வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 20, 2010

கவிதை உலகம் நூல் இலவசமா !!

இந்த கட்டுரை தொடங்கும் முன்பு இரண்டு சம்பவத்தை சொல்கிறேன்.

*

விடுமுறை நாட்களில் நான் கலந்துக் கொள்ளும் இலக்கிய நிகழ்ச்சிகளில் புத்தக கடை போடுவது வழக்கம். இதில் மூன்று முதல் ஐந்து புத்தகம் தான் அதிகம் விற்கும். இருந்தாலும் மற்ற புத்தகங்கள் வாசகர் பார்வை படுவது ஒரு விளம்பரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் செய்கிறேன்.

அப்போது ஒரு நண்பர், அவர் நடத்தும் மாத இழதை வரும் வாசகர்களுக்கு இலவசமாக கொடுக்க சொன்னார். பழைய இலக்கிய மாத இதழ் இலவசமாக வழங்குவதில் இரண்டு லாபம் உண்டு. ஒன்று மாத இதழுக்கு விளம்பரம். இன்னொரு வீட்டில் இருக்கும் பழைய இதழை காலி செய்வது. நானும் வாங்கி கொண்டு, வந்தவர்களுக்கு கொடுத்தேன். ஒரு முதியவர் இலவசமாக வாங்கிய இதழை கையில் வைத்துக் கொண்டு நான் கொண்டு சென்ற புத்தங்களை ஏதாவது இலவசமாக கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

புத்தகம் இலவசமாக கொடுப்பதிலும் சரி, வாங்குவதிலும் சரி எனக்கு என்றும் உடன்பாடில்லை. அப்படியே புத்தகத்தை இலவசமாக பெற்றுவிட்டால் அதை பற்றி ஒரு மொக்கை விமர்சண பதிவு போட்டு அந்த புத்தகத்தில் இலவச விளம்பரத்தை தேடி கொடுத்துவிடுவேன். எடைக்கு போகும் புத்தகத்தை விட இலவசமாக போகும் புத்தகத்தின் நிலைமை மிகவும் கொடுமையானது. அதை ப் பெற்றி இந்த பதிவில் பேச வேண்டாம்.

இலவசமாக கேட்ட முதியவரிடம், எல்லா புத்தகமும் கழிவு விலையோடு விற்பனைக்கு தான், இலவசம் கிடையாது என்றேன். ஓய்வு பெற்ற ஊழியர் போல் தெரிந்ததால் 20% கழிவு கூட கொடுக்க தயாராக இருந்தேன். ஆனால், அவர் விரும்பியது இலவச புத்தகங்களை தான்.

*

அதே போல், இன்னொரு நிகழ்ச்சியில் இரண்டு சிறுவர்கள் 'காந்தி வாழ்ந்த தேசம்' வேண்டும் எடுத்து பார்த்து விலையை கேட்டார்கள். ரூ.45 யான புத்தகத்தை சிறுவர்களுக்காக ரூ.35 என்றேன். அம்மாவிடம் கேட்டு பணம் வாங்கி வருவதாக இந்த சிறுவர்கள் புன்னகையோடு சென்றனர்.

இன்று சிறுவர்கள் புத்தகத்தை மதிக்கும் அளவிற்கு பெரியவர்கள் மதிப்பதில்லை என்பது இந்த இரண்டு சம்பவத்தில் புரிந்துக் கொண்டேன். ஆனால், சிறுவர்கள் விரும்பிய புத்தகத்தை வாங்க பெற்றோர்களை நம்பி இருக்க வேண்டிய நிலைமை.

*

இப்படி புத்தகம் எழுதுவதை விட புத்தகம் விற்பனை சவாலானது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியில் கடை வைக்கும் போது உணர முடிந்தது. புத்தகங்கள் விற்பனையாகாவிட்டாலும் இது போன்ற வித்தியாசமாக மனிதர்களை சந்திப்பதற்காகவே கடை வைக்கிறேன். என்னைப் போல் சிறு பதிப்பாளர்கள் இன்னும் பல சவால்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

புத்தகங்கள் விற்பனையாகவில்லை, சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று பல விமர்சனங்களுக்கு நடுவில் தான் பதிப்பகத் துறை இயங்கி வருகிறது. ஆனால், இதில் முத்தெடுத்த ஜான்பாவான் பார்க்கும் போது நஷ்டத்தில் இயங்கும் தொழிலாக இருக்காது என்ற நம்பிக்கையில் தைரியமாக களத்தில் குத்தித்தேன்.

இலவச பிரியர்களுக்கு நடுவில் லாபம் பார்க்க வில்லை என்றாலும் குறைந்த அளவு நஷ்டம் அடையாமல் இருக்க கவிதை தொகுப்பு நூலை வெளியிட திட்டமிட்டு அரும்பு முயற்சியாக 'காந்தி வாழ்ந்த தேசம்' கவிதை நூலை வெளியிட்டேன். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்தோடு வெளியிட்ட நூல் என்றாலும், இந்த நூலில் நாகரத்னா பதிப்பகத்திற்கு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. வருடத்திற்கு இது போன்ற கவிதை நூல் வெளியிடலாம் என்ற யோசனையில் இந்த வருடம் 'கவிதை உலகம்' என்று வெளியிட்டேன்.



வேலூர் புத்தகக் கண்காட்சியில் நானே எதிர்பார்க்காத அளவிற்கு 'கவிதை உலகம்' நூல் சக்கை போடு போட்டது. கவிதை நூலுக்கு வெளியூரில் வரவேற்பு உண்டு என்பதை வேலூர் புத்தகக் கண்காட்சி உணர்த்தியிருக்கிறது என்று சொல்லலாம். கவிதை நூல் என்பதால் குறைந்த பிரதிகள் போட்டுவிட்டோமே என்ற என்னை நானே திட்டிக்கொண்டேன். இதில் வேதனை என்னவென்றால் இங்கும் இலவச பிரியர்கள் என்னை விடவில்லை.

கவிதை உலகம் நூலில் எழுதிய ஒரு சிலர் புத்தகத்தை தனக்கு அனுப்ப வேண்டும் என்ற அதிகார தோரனையில் கேட்கிறார்கள். அதாவது, புத்தகத்தை இலவசமாக என் சொந்த செலவில் அனுப்ப வேண்டும் என்பது தான் அந்த நண்பர்களின் வேண்டுகோள்.

தங்கள் கவிதை இடம் பெற்ற புத்தகத்தையே இலவசமாக வாங்க நினைப்பவர்கள் மற்றவர்கள் புத்தகங்கள் பணம் கொடுத்து தான் வாங்குகிறார்களா என்று தெரியவில்லை. நூலில் இடம் பெற்ற எந்த எழுத்தாளரையும் புத்தகம் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அதே சமயம் இலவசமாக கொடுக்க முடியாது என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

நூல் வாங்க விரும்புவர்கள்…

நேரடியாக என்னை தொடர்பு (99404 48599) கொண்டு வாங்கலாம்.

இணையத்தில் இங்கே வாங்கலாம்.

டிஸ்கவரி புக் ஃபெலஸ், கே.கே.நகர் புத்தக கடையில் வாங்கலாம்.

குறைந்த பிரதி போட்டிருப்பதால், வேறு எங்கும் விற்பனைக்கு கொடுக்கவில்லை.

1 comment:

Anonymous said...

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

(if u use the hack mentioned in the above link ur blg doesnt show contents in the static page...this is the only limitation)

LinkWithin

Related Posts with Thumbnails