நீயூ ஓர்லியன்ஸ் மருத்துவமனையில் வயதான டைசி இறக்கும் தருவாயில் தன் மகள் கேரோலினிடம் கடிகாரம் செய்யும் குருட்டு மனிதனை பற்றி சொல்கிறாள். அந்த மனிதன் முதல் உலக போரில் இருந்த தன் மகனை உயிருடன் கொண்டு வர பின்புரமாக சுற்றும் கடிகாரத்தை செய்கிறார். முதல் உலக போரில் இருந்தவர்களை மீட்டு தரும் என்ற நம்பிக்கையுடம் நீயூ ஓர்லியன்ஸ் ரயில் நிலையத்தில் மாட்டுகிறான்.
வயதான குருட்டு மனிதனை பற்றி சொன்ன பிறகு தன் கணவர் ‘பெஞ்ஜிபன் பட்டன்’ பற்றி சொல்கிறாள். முதல் உலக போர் முடிந்த மகிழ்ச்சியான நேரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறந்தவுடன் 'அம்மாவும்' இறந்துவிடுகிறாள். தன் மகனை பார்த்த தாமஸ் பட்டன் மனைவி இறந்ததை விட பெரும் அதிர்ச்சி அடைகிறான். அந்த குழந்தை தோல் சுருங்கி, தோழு நோய் வியாதியுடன் பிறந்தது போல் இருந்தது. முதலில் அந்த குழந்தையை கொல்ல நினைக்கும் தாமஸ், பிறகு ஒரு முதியோர் இல்லத்தில் போட்டு விட்டு செல்கிறான். முதியோர் காப்பகத்தை பராமரிக்கும் குயினி, டிச்சி தம்பதியர்கள் அந்த ஆண் குழந்தையை வளர்கிறார்கள். குயினி அந்த குழந்தைக்கு ‘பெஞ்ஜிபன்’ என்று பெயர் வைக்கிறாள்.

பெஞ்ஜிபன் ஒவ்வொரு நாளும் வயது குறைந்துக் கொண்டே வருகிறான். அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு பாட்டியின் பேத்தியாக சிறுமி டைசி பெஞ்ஜிபனிடம் நட்போடு பழகுகிறாள்.
கொஞ்சம் வயது குறைந்த பிறகு கேப்டன் மைக்குடன் கப்பல் பயணம் மேற்கொள்கிறான். குடி, குட்டி என்று ஒவ்வொன்றையும் பெஞ்ஜிபனுக்கு அறிமுகம் படுத்துகிறான். அப்படி ஒரு சமயத்தில் பெஞ்ஜிபன் அவன் தந்தை தாமஸ் பட்டனை சந்திக்கிறான். தாமஸ்க்கு பெஞ்ஜிபன் தன் மகன் என்று தெரிந்தும் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது மனிதன் போல் பழகுகிறான். இதற்கிடையில் திருமணமான எலிசபத் என்ற பெண்ணோடு காதல் ஏற்ப்படுகிறது. இரண்டாம் உலக போரில் ப்யர்ல் ஹார்பர் தாக்குதலால் அவள் தங்கி இருந்த இடத்தை விட்டு செல்கிறாள். பெஞ்ஜிபன் பயணம் செய்யும் கப்பலையும் எதிரிகள் தாக்கி அழிகின்றனர். மைக் உட்பட பலர் இறக்கின்றனர்.
பல வருடங்கள் கலித்து பெஞ்ஜிபன் தன் காப்பகத்துக்கு வரும் போது டைசியும் வருகிறாள். இப்போது, பெஞ்ஜிபன் இளமையுடம் இருப்பதை பார்த்து டைசி பிரம்மிக்கிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இதற்கிடையில் இறக்கும் தருவாயில் பெஞ்ஜிபனின் தந்தை தாமஸ் தன் சொத்துக்களை எல்லாம் அவன் பெயரில் எழுதிவிட்டு இறக்கிறார்.
ஒரு விபத்தில் காலில் அடிப்பட்ட நிலையில் டைசியை பெஞ்ஜிபன் திருமணம் செய்துக் கொள்கிறான். இவர்களின் மண வாழ்க்கையில் ஒரே சிக்கல்.. டைசியின் வயது ஏறிக் கொண்டு இருக்கிறது. பெஞ்ஜிபன் இளமையாகி கொண்டு இருக்கிறான். இருவருக்கும் ‘கரோலின்’ என்ற பெண் குழந்தை பிறக்கிறது. தான் இந்த குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியாது என்ற சந்தேகம் பெஞ்ஜிபன் மனதில் தோன்றுகிறது. இதனால், டைசியை விட்டு செல்கிறான்.
பல வருடங்கள் கலித்து விடலை வாலிபனாக பெஞ்ஜிபன் டைசியை சந்திக்க வருகிறான். அப்போது, டைசி இன்னொருவனின் மனைவியாக இருக்கிறாள். அவள் மகள் கரோலின் 12 வயது சிறுமியாக இருக்கிறாள். அதன் பிறகு, பெஞ்ஜிபன் டைசியை பார்க்க வரவில்லை.
இன்னும் சில வருடங்களுக்கு பிறகு, டைசிக்கு ஒரு போன் வருகிறது. பெஞ்ஜிபன் என்ற சிறுவன் டைரியில் அவள் பெயர் இருந்ததால் அவளை தொடர்பு கொண்டதாக சொல்கின்றனர். டைரி பெஞ்ஜிபனை பார்க்கும் போது அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. அதன் பிறகு, டைசி பெஞ்ஜிபன் சிறு கை குழந்தை ஆகும் வரை கவனித்துக் கொள்கிறாள். அவன் இறக்கும் நேரத்தில் அவன் கண்கள் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டு இருப்பதை உணர்த்துவது போல் இருந்தது என்று டைசி கரோலின் சொல்லி அவளும் இறக்கிறாள்.
கண் தெரியாத கிழவன் செய்த பின் புறமாக சுற்றும் கடிகாரம் ஒரு கட்டிடத்தின் அடிப்பகுதியில் இருப்பது போல் கதை முடிகிறது.
பெஞ்ஜிபனாக ப்ராட் பிட் நடித்துள்ளார்....இல்லை வாழ்ந்துள்ளார். ஆஸ்கர் விருது குறிவைத்து நடித்தது போல் இந்த படத்தில் அவருக்கு ஒப்பனைகளும், காட்சிகளும் அமைத்துள்ளனர். ஆனால், பாவம் இறுதி சுற்று வரை சென்ற அவரால் ஆஸ்கர் விருது பெறமுடியவில்லை.
டைசியாக கேட் ப்லன்ச்சேட். பெஞ்ஜிபினை காதலிக்கும் போது, கால் உடைந்து மருத்துவமனையில் இருக்கும் போது சரி... நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக... விடலை பருவத்தில் வரும் பெஞ்ஜிபனை நரைத்த முடியோடு இருக்கும் டைசி பார்க்கும் பார்வையும், உருகுவது நல்ல நடிப்பு.
ஒப்பனை உட்பட மூன்று ஆஸ்கர் விருது இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. வித்தியாசமான கதை என்றாலும், பெஞ்ஜிபன் எப்படி கிழவனாக பிறந்து குழந்தையாக இறக்கிறான் என்று அறிவியல் ரிதியான காரணத்தை சொல்லவேயில்லை. பின்புறமாக சுத்தும் கடிகாரத்தை செய்த கிழவனுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்மந்தம் என்ற தெரியவில்லை.
திரைக்கதை மெதுவாக நகர்வதால் கொஞ்சம் பொறுமையாக தான் பார்க்க வேண்டும்.எல்லா சமயத்தில் வியாபார ரிதியாக இது போன்ற படங்கள் வெற்றி பெற முடியாது. இருந்தாலும், ஒரு சிறுகதை மையமாக வைத்து இப்படி ஒரு திரைக்கதை அமைத்து ஆஸ்கர் விருது பெற்றுயிருக்கிறார்கள் என்றால் அதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.
0 comments:
Post a Comment