Thursday, March 18, 2010

குண்டக்க மண்டக்க - 23



ஒருத்தனுக்கு நேரம் சரியில்லனா, பேட்ஸ்மென் சிக்ஸர் அடிச்சாலும் அம்பையர் ஒவுட் கொடுப்பான். அந்த மாதிரி தான் நம்ப வடிவேலு. சிங்கமுத்துவோட கோர்ட் கேஸ் பிரச்சனை நடுவுல கொஞ்ச நாள் வெளிநாடு போலாம் இருந்தாரு. இந்த முடிவுக்கு வர சிங்கமுத்து மட்டும் காரணம் இல்ல. பார்த்திபனும் தான். தினமும் போன் குடைச்சல் கொடுத்திட்டே இருந்தா பாவம் மனுஷன் என்னத்த பண்ணுவான். நாளைக்கே பார்த்திபன் கோர்ட்ல தனக்கு எதிரா சாட்சி சொன்னா என்ன பண்ணுறது பயம் வேற. இவங்க கிட்ட எல்லாம் தப்பிச்சு... கொஞ்ச நாள் சிங்கப்பூர் போலாம்னு பாஸ்போர்ட், விசா வாங்கி ப்ளைட் ஏறி உக்காந்தாரு. அதுக்கப்புறம் நடக்குற கூத்த நீங்களே படிங்க...

வடிவேலு : அப்பாடா ! ஒரு வழியா ப்ளைட்ல வந்து உக்காந்தாச்சு. எந்த பையங்களும் தொல்ல பண்ணமாட்டான்.

இப்படி மனதில் நினைத்து முடிப்பதற்குள் யாரோ பக்கத்தில் அதிரடியாய் அமர்கிறார். திகிலுடன் வடிவேலு திரும்பி பார்த்தால்.... ஒரு சர்தார்ஜி.

வடிவேலு : (பயத்தில் ) யோவ் ! சொல்லிட்டு வரக்கூடாது... யாரோ என்னவோ பயந்திட்டேன்.
சர்தார்ஜி : க்யா...!

வடிவேலு : தமிழ் தெரியாதா ! எதோ தமிழ் தெரிஞ்சவனா இருந்தா போறவரைக்கும் பொழுது போகும்...! ம்ஹூம்.
சர்தார்ஜி : தமிழ் தெரியும் ! நீங்க சொன்னது கேட்கல...!

வடிவேலு : எப்படியா கேட்கும் ? காதுவரைக்கும் மீசை, தாடி வளர்த்திருக்க... போத குறைக்கு தலையில டர்ப்பன் வேற !
சர்தார்ஜி : சர்தார்ஜி பத்தி கேலி பண்ணுற...! கண்டிப்பா நீ பாகிஸ்தான் தீவிரவாதியா இருக்கனும்.

வடிவேலு : ஆஹா ! நாம பேசுனாலே அரசியலாக்குறாங்களே ! நா எதுவும் தப்ப சொல்லல்ல சார் ! ( மனதுக்குள் ) ஊர் போய் சேர வரைக்கும் வாயே திறக்க கூடாது.
சர்தார்ஜி : நா உக்காரும் போது என்ன மேன் சொன்ன ..?

வடிவேலு : ஒண்ணும் சொல்லலையே !!
சர்தார்ஜி : அப்போ ! என்ன பத்தி எங்க ஆளுங்கள பத்தி அசிங்கமா எதோ பேசியிருக்க.. நீ பாகிஸ்தான் தீவிரவாதி தான். ப்ளைட ஹைஜேக் பண்ண வந்திருக்கியா...!!

வடிவேலு : ஐயோ ! ஐயோ !! (தலையில் அடித்துக் கொண்டு ) இப்ப தான் கோர்ட் கேஸ் அலையுறேன். இது வேறயா ! ( என்ன சொன்னோமுனு சொல்லிடுவோம்) சொல்லிட்டு வரக்கூடாது... யாரோ என்னவோனு பயந்திட்டேன்.
சர்தார்ஜி : சொல்லிட்டு வரத்துக்கு உன் வீட்டுக்கா வந்திருக்கேன். இது ப்ளைடுடா...!

சர்தார்ஜி சொன்னது வடிவேலுக்கு தூக்கி வாடிப்போட்டது.

வடிவேலு : இந்த கவுன்டர் டையலாக் சொல்லுறதுக்கா இவ்வளவு நேரம் என்ன சொன்ன நச்சரிச்சியா ! நீ பேசுனதும் என்ன தூக்கி வாரி போட்ட மாதிரி இருக்கு.
சர்தார்ஜி : ( குரல் மாற்றி) டேய் ! ப்ளைட் டேக் ஆப் ஆகும் போது சீட் பெல்ட் பொடலைன்னா அப்படி தான் இருக்கும்.

வடிவேலு : (பயத்தில் ) என்னைய்யா குரல மாத்தி பேசுற,,!
சர்தார்ஜி : இது தான் என் ஒர்ஜினல் குரல். இவ்வளவு நேரம் குரல்ல மாத்தி பேசுன...

வடிவேலு சர்தார்ஜியை உற்று பார்த்ததும் அந்த தாடிக்குள் இருக்கும் முகம் யார் என்று தெரிந்தது. சாச்சாத்... கிருஷ்ண பகவான் யாருக்கு சாரதியாக இருந்தாரோ அவனே தான்... பார்த்திபன்.

ப்ளை டேக் ஆப் ஆகவில்லை. 'ஆப்பு'ம் சேர்த்து வைத்துள்ளது.

6 comments:

கமல் said...

கடைசியிலை கொண்டு வந்து கவிழ்த்துப் போட்டீங்கள். பாவம் வடிவேலு:))

செந்தில் நாதன் said...

நல்ல காமெடி...:)

வரதராஜலு .பூ said...

பாவம்ங்க வடிவேலு. உங்க கிட்டேயும் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. அதுக்கு எந்த ஊருக்கு போவாருன்னு தெரியல.
:)

Balaji K said...
This comment has been removed by the author.
otteri selvakumar said...

wow...

கவிதை காதலன் said...

பாவங்க வடிவேலு.. இதைப்படிச்சா அவருடைய காமெடியில சேர்த்துக்குவாரு

LinkWithin

Related Posts with Thumbnails