Monday, June 27, 2011

உலக சினிமா : Color of Paradise

நாம் பார்க்கும் பொருளெல்லாம் ரசிக்கிறோமா ? ரசித்த விஷயத்தை கவலை மறந்து அனுபவித்திருக்கிறோமா ? ரசித்த விஷயத்தோடு வாழ்ந்திருப்போமா ? இப்படி பல கேள்விகளுக்கு பலரது பதில் இல்லை என்றே இருக்கும். அவசர உலகத்தில் ரசனைக் கூட அவசரத்தில் தான் இருக்கிறது. அதனால், பலருக்கு ரசனை இருப்பதில்லை அல்லது ரசிக்க பொறுமையில்லை.

கண் இருந்து ரசிக்க முடியாமல் இருக்கும் நாம் கண் இல்லாத ஒரு சிறுவனின் இயற்கை ரசனையும், அவனை சுற்றி நடக்கும் உறவுகளின் பின்னலுமான கதை தான் 'Color of Paradise'.




கண்பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் முகமத் என்ற சிறுவன் படித்து வருகிறான். கோடை விடுமுறையில் அவனது நண்பர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல இவன் மட்டும் தனித்து அப்பாவுக்காக காத்திருக்கிறான். முகமத்தின் தந்தை அஸிம் அவனது ஆசிரியரிடம் விடுமுறை முடியும் வரை அவருடனே வைத்துக் கொள்ள சொல்கிறார். ஆனால், ஆசிரியர் அதை மறுக்க ஹாஸிம் முகமத்தை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அங்கு தன் பாட்டி, இரண்டு சகோதரி என்று சந்தோஷமாக இருக்கிறான்.

முகமத்தின் தந்தை ஹாஸிம் மனைவி இழந்தவன். தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறான். தன் திருமணத்துக்காக பெண் பார்த்து, அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு அன்பளிப்பு கொடுத்து அவர்களின் சம்மதம் பெருகிறான். தனக்கு திருமணமாகி இரண்டு மகள் இருப்பதை சொன்ன ஹாசிம் கண் இல்லாதம் மகன் இருப்பதை மறைக்கிறான். பார்வையில்லாத மகன் தன் திருமணத்திற்கு அபசகுணமாக பெண் வீட்டார்கள் கருதினால் தன் திருமணம் நின்று விடுமோ என்று அஞ்சுகிறான்.



தன் திருமணத்துக்கு எந்த தடங்கல் இருக்காமல் இருக்க முகமத்தை கண்ணில்லாத தச்சுவேலை செய்பவனிடம் ஒப்படைக்கிறான். கண்ணில்லாத இருவர் கடவுளை காண்பதைப் பற்றி பேசுகிறார்கள். தன் ஆசிரியர் கண்ணில்லாதவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களால் தான் கடவுளை உணர முடியும் என்று சொன்னதை கூறுகிறான் முகமத். கண்ணில்லாத தச்சனுக்கு இந்த வார்த்தை மிகவும் உத்வேகமாக இருக்கிறது.

தன் பேரன் கண்ணில்லாத தச்சனிடம் ஒப்படைத்ததை கேட்டவுடன் ஹாசிமின் அம்மா அவனிடம் கோபித்துக் கொள்கிறாள். தான் எவ்வளவு நாள் தான் வாழ்க்கையை தனிமையில் கலிப்பது. தனக்கென்று ஒரு துணை வேண்டும். கடவுள் தன்னை மட்டும் ஏன் சபிக்க வேண்டும். கண்ணில்லாத மகனைக் கொடுத்து, மனைவியை பரிக்க வேண்டும் என்று கேட்கிறான். முதுமையானா ஹாசிமின் அம்மா தன் மகனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெளியே செல்கிறாள். நடந்து சென்ற வழியில் அவள் இறக்கிறாள். ஹாசிமின் அம்மா இறந்தது கெட்ட சகுணமாக நினைத்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி, ஹாசிம் கொடுத்த பரிசை திருப்பிக் கொடுக்கிறார்கள்.

தன் கனவு சிதைந்த வருத்தத்தில் ஹாசிம், தன் மகனையாவது தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறான். பார்வையற்ற தச்சனிடம் இருந்து தன் மகனை குதிரை மீது அழைத்து வருகிறான். இருவரும் பாலத்தை கடக்கும் போது, முகமத் குதிரையுடன் அறுவியில் தவறி விழுகின்றனர். தன் மகனை காப்பாற்ற ஒரு கனம் யோசிக்கிறான். இறுதியில், ஹாசிம் அறுவியில் குதிக்கிறான்.

முகமத்தும், ஹாசிமும் கடற்கரையில் அசைவில்லாமல் இருக்கின்றனர். மயக்கம் தெளிந்து விழித்த ஹாசிம் முகமத் தொலைவில் இருப்பதைப் பார்க்கிறான். தன் மகனை கட்டி தழுவி அழுகிறான் ஹாசிம். மெதுவாக முகமத் கையில் ஒளித் தோன்ற, கை அசைக்கிறது. முகமத் உண்மையான சொர்க்கத்தை உணர்கிறான். திரை மெதுவாக வானத்தை நோக்கி நகர படம் முடிகிறது.


சிறுவர்களுக்கான தனி உலகத்கை படம் பிடித்துக் காட்டும் மஜித் மஜிதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். 'Father, Children of heaven, The Song of sparrow' போன்ற பல படங்களில் குழந்தைகளின் உள்ளத்தை காட்டியவர் இந்த படத்தில் சிறுவனின் கடவுளை காணும் தேடலை காட்டியிருக்கிறார். தன் இரண்டு சகோதரிகளுடன் முகமத் இயற்கை அழகை ரசிக்கும் காட்சி, நம்மையும் சேர்த்து ரசிக்க வைக்கிறது. முகமத்தின் தந்தை ஹாசிமின் கதாபாத்திரம் மூலம் மனைவி இழந்த சராசரி தந்தையின் குமுறலை பார்க்க முடிகிறது.

குடும்பம்ப்பட இயக்குனர், ஆக்‌ஷன் பட இயக்குனர், கமர்ஷியல் இயக்குனர் என்று பல இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஆனால், மஜித் மஜிதி போல் குழந்தைகளுக்கான இயக்குனர் தமிழ் சினிமாவில் இல்லாமல் இருப்பது நமது துரதிஷ்டமே !

கண் இருப்பவர்களை விட கண்ணில்லாதவர்கள் உலகத்தை அதிகம் ரசிக்கிறார்கள் என்ற உண்மையை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்டியுள்ளது. பார்வையற்றவர்களில் உலகத்தை நாம் பார்க்காமல் இருப்பதால் நாமும் குருடர்களே !!

3 comments:

யோகி said...

அருமையான விமர்சனம் நண்பரே!

/நாம் பார்க்கும் பொருளெல்லாம் ரசிக்கிறோமா ? ரசித்த விஷயத்தை கவலை மறந்து அனுபவித்திருக்கிறோமா ? ரசித்த விஷயத்தோடு வாழ்ந்திருப்போமா ?/

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Try to visit VALAISARAM

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super post

LinkWithin

Related Posts with Thumbnails