் திறக்கப்படுகிறது. அப்போது கரீமின் நண்பன் ஓடிப்போன ஆஸ்ட்ரீட்ச் பறவை திரும்பி வந்துவிட்டதாக சொல்கிறான். கரீம் இழந்த வேலை திரும்பி கிடைக்கிறது. மீண்டும் பழைய கரீம் சிரித்தப்படி இயற்கையை ரசித்துக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு செல்வது போல் படம் முடிகிறது.
உழைக்காமல் கிடைக்கும் பணம் வேறு வழியில் நம்மை விட்டு பிரிந்துவிடும் என்பதை இந்த படம் அழமாக உணர்த்துகிறது.
வயதான பிறகு வாழ்க்கைக்காக போராடும் சமயத்தில் உலகத்தில் இருந்து கற்பதை விட சிறுவர்களிடம் நாம் கற்பது அதிகமாக உள்ளது. நாம் வாழ்க்கையில் எவ்வளவு இழந்து இருக்கிறோம் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்துபவர்கள் அவர்கள் தான். நாம் கடந்து வந்த நினைவு சின்னங்களை நூலாக தொகுப்பவர்கள் சிறுவர்கள். இந்த படத்தில் பணம், பொருள்களை விட அன்பு முக்கியம் என்று கரீம் தன் மகனிடம் இருந்து கற்றுக் கொள்கிறான்.
எத்தனையோ வீட்டில் சிறுவர்கள் மறைமுகமாக பெரியவர்களுக்கு கற்றுக் கொடுகிறார்கள். சிலரது ஈகோ அவர்களை கற்றுக் கொள்ள தடுக்கிறது. ஈகோ பார்க்காதவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

Monday, March 7, 2011
காதல் பொன்மொழிகள் !
காதலுக்காகத் திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்கு மட்டுமே முடிகிறது.
- ஜோஷ் பில்லிங்ஸ்
**
முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு எத்தனை பேருக்கு வாய்க்கிறது ?
- அ.வெண்ணிலா
**
தாய் அவளுடைய குழந்தை என்றழைக்கப்படுவதன் பெற்றோர் அல்ல.
மாறாக வளர்ச்சியடைந்த புதிதாக விதைக்கப்பட்ட விதையின் செவிலியாகும்.
ஏறுபவன் எவனோ அவனே பெற்றோர் ஆவான்.
- புகழ்பெற்ற அப்போலஸ் தீர்ப்பு
**
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான்.
பெண்ணோ ஒரு ஆண்ணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஓயில்டு
நன்றி :
ஆதலால் காதல் செய்வீர், ரூ.10 (பக்:32),
பாரதி புத்தகலாயம்.

Friday, March 4, 2011
ப(பி)டித்த தத்துவங்கள் !
சதுரங்கத்தில் எல்லா காய்களும் முன்னே கொண்டு செல்பவன் வெற்று பெறுவதில்லை. சில காய்களை பின்னுக்கு தள்ளினால் தான் முன்னேறி வெற்றி கிடைக்கும்.
**
தனிமையில் இருக்கும் போது
சிந்தனையில் கவனமாக இரு !
கூட்டத்தில் இருக்கும் போது
வார்த்தையில் கவனமாக இரு !
**
அன்பை வெளிப்படுத்தும் முன் யோசிக்காதே
கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறக்காதே !
-விவேகானந்தர்
**
உனக்கு விதிமுறைகளை பிடிக்கவில்லை என்றால்
அதை பின்பற்று, சிகரத்தை தொடு
விதிமுறைகளை மாற்றியமை !
**
சூரியன் போல் பிரகாசமாக ஓளிர வேண்டும் என்றால்
சூரியன் போல் எரிவதற்கு தயாராக இருக்க வேண்டும்
- அப்தூல் கலாம்
**
என் முதுக்கு பின் பேசுபவர்களைப் பற்றி
நான் கவலைப்படுவதில்லை
காரணம்,
அவர்களை விட இரண்டு அடி
நான் முன் நிற்கிறேன் !
**
நீ வேகமாக நடக்க வேண்டும் என்றால்
தனியாக நட !
நெடுந்தூரம் நடக்க வேண்டும் என்றால்
மற்றவர்களோடு சேர்ந்து நட !!

Thursday, March 3, 2011
உலக சினிமா - Matrubhoomi (A Nation Without Women)
”பக்கத்து வீட்டு குழந்த பாரு எவ்வளவு சமத்தா இருக்கு... நீ தான் கெட்ட பையன். எப்ப பார்த்தாலும் கத்தி, அழுது ஆர்பாட்டம் பண்ணுற” என்று அம்மாவோ, அப்பாவோ தன் குழந்தையிடம் சொல்லுவார்கள். தன் குழந்தையிடம் நல்லதே இருந்தாலும், இன்னொரு குழந்தையிடம் ஒப்பிடாமல் பெரும்பாலான பெற்றோர்களால் இருக்க முடியாது. அதே போல் ‘உலக சினிமா’ என்று சொல்லும் போது வேற்று மொழி படங்களைப் பற்றி சொல்லி, நம் நாட்டில் இது போல் படங்கள் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வோம். 98% இது உண்மை தான். பஞ்ச் டையலாக், கதாநாயகனுக்கான கதை, அபத்தங்கள் நிறைந்த களம் என்று 100ல் 98 படங்கள் இப்படி தான் வருகிறது. ஆனால், இதில் தப்பி 2 படங்கள் வருகிறது. அதை நாம் பார்க்க தவறவிடுகிறோம். அல்லது திரையரங்கு கிடைக்காமல் மறக்கடிக்கப்படுகிறோம். அப்படி, 100ல் தப்பி வந்த நல்ல படங்களில் ‘மாத்ருபூமி’ படம் குறிப்பிடத்தக்கது. இந்தி, போஜ்புரி மொழிகளில் வெளிவந்தப்படம்.

கிராமங்களில் நடக்கும் பெண் சிசு கொலைகளை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு கிராமத்தில் பெண் சிசுக்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டு, பெண்களே இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு பெண் வாழ்ந்தால் அவளின் நிலை என்ன ? என்று இந்த படம் காட்டியிருக்கிறது.
ஆரம்பக் காட்சியில், பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறப்பது போல் காட்சி தொடங்குகிறது. ஆண் வாரிசு எதிர்பார்த்து இருக்கும் தந்தை அந்த பெண் குழந்தையை அண்டா முழுக்க பால் நிரப்பி, அதில் பெண் குழந்தையை முக்கி கொள்கிறான். ’பெண் குழந்தை வேண்டாம்’ என்று கிராமம் வாழ்ந்த்தால் எதிர்கால சங்ததியனர்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள எந்த வீட்டிலும் பெண்கள் இல்லாமல் இருக்கிறார்கள். பெண் வாசம் இல்லாமல் அந்த கிராமத்தில் வாழும் ஆண்கள் பெண்ணின் நிர்வாணப்படத்தையும், ஆபாசப் படங்களையும், ஆண் பெண் போல் கவர்ச்சியான ஆடையணிந்து வருவதும் என்று தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள்.
அந்த கிராமத்தில் வசதி படைத்த மனிதன் ராமசந்திரனுக்கு ஐந்து மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தன் வீட்டில் இருக்கும் மாடோடு உறுவுக் கொள்கிறான். மற்ற மகன்கள் வீட்டில் இருக்கும் சாப்பாட்டு மீது குறை சொல்லுகிறார்கள். தன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தாலும் ஊரில் பெண் இல்லை என்பதால் ராமசந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும் ஊரில் திருமண நிகழ்ச்சி நடக்கும் போது, மணப்பெண்ணின் பாவடை நாடாவை அவிழ்த்து விடுகிறார் திருமணம் செய்து வைக்கும் ப்ரோகிதர். மணமகன் உட்பட காய்ந்து கிடக்கும் பலரின் கண்களுக்கு அந்த பெண் அரை நிர்வாணமாக தெரிவதை ரசிக்கிறார்கள்.
ராமசந்திரன் அந்த ப்ரோகிதரை வைத்து வறுமையில் வாடும் ஒரு குடும்பத்து பெண்ணை தன் மகனுகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறான். அந்த பிரோகிதரும் அவர்கள் கிராமத்தில் இருந்து தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்து பெண்ணான கல்கியை ராமசந்திரனின் ஐந்து மகன்களுக்கு மனைவியாக திருமணம் செய்து வைக்கிறான். இதில், முதலிரவுக்கு யார் செல்வார்கள் என்ற போட்டியில் தந்தை முந்திக் கொண்டு அறைக்கு செல்கிறான். இது வரை ஆண் வாசம் இல்லாமல் வளர்ந்த கல்கி ஒவ்வொரு தினமும் ஒவ்வொருவரிடம் படுக்க வேண்டிய நிலைமை.
இரவு முழுக்க வன்கொடுமையும், காலை முழுக்க வீட்டு வேலையும் என்று கல்கி உடலாலும், மனதாலும் வாட்டி வதைக்கப்படுகிறாள். இதில் ராமசந்திரனின் கடைசி மகன் மட்டும் கல்கியிடம் அன்பாக நடந்துக் கொள்கிறான். அவள் வீட்டு வேலை செய்யும் போது அவளின் உடல்நிலை புரிந்து உதவி செய்கிறான். ஐந்து பேரில் இளையவனிடம் தன் காதலை காட்டுகிறாள் கல்கி. இளைய மகன் கல்கியுடன் நெருங்கி பழகுவது ராமசந்திரன், அவனது மற்ற நான்கு அண்ணன்களாலும் பொருத்துக் கொள்ள முடியவில்லை. படிப்பை சாக்காக வைத்து ராமசந்திரன் இளையவனை அடிக்கிறான். ஒரு கட்டத்தில், மற்ற சகோதரர்கள் இளையவனை கொலை செய்கிறார்கள். இதை அறிந்த கல்கி வீட்டை விட்டு தப்பி ஓட முயற்சிக்கிறாள். அதற்கு அந்த வீட்டில் வேலை செய்யும் சிறுவனும் உதவி செய்கிறான். அதனால், அந்த சிறுவன் ராமசந்திரனின் மற்ற மகன்களால் கொல்லப்படுகிறான்.
கல்கி வீட்டுக்கு இழுத்து வரப்பட்டு, மாடுகளோடு மாடாக கால்கள் கட்டப்பட்டு கிடக்கிறாள். கல்கி மாட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டதை அறிந்த ஒரு சிலர் இரவில் அவளை
கற்பழிக்கிறார்கள். கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்கி வாயில் துணியடைத்து புணர்கின்றவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யாதவளாய் பிணம் போல் கிடக்கிறாள். ராமசந்திரன், அவன் மகன்களும் அவளுடன் புணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் செருப்பு சத்தம் கேட்டாலே, அஞ்சும் அளவிற்கு கல்கி பாதிக்கப்படுகிறாள். அவள் கர்ப்பமாகியும் அவளை யாரும் விட்டு வைக்கவில்லை.
கல்கிக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று ஜோதிடர் ஆருடம் சொல்லும் போது, கல்கி மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்படுகிறாள். பிறக்க போகும் குழந்தைக்கு யார் அப்பா என்று மகன்கள் சண்டைப்போட்டுக் கொள்ளும், ராமசந்திரன் அவளுடன் தான் முதலில் இருந்ததை கூறி ஜாதகம் எழுதுவதற்கு தன் பெயரை அப்பாவாக போட சொல்கிறான்.
கல்கிக்கு குழந்தை பிறக்கபோவதை அறிந்த ஊர் மக்கள் அந்த குழந்தைக்கு ’தாங்கள் தான் அப்பா’ என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். கல்கியை இத்தனை பேர் புணர்ந்த்தை அறிந்த ராமசந்திரன் தன் மகன்களை விட்டு அவர்களை கொல்ல சொல்கிறான். ஒரு கட்டத்தில் ஜாதி கலவரமாகி ஒருவருக்கு ஒருவர் வெட்டி சாய்த்துக் கொண்டு இறக்கிறார்கள். பலர் அனுபவித்த கல்கியை கொல்ல நினைத்த ராமசந்திரனும் புதிதாய் வந்த வேலைக்காரனான சிறுவனால் கொல்லப்படுகிறான். இறுதியில், கல்கிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அவளுடன் படுத்த ஆண்கள் எல்லாம் பிணமாக கிடக்கிறார்கள்.
அந்த வீட்டு வேலைக்கார சிறுவன், “ஐய்...பெண் குழ்ந்தை” என்று முகன் மலர புன்னகையுடன் சொல்கிறான்.
ஆரம்ப காட்சி பெண் குழந்தை என்று முக சுலித்த கிராமத்தில் பெண் குழந்தை என்றது புன்னகை சிந்துவது போல் காட்டுகிறார்கள். இந்தியாவில், கடந்த 100 வருடத்தில் 3.5 கோடி பெண் சிசுக்கள் ’பெண்’ என்பதால் தொலைந்துப் போனதாக UNFPA அறிகிக்கைக் கொண்டு படம் முடிகிறது.
‘கல்கி’யாக நடித்தவர் துலிப் ஜோஷி. ஆரம்பத்தில் இந்த பாத்திரத்தை ஏற்க்க பயந்தாராம். ஆனால், கதை முழுக்க கல்கி பாத்திரத்தை சுத்தி நடப்பதால் ஏற்று நடித்தாராம். படம் வெளிவந்து பலர் அவரை பாராட்டினாலும், ஏன் இந்த படத்தை நடித்தோம் என்று கவலையாக உள்ளது என்கிறார். இத்தனைக்கும், இந்த படத்தில் ஆபாசக்காட்சியோ, கவர்ச்சியாகவோ நடிக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் கல்கி பாத்திரம் மீது பரிதாபம் வருவது போல் இருந்தது.
’கல்கி’ என்ற ஒன்றை பெண் பாத்திரத்தை வைத்து பெண்கள் படும் எல்லா துயரங்களையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மனிஷ் ஜா. பிகாரில் வளர்ந்த இவர், குஜராத்தில் ’ஒரு கிராமம் பெண்கள் இல்லாமல் இருப்பதை’ செய்திதாளில் படித்ததை மையமாக வைத்து படமாக்க வடித்திருக்கிறார். பெண் சிசு கொலை தொடர்ந்தால் எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கட்டுரைகள் மனிஷ்க்கு மேலும் உதவியாக இருந்துள்ளது.
பெண்களை குத்து விளக்கு, குல தெய்வம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த பட்சம் அவர்களை மனிதர்களாக வாழவிடுவோம் என்று சொல்ல தோன்றுகிறது.
இந்த படம் 2003 வெனிஸ் திரைப்பட விழாவிலும், 2003 டோரோண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.

Wednesday, March 2, 2011
புத்தக விற்பனை அனுபவம்
அது ஒரு சிற்றிதழில் ஆண்டு விழா நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக 'நாகரத்னா பதிப்பக' சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளரின் அனுமதிப் பெற்று தான் புத்தகக் கண்காட்சி நடந்தது. வாசகனாக இருந்த எனக்கு புத்தக விற்பனையாளனாக முதல் அனுபவமும் அது தான். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் மேடையில் பேசுபவர் மொக்கை போட பாதிக்கு மேற்ப்பட்ட கூட்ட புத்தகத்தை மொய்க்க தொடங்கிவிட்டனர்.
நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்ட பலர் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். அவர்கள் புத்தகத்தைத் தேடி வந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உபயோகம் இல்லாமல் சுய தம்பட்ட பேச்சை கேட்பதற்கு பதிலாக புத்தகத்தை பார்வையிட வந்தார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர் அரங்கத்தில் கூட்டம் குறைவதை பார்த்து வெளியே வந்தார். பார்வையாளராக வந்தவர்கள் புத்தகத்தை பார்த்ததும், அங்கேயே என்னை கத்த தொடங்கிவிட்டார்.
" வர கூட்ட எல்லாம் ஸ்டாலுக்கு வந்திருச்சுனா... ஹால்ல யாரு இருக்குறது. இதுக்கு தான் யாருக்கு ஸ்டால் போட அனுமதி தரதில்ல...." என்று கத்தினார்.
பல வருடங்களாக நிகழ்ச்சி நடத்துபவர் புத்தகத்தால் கூட்டம் குறைவதை நினைத்து அஞ்சியிருக்கிறார். இந்த வருடம் அவர் ஆண்டு விழா நிகழ்ச்சியில் புத்தக பார்வைக்கு அனுமதி தரவில்லை. ஒரு நிகழ்ச்சியின் கூட்டத்தை புத்தகம் குறைக்க முடியும் என்றால் நிகழ்ச்சிக்கு கூட்டத்தை புத்தகத்தால் சேர்க்கவும் முடியும் என்பதை உணர வேண்டும்.
ஒவ்வொரு அமைப்பினரும் தங்கள் உறுப்பினர் புத்தகங்கள் தங்கள் சங்க நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கலாம். நிகழ்ச்சி கலந்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும், தன் புத்தகத்தை பார்வைக்கு வைப்பதற்காக கண்டிப்பாக கலந்து கொள்வார்.
ஏதாவது நிகழ்ச்சி நடக்கும் போது கண்டிப்பாக நூல் விமர்சன நிகழ்ச்சி நடத்த வேண்டும். நூலுக்கும், எழுத்தாளருக்கும் விளம்பரம் கிடைக்கும். கவியரங்கம், கவிதை வாசிப்பு போன்ற நிகழ்வுகளில் ஆர்வம் காட்டும் அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இன்று எத்தனையோ இலக்கிய அமைப்புகள், சங்கங்கள் பல எழுத்தாளரையும், பேச்சாளரையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், எந்த அமைப்பும் அவர்களை வாசகனிடத்திலோ, பார்வையாளனிடத்திலோ சரியாக கொண்டு சென்றதில்லை. ஐம்பது புத்தகம் மேல் எழுதியிருக்கும் எழுத்தாளர்க் கூட திவிரமாக புத்தகம் வாசிக்கும் வாசகனுக்கு தெரியவதில்லை. காரணம், ஐம்பது புத்தகங்களும் நூலக ஆணையை நம்பி போட்டிருப்பது. நூலக ஆணை கிடைத்தப்பின் நூலகத்தில் புத்தகம் உறங்கி கிடப்பது. இன்று பல எழுத்தாளர்களின் புத்தகத்தின் நிலைமை இது தான். எழுத்தாளரின் வீட்டில் தூங்கும். இல்லை என்றால் நூலகத்தில் தூங்கும். நூறு வாசகர்களை அந்த புத்தகம் பார்த்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
இன்று பலர் வரிசையில் நின்று வங்கியில் பணம் எடுப்பதில்லை. போன் போட்டாலே வீட்டுக்கு மளிகை பொருட்கள் வருகிறது. ஒரு தொலைக்காட்சி பார்ப்பது போய் ஒரு நாளைக்கு நூறு சேனல் பார்க்கிறோம். இப்படி எல்லா விஷயங்களும் நவீனமாகிவிட்ட பிறகு வாசகன் புத்தகத்தை தேடி நூலகத்திற்கோ அல்லது புத்தக கடைக்கோ சென்று வாங்க வேண்டும் என்ற பழைய பாதையில் இருந்தால் புத்தகம் விற்கவில்லை என்ற பழைய புராண கதையை தான் பாட வேண்டியது இருக்கும்.
உண்மையான எழுத்து என்பது உறங்கி கொண்டு இருக்கும் மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்புவது. பலரின் புத்தகங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எப்படி அவர்கள் எழுத்து மனசாட்சியை எழுப்ப போகிறது. இதில் இருந்து நாம் மாறுப்பட வேண்டும். வாசகனை தேடி புத்தகம் வர தொடங்க வேண்டும்.
இன்று நன்றாக எழுத தெரிந்தவன் மட்டும் நல்ல எழுத்தாளன் இல்லை. அதை விற்பனை செய்ய தெரிந்தவன் தான் நல்ல எழுத்தாளராக தெரிகிறான். அதற்கு நல்ல உதாரணம் சாரு நிவேதிதா. புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் அஜாராகிவிடுவார். தன் பதிவில் தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி ஒரு வரியாவது சேர்த்துக் கொள்வார். தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுத்தாளானே பேச கூச்சப்பட்டால் அடுத்தவர் எப்படி பேசுவார்கள் ?
எங்கள் பதிப்பக புத்தகங்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் தான் முதலில் ஸ்டால் போட தொடங்கினோம். ஆனால், எத்தனையோ நல்ல புத்தகங்கள் விற்க தெரியாதவர்களை பார்க்கும் போது அவர்கள் புத்தகமும் வாங்கி விற்க We can Books என்ற புத்தக விநியோகத்தை தொடங்கினோம். இது வரை எங்கள் பதிப்பக நூல்களுக்கு நூலக ஆணை கிடைக்கவில்லை. சொல்லும் படி பெரிய ஆர்டர் கிடைத்ததில்லை. எங்களின் பெரிய மார்க்கெட்டிங் பலமே நிகழ்ச்சிகளில் ஸ்டால் போடுவது தான்.
இந்த ஒரு வருடத்தில் என் பதிப்பக புத்தகங்களை விற்றதை விட மற்றவர்களின் புத்தகத்தை விற்றது தான் அதிகம். ஆனால், புத்தகம் விற்ற பணத்தை நூலின் ஆசிரியரிடம் கொடுக்கும் போது அவர்களின் எழுத்து விற்பனையாவதில் சந்தோஷாப்படுகிறார்கள்.
இந்த கட்டுரை முடிவில் நான் சொல்ல விரும்புவது உங்கள் இலக்கிய அமைப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, மாதந்திர நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி 'புத்தக பார்வை' என்று ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து புத்தகங்களை விற்பனைக்கு வையுங்கள். நூல் வெளியீட்டு விழாவுக்கு பிறகும் உங்கள் புத்தகம் ஒவ்வொரு நிகழ்ச்சியில் விற்பனையாக உதவியாக இருக்கும்.
இதை எடுத்து நடத்த உங்கள் அமைப்பில் ஒருவரை தேர்வு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். புத்தக பார்வை நடத்த விருப்பம் உண்டு, ஆனால் ஆட்கள் இல்லை என்று நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் வருகிறேன். ( சுய விளம்பரம்)

Tuesday, March 1, 2011
நன்றி... நன்றி... !!!
இணைய புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
இணையத்தில் புத்தகம் வாங்குபவர்கள் குறைவாக இருப்பதால் ஐந்து பேர் வாங்கினாலே மிக பெரிய விஷயம் என்று இருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு நூல் விற்றாலே 'புத்தகக் கண்காட்சி' வெற்றி என்று கருதுதினோம். ஆனால், ஒன்பது பேர் இந்த புத்தகக் கண்காட்சியில் ஆர்வமாக புத்தகம் ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ரூ.2000 வரை புத்தகம் விற்பனையாகியது. (இதில், கோரியர் மற்றும் பதிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டியது போக 300 ரூபாய் கிடைத்தது.)
இந்த ரூ.300 க்கா இவ்வளவு குவ்வல் என்று பலர் நினைக்கலாம்.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவது ஒரு பதிப்பாளரின் கடமையோ, புத்தகத்தை வாங்க தூண்டுவது ஒரு விற்பனையாளரின் கடமை. இது வரை தேடி சென்று புத்தகம் வாங்கினால் தான் கழிவு விலையில் புத்தகம் கிடைக்கும் என்ற நிலையில் இருந்து, வீட்டில் இருந்துக் கொண்டே 10% கழிவுடன், மேலும் கோரியர் செலவு இல்லாமல் புத்தகம் பேரலாம் என்று ’We Books’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் எதிர்காலத்தில் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
ரூ.1000 மேல் மளிகை சமான் வாங்கினால் பொருட்கள் வீடு தேடி வரும் போது ரூ.1000 மேல் வாங்கும் புத்தகம் ஏன் வீடு தேடி வரக் கூடாது ?
ஒரு முன்னனி பதிப்பகம் தவிர இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற சிறு பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை 50% கழிவுடன் கொடுத்தது இந்த புத்தகக் கண்காட்சி யோசனைக்கு உருதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுயிருக்கிறேன்.
இந்த புத்தகக் கண்காட்சி பற்றி தங்கள் பதிவில் வெளியிட்ட நண்பர்களுக்கும், குறிப்பாக கேபிள் சங்கர் (புத்தக கண்காட்சி பற்றி இவர் ‘கொத்து போரோட்டா’வில் எழுதிய பிறகு மூன்று ஆர்டர் கிடைத்தது) அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்த முறை இணைய புத்தகக் கண்காட்சி நடத்தும் போது 100 புத்தகளோடு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒரு மாதத்தில் தினமும் மின்னஞ்சல் பார்த்து பதில் அனுப்பி தூங்குவதற்கு 11, 11:30 யானது. இனி கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்.

Subscribe to:
Posts (Atom)