
பால்யத்தில் நாம் மற்றக்க முடியாது இடங்களை கேட்டால் வாழ்ந்த வீடு, ஊர், படித்த பள்ளி என்று பட்டியலிடும் போது கண்டிப்பாக படம் பார்த்த திரையரங்கு இருக்கும். வெளியூராக இருந்தாலும் சிறுவயதில் பார்த்த திரைப்படம் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட திரையரங்கில் வாழ்ந்து வளர்ந்த சிறுவனின் அனுபவம் தான் 'சினிமா பாரடைசோ'
ரோம் நகரில் பிரபகல இயக்குனராக வாழும் செல்வதோருக்கு தன் சொந்த ஊரில் அல்பிரதோ என்பவர் இறந்து விட்ட செய்தி வருகிறது. லட்சியத்திற்காக முப்பது வருடங்களாக தன் சொந்த ஊருக்கு போகாத சல்வதோர் முகத்தில் சோகம் படிகிறது. சொந்த ஊரின் நினைவுகள் மெல்ல வரதுவங்குகின்றன.
ஆறு வயதில் டோடோ என்ற சல்வதோர் சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளான். அவன் Cinema Paradiso என்ற திரையரங்கில் ப்ரோஜேக்டராக வேலை செய்யும் அல்பிரதோவின் நட்பு கிடைகிறது. வெளியாகும் படம் மக்கள் பார்க்கும் முன்பு முதலில் பாதரியாருக்கு போட்டு, நீக்க வேண்டிய முத்த காட்சிகளை நீக்கி வெளியிடுவார். அப்படி நீக்கிய பிலிம் சுருலை டோடோ அல்பிரதோவிடம் கேட்கிறான். நேரம் வரும் போது தருவதாக கூறி, அதுவரை தன்னிடம் இருக்கட்டும் என்று சொல்கிறான்.
ஒரு விபத்தில் அல்பிரதோ தனது இரண்டு கண்களை இழந்துவிடுகிறான். அல்பிரதோவுக்கு பதிலாக டோடோ அதே திரையரங்கில் பிரோஜேக்ரகாக வேலைக்கு சேர்கிறான். அல்பிரதோ, டோடோவின் நட்பு இன்னும் நெருக்கமாகிறது.
இதுவரை சிறுவனாக இருந்த டோடோ, இப்போது வளர்ந்து வாலிபனாகிறான். அவனுடன் படிக்கும் எலினா வை பார்த்ததும் காதலிக்கிறான். முதலில் மறுக்கும் எலினா பிறகு அவன் காதலை ஏற்கிறாள். இவர்களின் காதலுக்கு எலினாவின் பெற்றோர்களிடம் எதிர்ப்பு வர, இருவரும் ஊரைவிட்டு செல்ல திட்டம் போடுகிறார்கள். எலினாவுக்காக தனது திரையங்கில் காத்துயிருக்கிறான். காத்திருந்து பொறுமை இழந்த செல்வதோர் அவளை தேடி அவள் வீட்டுக்கு செல்கிறான். அவள் அங்கு இல்லை. மனமுடைந்து இராணுவத்தில் சேர்கிறான்.
இராணுவ சேவை முடிந்ததும் ஊருக்கு வரும் செல்வதோரிடம் அல்பிரதோ ஊரை விட்டு செல்ல சொல்கிறான். உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அதை அடையும் வரை திரும்பி வராதே என்று அறிவுரை கூறி அனுப்புகிறான்.
இந்த இடத்தில் செல்வதோர் நினைவுகள் முடிகிறது. தனது ஊருக்கு சென்று அல்பிரதோ சவ ஊர்வலத்தில் கலந்துக் கொள்கிறான். அல்பிரதோவின் மனைவி செல்வதோருக்கு கொடுக்க சொன்னதாக சொல்லி ஒரு பரிசு கொடுகிறாள். அங்கு அவன் தனது பழைய காதலி எலினாவை பார்க்கிறான். அவளை பார்த்து அன்று வராததிற்கு காரணம் கேட்கிறான். அதற்கு அவள் பதில் செல்வதோருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அன்று செல்வதோர் பார்க்க திரையரங்குக்கு வந்திருந்தாள். அப்போது அல்பிரதோ செல்வதோர் எதிர்காலத்தை பற்றி கூறி அவனை விட்டு செல்ல சொல்லியதை கூறுகிறாள். அதை கேட்டு செல்வதோர் அதிர்ச்சி அடைகிறான்.
"என்னை நீ கல்யாண்ம் பண்ணியிருந்தா, இவ்வளவு பெரிய ஆளாகியிருக்கமாட்ட" என்று சொல்லி எலினா அழுகிறாள். தந்தையில்லாத தனக்கு ஒரு தந்தையாக இருந்த அல்பிரதோ செய்ததை நினைத்து சல்வதோர் கலங்குகிறான்.
மீண்டும் ரோமுக்கு வந்து அல்பிரதோ கொடுத்த பரிசை பார்க்கிறான். அது அவன் சிறுவயதில் அல்பிரதோவிடம் விரும்பி கேட்ட நீக்கப்பட்ட முத்த காட்சியின் பிலின் சுருல்கள். செல்வதோர் கண்ணீருடன் அந்த படத்தை பார்த்தப்படி படம் முடிகிறது.
திரையரங்கில்.... ஒயாமல் எச்சில் துப்புபவர், தூங்குபவர், கதை சொல்லுபவர், உறவுக்காக பெண்ணை அழைத்து வருபவர், பெண் மீது கை போடுபவர் என்று நிஜ வாழ்வில பார்த்த மனிதர்களை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.
ஆரம்பத்தில் வரும் சிறுவன் டோடோவும், அல்பிரதோ காட்சிகள் நகைச்சுவை கலந்து இரவருக்கு ஏற்படும் நெருக்கத்தை அழகாக காட்டுயுள்ளார் இயக்குனர். இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளவரும் செல்வதோர் தன் அம்மாவிடம் பேசும் வசனம் ஒவ்வொருவரின் இறுதிகாலத்தின் மன குமுறலின் தொகுப்பு.
1989ல் வெளியான இந்த இத்தாலிப்படம் ஆஸ்கர் விருது, கேன்ஸ் திரைப்பட விழா விருதுகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகின் மிக உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த படத்தை இயக்கியவர் 'Guiseppe Tornatore'. சிறுவனின் உலகம் , வாலிபனின் காதல் என்று உணர்வு புர்வமாக படமாக்கிய இவர் இத்தாலி இயக்குனர்களில் மிக முக்கியமானவர். இவர் இயக்கிய 'Legend of 1900' படத்தை முன்பே எழுதியுள்ளேன்.
சஃபையர், ப்ளூ டைமன், மூகாம்பிகை போன்ற பல திரையரங்குகள் அடையாளத்தை இழந்து சாதான அடுக்கு மாடி கட்டிடமாக காட்சியளித்தாலும், நினைவுகளில் படம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
0 comments:
Post a Comment