Tuesday, October 19, 2010

உலக சினிமா : The Last Emperor

சில சமயம் சரித்திரம் தோன்றவனின் பக்கங்களை மறக்காமல் பதிவு செய்திருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.



வாழ்ந்து கெட்ட குடும்பத்தை பார்த்தால் பலருக்கு பாவமாய் இருக்கும். அவர்கள் செல்வந்தனாக இருக்கும் போது வேலை வாங்கியவர்கள் எல்லாம் வேலை வாங்க நினைப்பார்கள். பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் என்று கூட சிலருக்கு தோன்றும். வாழ்ந்து கெட்ட குடும்பத்திற்கே இந்த கதி என்றால் பல நூற்றாண்டுக்கால மாக வாழ்ந்து சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னனின் நிலையை யோசித்து பாருங்கள். சீனாவை இரு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிங் (Qing) சாம்ராஜ்ஜியத்தின் ( 1644-1912 ) கடைசி மன்னனான புயியின் சுயசரிதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘The Last Emperor’.

1950ல் ரஷ்யர்களின் சிவப்பு படையினரால் கைது செய்யப்பட்டு புயி கைதிகளோடு கைதியாக கொண்டுவருவதில் படம் தொடங்குகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை ஆதரித்த குற்றத்திற்காக ரஷ்ய அரசு அவரை கைது செய்திருந்தது. சிவப்பு படையினருக்கு தெரியாமல் தன் கையை அருத்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், ரஷ்ய படையினரால் காபாற்றப்படுகிறார். அங்கிருந்து படம் பின்னோக்கி செல்கிறது.

மூன்று வயது சிறுவனான புயியை 'சொர்க்கத்தின் மகனாக' ஆசிர்வதிக்கப்பட்டு மன்னர் பொருப்பை ஏற்க Forbitten நகரத்துக்கு கொண்டு வரப்படுகிறான். அம்மாவை விட்டு பிரிந்து அவன் , பணியாளர்கள் தன்னை மரியாதையுடன் நடத்துவதில் ஆரம்பத்தில் பயந்தும், பிறகு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான்.

1912 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்ப்பட்ட குடியுரிமையாட்சியால் தன் மன்னர் அதிகாரத்தை இழக்கிறான். ஆனால், அவரை அரண்மையிலே தங்க அனுமதிக்கின்றனர். பிற்கு அங்கிருந்து வெளியேற்றவும் படுகிறார். அதன் பிறகு படம் மீண்டும் நிகழ் காலத்திற்கு வருகிறது. ரஷ்யர்கள் அவனின் சுயசரிதையில் ஜெப்பான் தன்னை கடத்தி சென்று மிரட்டி அவர்களை ஆதரிக்க வைத்தைப் பற்றி கேள்விக் கேட்கிறார்கள். அவரின் ஆசிரியர் புயி சுயமாக சென்றார் என்று அவர் எழுதிய குறிப்பை காட்டி விசாரிக்கிறார்கள். படம் மீண்டும் பின்னோக்கி செல்கிறது.

ஜப்பானின் ஆசை வார்த்தைகளின் மயங்கி மீண்டும் சீனா வரும் புயி மன்சுக்கோ பகுதியில் பொம்மை மன்னனாக இருக்கிறான். இடையில் அவனின் மனைவி மஞ்சூரியனின் வாரிசை தன் வயிற்றில் சுமந்து பெற்று எடுக்கிறாள். அந்த குழந்தை இறந்து பிறக்கிறது. அதன் பிறகு அவன் மனைவி அவனை விட்டு பிரிகிறாள்.



1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் இறுதி கட்டத்தில் இருக்கும் போது, ரஷ்யர்களிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் போது சிவப்பு படையினர்களால் கைது செய்யப்படுகிறான். படம் மீண்டும் தற்காலத்திற்கு வருகிறது.

மன்னராக வாழ்ந்த புயி கைதிகளோடு சாதாரன கைதியாக நடத்தப்படுகிறான். விடுதலையாகி வெளியே வரும் புயி ஒரு தோட்டக்காரனாக தன் வாழ்க்கையை கலிக்கிறான். தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மாவோ ஊர்வலத்தில் தண்டிக்கப்படும் போது காப்பாற்ற முடியாதவனாக இருக்கிறான். பிறகு, தான் ஆண்ட அரண்மனையின் நாற்காலியில் ஆசையாய் உட்காரும் போது ஒரு சிறுவன் தடுக்கிறான்.

புயி தான் இங்கு மன்னனாக இருந்ததை கூறுகிறான். அந்த சிறுவன் நம்பாமல் அவனை நிறுபிக்க சொல்லும் போதும், அவன் சிறுவயதில் மன்னர் நாற்காலி அடியில் இருக்கும் மறைத்து வைத்த பூச்சியை காட்டுகிறான். ஆறுபது வருடங்களாக வாழும் அந்த பூச்சியை சிறுவன் வாங்கும் போது புயி அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

சுற்றுல பயணிகள் அந்த அரண்மையை பார்வையிடும் போது ஒரு வழ்காட்டி 'கடைசி மன்னனான புயி 1967ஆம் ஆண்டு இறந்தார்' என்று சொல்லும் போது படம் முடிகிறது.

இந்த படம் ஆஸ்கர் (1987) விருந்து, 'BAFTA' (1989) விருது, கோல்டன் க்ளோப் (1988) விருது என்று பல விருதுகள் பெற்றுள்ளது. படம் தோல்வி அடைந்தவனின் வரலாறாக இருந்தாலும் உலகளவில் மிக பெரிய வெற்றிப்பெற்றது.

இன்றும், வாழ்ந்த விற்ற வீட்டை பார்க்கும் போது பலருக்கு தங்களையும் அறியாமல் மனதில் ஒரு ஏக்கம் இருக்கும். இறுதி காட்சியில் தான் ஆண்ட சம்ராஜ்ஜியத்தின் நாற்காலியில் அமரக்கூட ஒரு சிறுவனின் அனுமதி கேட்கும் போது அந்த ஏக்கத்தை விட பெரிய வலியை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.

முஹல் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி பேரரசன் யார் என்றால் எல்லோரும் சொல்லுவது ஔரங்கசீப்பை தான். ஆனால், உருது கவிஞனாக வளம் வந்த பதூர் ஷா ஜாபர் 1857 சிப்பாய் புரட்சி பிறகு வெள்ளையர்களால் பர்மாவுக்கு விரட்டப்பட்ட கதை எத்தனை பேருக்கு தெரியும். அவர் முஹல் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னன் என்று தெருக்கள், பூங்கா பெயர் தான் சொல்லுகிறது. மக்கள் மனதில் இருப்பது ஔரங்கசீப் தான். இன்னும் எத்தனை சாம்ராஜ்ஜியதின் வீழ்ச்சியின் போது கடைசி மன்னன் பெயர் பதிவாகாமல் இருக்கிறது.

பல வாரிசுகள் கொண்ட சாம்ராஜ்ஜியமாக இருந்தாலும் சரி, ஆளுமை திறைமை இல்லாத ஒரே வாரிசாக இருந்தாலும் சரி அந்த சாம்ராஜ்ஜியம் வீழ்வது நிச்சயம். இது வியாபாரத்திற்கும், அரசியல் கட்சிக்கு கூட பொருந்தும்.

1 comments:

asker said...

நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு . dvdworld65.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails