வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 6, 2009

கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா - ஓர் எதிர்வினை

கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது. அதுமட்டமில்லை... எம்.ஆர்.பியை விட 3 ரூபாய் அதிகமாக கொடுப்பது தான் அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. கேபிள் சங்கர் இவ்வளவு சுயநலமானவர் என்று நான் நினைக்கவில்லை.



டாஸ்மாக் கடையில் ஒரு ப்ளாஸ்டிக் க்லாஸ்யின் (அசல் விலை 1 ரூ.) விலை 2.5 ரூபாய். ஒரு வாட்டர் பாக்கெட்டின் (அசல் விலை 1 ரூ) விலை 2.5 ரூபாய். ஆக, ஒரு க்வாட்டர் குடிப்பவன் கண்டிப்பாக ப்ளாஸ்டிக் க்லாஸ், தண்ணீர் இல்லாமல் குடிக்க முடியாது என்பதால் அவன் வாங்கி தான் திற வேண்டும். இதில் 3 ரூபாய் டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறான். ஒரு நாளைக்கு 200 பேர் குடிக்கிறார்கள் என்றால், 600 ரூபாய். மாதத்திற்கு 18,000 ரூபாய்.

டாஸ்மாக்கில் கடை போட்டு முட்டை, சிக்கன் விற்பவன் தனக்கு ஆகும் விற்பனையில் இருந்து 2 சதவீதம் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆதாவது நீங்கள் வாங்கும் சிக்கன், மட்டன், பீப், கடலை, ஆம்லேட் எல்லாவிற்றில் இருந்து இரண்டு சதவீதம் கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் வாங்கி குடிப்பவர்கள் யாரும் பில் வாங்குவதில்லை. ஒரு நாளுக்கு இவ்வளவு தான் சேல்ஸ் என்று சொன்னாலும் நம்பி தான் ஆக வேண்டும். அதில், டாஸ்மாக் அநியாய லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இது எல்லாம் போக் நீங்கள் குடித்து விட்டு பாட்டில் அங்கேயே வைத்து விட்டு வந்தால், பழைய கடையில் ஒரு பாட்டில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 200 பாட்டில் என்றால் 200 ரூபாய். ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய். வருடத்திற்கு 72,000 ரூபாய்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக... இரவு 10 மணிக்கு கடையை மூட வேண்டும். ஆனால், 9:45 மணிக்கு 'Closed' என்பான். நீங்கள் கேட்டால், அக்கௌண்ட்ஸ் பார்த்து மூட வேண்டும் என்பான். கொஞ்சம் குரலை உயர்த்தி செட்டு சேர்ந்து கத்தினால் கொடுப்பான். சில சமயம் செட்டு சேரவில்லை என்றால்... அவ்வளவு தான். தர மாட்டான். 10 மணிக்கு மேல், 60 ரூபாய் க்வாட்டரை அங்கு சிக்கன் கடை போட்டவன் 100 ரூபாய்க்கு விற்பான். அந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் சொல்லும் விலையில் வாங்கி தான் ஆக வேண்டும். இதில் டாஸ்மாக் அநியாய அநியாயத்திற்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களிடம் பங்கு வாங்குவதற்கு போலீஸ் காத்திருப்பு தனி கதை...!!

டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

7 comments:

thamizhparavai said...

kalakkal....

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்\\

நம்மைப்போல் Part-time குடிகாரனுக்குத்தான் தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படும். Full-time குடிகாரர்களுக்கு தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படாது.

அவிங்கயெல்லாம் ‘ராவா’வே அடிப்பாய்ங்க.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எனவே அதைப்பற்றியெல்லாம் எழுதியிருக்கமாட்டார்.

இராகவன் நைஜிரியா said...

டாஸ்மார்க்கில் இவ்வளவு அக்கிரமம் நடக்குதுங்களா?

விலை மட்டும்தான் அதிகம் என்று நினைத்தேன். ஹோட்டலில் சாப்பிட்டபின் டிப்ஸ் கொடுப்பது மாதிரி இதெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் போலிருக்கு..

Cable சங்கர் said...

/நம்மைப்போல் Part-time குடிகாரனுக்குத்தான் தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படும். Full-time குடிகாரர்களுக்கு தண்ணி, க்ளாஸ் எல்லாம் தேவைப்படாது. //

அலோவ்.. விட்டா போதையிலதான் பதிவெழுதறேன்னு சொல்வீங்க போலருக்கே..

Cable சங்கர் said...

குகன்.. பார்.. லட்சணங்களை பற்றி தனியே மூணு பதிவெழுதலாம்.

Unknown said...

//கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது.//

இந்த வரியைப் படிச்சதும் யாரோ டாஸ்மாக் பக்கமே எட்டிப்பாக்காதவர் கேபிளைக் கிழிக்கப் போகிறார் என்று நினைத்தேன். மேலும் படித்துப் பார்த்தால் என் நினைப்பில் ஒரு ஃபுல்லே விழுந்த்து விட்டது..

LinkWithin

Related Posts with Thumbnails