Wednesday, November 24, 2010

உலக சினிமா : Turtles Can Fly

மூன்று வேளை சாப்பிட கஷ்டப்படுற குழந்தைகளுக்கு எந்த மாதிரி வேலை செய்வார்கள். டீ க்ளாஸ் கழுவது, டெபிள் துடைப்பது, கடையை சுத்தப்படுத்துவது போன்ற வேலை செய்வதை பார்த்திருப்போம். பதினாலு வயது நிறம்மாத ஒருவனுக்கு இந்த வேலையை கொடுத்தால் அரசாங்கத்திற்கு நாம் பதில் சொல்ல வேண்டும். பதினாலு வயது நிறம்மாதவர்களிடம் வேலை வேலைக்கு வைத்தால் அபராதம் கட்ட வேண்டும்.

குழந்தைகள் தொழிலாளர்கள் நம் நாட்டில் இருக்கின்ற போதிலும், அவர்கள் பாதுக்காக்க ’சட்டம்’ இருக்கிறது. நகர்ப்புற பகுதியில் சட்டத்திற்கு பயந்து சில இடங்களில் குழந்தைகளிடம் வேலை வாங்குவதில்லை. அவர்களை பாதுகாக்க அமைப்புகள் இருக்கிறது. அப்படி, குழந்தைகளை போக்கிஷ்மாக பார்ப்பவர்களுக்கு இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் நடித்த படம் என்றாலும் குழந்தைகளுக்கான கற்பனை உலகம் இந்த படத்தில் இல்லை. தங்கள் வயிற்றை காக்க புதைந்து இருக்கும் கண்ணி வெடிகளை எடுக்கும் குழந்தைகள் பற்றின கதை.



குழந்தைகளை வேலைக்கு அனுப்ப யோசிக்கும் நாம், கண்ணி வெடி எடுக்கும் சிறுவர்களை பார்க்கும் போது இப்படி எல்லாம் இருக்கிறதா என்ற நம்பாமல் இருக்கமுடியவில்லை.

இராக் – துருக்கி எல்லை பகுதியில் இருக்கும் குர்டிஷ் மூகாமில் அமெரிக்க இராணுவம் உடுருவல் முன்பு கதை தொடங்குகிறது.

எல்லோராலும் ’சாட்டிலைட்’ என்று அழைக்கப்படும் 13 வயது சிறுவன் தான் நாயகன். குர்டிஷ் மூகாமில் இருக்கும் சிறுவர்களுக்கு இவன் தான் தலைவன். புதைந்து கிடக்கும் கன்னி வெடிகளை எடுத்து விற்று அதில் வரும் பணத்தில் தனக்கும், தன்னை நம்பி இருக்கும் சிறுவர்களுக்கு உணவு கொடுக்கிறான். பகுதி நேரங்களில் கிராமங்களில் சாட்டிலைட் இணைப்புக் கொடுத்து சதாம் பற்றி வரும் செய்தி செனலில் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பெரியவர்களுக்கு மொழிப்பெயர்ப்பான்.

ஆபாத்தான வேலை என்றாலும், மூகாமில் இருக்கும் சிறுவர்களுக்கு கன்னி வெடி எடுக்கும் வேலை தவிர எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு வயது குழந்தையோடு அகிரின் என்ற சிறுமி, அவளின் சகோதரன் ஹென்கோய்யோடு அங்கு வருகிறான். ஹென்கோய்க்கு இரண்டு கை கிடையாது. ஆனால், தன் வாயால் கன்னி வெடியை லாவகரமாக எடுக்க தெரிந்தவன். நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்பே சொல்லும் விசேஷ அறிவு திறன் கொண்டவன்.

ஆபத்தான வேலையை இரண்டு கை இல்லாத ஹென்கோய் செய்வது சாட்டிலைட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹென்கோய்யை பயமுறுத்தி பார்க்கிறான். எதுவும் நடக்கவில்லை. தன்னையறியாமல் அவனின் சகோதரி அகிரின் மீது காதல் வளர்த்துக் கொள்கிறான்.

அவளுடன் இருக்கும் இரண்டு வயது குழந்தை அவளின் ’சகோதரன்’ என்று அந்த கூட்டத்தில் இருக்கும் எல்லா சிறுவர்களும் நினைக்கின்றனர். ஆனால், அது அகிரினுக்கு பிறந்த குழந்தை.
எல்லையில் வசிக்கும் எல்லா பெண்களுக்கும் இராணுவத்தால் நடக்கப்படும் கொடுமை அந்த சிறுமிக்கும் நடந்திருக்கிறது. அகிரின் தன் சகோதரனிடம் மூகாமை விட்டு செல்லும் போது குழந்தையை இங்கேயே விட்டு விட வேண்டும் என்று சொல்கிறான். ஹென்கோய்க்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், அவள் கேட்கும் நியாயமான கேள்விக்கு பதில் அளிக்க் முடியாதவனாக இருக்கிறான். அப்போது, யுத்தம் தொடங்க போவதாக ஹென்கோய் ஆரூடம் சொல்கிறான்.

முக்கியமான செய்தி என்பதால் அந்த கிராமம் முழுக்க யுத்தம் தொடங்கபோவதை சாட்டிலெட் பரப்புகிறான். இருந்தாலும், ஹென்கோய் சொல்லுவது நடக்குமா மனதில் ஒரு சந்தேகம் சாட்டிலெட் மனதில் இருக்கிறது. கிராம மக்கள் எல்லோரும் பயந்து மலை உச்சுக்கு செல்கின்றனர். அப்போது, அமெரிக்க விமானங்கள் தங்களுக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை கீழே போடுகிறது. அதில், அவர்களை காப்பாற்ற வந்த ரட்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், அகிரின் குழந்தையை தூக்கி சென்று மிக தொலைவில் விட்டு வருகிறாள். ஆனால், சாட்டிலெட் குழந்தை தவறு தலாக வந்துவிட்டது என்று நினைத்து அவளின் கூடாரத்தில் விடுகிறான்.

சாட்டிலெட் முதல் கொண்டு யுத்த தொடங்கியதால் தங்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் முடிவு வரும் என்று நம்புகின்றனர். தன்னை நம்பி இருக்கும் சிறுவர்களை பாதுக்காக்க கன்னி வெடி வைத்து தூப்பாக்கி வாங்குகிறான். தன் குழந்தையை எப்படியாவது தொலைக்க வேண்டும் என்று நினைத்த அகிரின் கன்னிவெடி இருக்கும் பகுதியில் குழந்தையை கட்டி வைத்துவிட்டு அழுதுக் கொண்டே திரும்புகிறான்.

கன்னி வெடி நடுவில் குழந்தை இருப்பதை அறிந்த சாட்டிலெட் காப்பாற்ற செல்கிறான். அந்த முயற்சியில் ஒரு கன்னி வெடி வெடித்துவிட, சாட்டிலெட் கால் பலமாக காயம் ஏற்ப்படுகிறது. ஆனால், பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை சாட்டிலெட் நண்பர்கள் அகிரின் கூடாரத்தில் சேர்கின்றனர். மீண்டும், குழந்தையை பார்க்கும் போது அகிரின் தன்னையறியாமல் அழுகிறாள். குழந்தை ஆசையாய் அவளை நெருங்கும் போது அவளால் என்ன செய்தென்று தெரியவில்லை.

எல்லாம் இன்று முடிந்துவிடும் என்று ஹென்கோய் ஆரூடம் சொன்னதாக சாட்டிலெட்டின் நண்பன் அவனிடம் கூறுகிறான். இதை, உறுதி செய்துக் கொள்ள ஊன்றுகோள் வைத்துக் கொண்டு சாட்டிலெட் அவனை தேடி செல்கிறான். ஹென்கோய் தூங்கும் போது, அகிரின் குழந்தையோடு தற்கொலை செய்துக் கொள்வதுப் போல் ஆரூட அறிவுக்கு தோன்றுகிறது. விழிக்கும் போது அகிரின் தன் அருகில் இல்லாததை பார்க்கிறான். அவளை தேடி அளையும் ஹென்கோய், ஏரிக்கரையில் சாட்டிலெட் அழுதப்படி பார்க்கிறான். இரண்டு கையில்லாத ஹென்கோய் ஏரியில் குதிக்கிறான். கல் கட்டப்பட்ட குழந்தையின் காலையும், அகிரின் உடையையும் பார்க்கிறான். ஹென்கோய் நீந்தமுடியாமல் அவனும் இறக்கிறான்.

அமெரிக்க இராணுவம் இராக் எல்லை பகுதியில் நுழையும் போது யுத்தம் முடிவுக்கு வந்த ஆனந்தம் இல்லாமல் சாட்டிலெட் ஊன்றுகோல் வைத்துக் கொண்டு வெறுமையாக நிற்க்கிறான்.

முக்கியமான கதாப்பாத்திரங்கள் எல்லோரும் சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். சாட்டிலெட் ஆயுத வியாபாரியிடம் கன்னி வெடிக்கு பதிலாக தூப்பாக்கி கேட்கும் காட்சி எதோ மளிகை கடையில் பொருள் வாங்குவது மிக சாதாரனமாக அந்த நாட்டில் வாங்கலாம் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலே இரண்டு கையில்லாத சிறுவனை வைத்து ஹென்கோய் கதாப்பாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். வாய்யால் கன்னி வெடியை செயலிழக்க வைக்கும் காட்சியே அதிர வைக்கிறது. எப்போதும் சோகமான முகத்தில் தோன்றும் அகிரின் கதாபாத்திரம். புத்தகம் சுமக்கும் வயதில் தன் தோளில் குழந்தையை சுமந்து கன்னி வெடி இடையில் விடும்போது அந்த குழந்தையின் மழலை மொழி பார்வையாளரில் இதயத்தை கசிய வைக்கிறது.

அமெரிக்காவின் உடுருவலை இராக் மக்கள் வரவேற்றது போல் காட்டியிருக்கிறார்கள். கருத்தளவில் இந்த படம் ஒரு தலைப்பட்சமாக காட்டப்படுகிறது. அமெரிக்க இராணுவம் வந்தால் மக்கள் பிரச்னை தீரும் என்று நினைத்த சாட்டிலெட், அமெரிக்க இராணுவம் எல்லையில் வந்ததும் எந்த வித உணர்ச்சியில்லாமல் காட்டும் போது ஆயிரம் அர்த்தம் சொல்கிறது.

உலகில் அதிகம் சபிக்கப்பட்ட மனிதர்கள் என்றால் எல்லை பகுதியில் வாழும் மக்களாக தான் இருப்பார்கள். எல்லை யுத்தத்தில் இரண்டு பக்கமும் சேரமுடியாமல் நடுவில் சிக்கி அதிகம் இறப்பது இவர்கள் தான்.

ஆமை புகுந்த வீடு மட்டுமல்ல... அமைதி படை நுழைந்த நாடும் உருப்படாது.

1 comments:

பாலாஜி சங்கர் said...

கடைசி பத்தி

உண்மை

LinkWithin

Related Posts with Thumbnails