வடிவேலு நினைத்தது போல் இயற்கை வளம் கொண்ட ஒரு கிராமத்தில் பெட்டி கடை தொடங்கி தன் வாழ்க்கை நடத்துகிறார்.
வடிவேலு : அப்பாடா.... இந்த அமைதியான கிராமத்துல 'பார்த்திபன்' பைய இல்லாமா எவ்வளவு நிம்மதியா இருக்கோம். என் வாழ்க்கை முழுக்க இப்படி இருந்திட்டா வருஷா வருஷம் பழனிக்கு வந்து காவடி தூக்குறேன் முருகா...
ஜோசியர் : என்ன வடிவேலு... வேண்டுதல் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு..
வடிவேலு : அத ஏன் கேக்குறீங்க ஜோசியரே.... நான் பட்டனத்துல இருக்குறப்போ ஒருத்தன் என்ன விடாமா தொல்ல கொடுத்திட்டு இருந்தான். அவ கிட்ட காப்பாத்து கேட்டுட்டு இருந்தேன்.

ஜோசியர் : பட்டனத்துல இருக்குறவன் இங்க எதுக்கு வர போறான்.
வடிவேலு : எனக்கு தொல்ல கொடுக்கனும்னா அவன் எமலோகத்துல கூட வந்து கொடுப்பான்.
ஜோசியர் : எங்க உன் கைய காட்டு...
வடிவேலு கையை நீட்டினார்.
ஜோசியர் : உனக்கு பெரிய தோஷம் இருக்கு. அதான் உனக்கு கல்யாணம்னு ஆகல்ல.... உன்ன ஒருத்த தொல்ல கொடுக்குறதுக்கு அதான் காரணம்.
வடிவேலு : அப்படியா... தோஷம் போக என்ன பண்ணனும்
ஜோசியர்: உனக்கு தொஷம் நிவர்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும். அப்படி செஞ்சா யாரும் உன்ன அடிக்கவே மாட்டாங்க.
வடிவேலு : வயசு ரொம்ப ஜாஸ்தியா இருக்கே... பேசாம ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிகலா மா
ஒரு குரல் பின்புறத்துலிருந்து: ஏன் ? நாலு 9 கட்டிக்கோயேன்
வடிவேலு : ஐயோ..இது அவன் குரல் மாதிரி இருக்கே....
பார்த்திபன் : என் குரல் என்ன மாதிரி இல்லாம.... இந்த ஜோசியர் மாதிரியா இருக்கும்.
வடிவேலு : அடபாவி...உனக்கு பயந்திட்டு தான் குக்கிராமத்துக்கு வந்தேன். இங்கையும் வந்துட்டீயா..
பார்த்திபன் : இந்த குக்கிராமத்துக்கு... ஒரு 'குக்' வேணும் சொன்னாங்க. அதான் நானே வந்திட்டேன்.
வடிவேலு : ஐயோ.. முடியல்ல... உனக்கு என்னப்பா வேணும்..
பார்த்திபன் : பழம் வேணும். ஒரு வாழைப்பழம் எவ்வளவு...?
வடிவேலு: (முறைத்தப்படி) ஒரு ரூபா
பார்த்திபன் : 50 பைசாக்கு வராதா ?
வடிவேலு : 50 பைசாக்கு தொல் தான் வரும்
பார்த்திபன் : இந்த 50 பைசா. தொல வச்சுகிட்டு பழத்த கொடு
வடிவேலு : ஏன் இப்படி கொடும படுத்திற... இந்த பெட்டிக்கடையில கடைசி வரைக்கும் நிம்மதியா இருக்கலாம்னு இருந்தேன். விடவே மாட்டியா..
பார்த்திபன் : ஓ... இது தான் பெட்டிக் கடையா. எனக்கு ஊருக்கு எடுத்திட்டு போற மாதிரி ஒரு 'வி.ஐ.பி' பெட்டி கொடு
வடிவேலு : டேய்... உனக்கே கொஞ்ச ஓவராயில்ல. பெட்டி கடைனா.... பெட்டி விக்கிற கடையில்ல... பெட்டி சைஸ்ல சிக்ரெட்,பன்னு, கூல் ட்ரிக்ஸ் விக்குற கடை... போதுமா !!
பார்த்திபன்: அப்போ...உன் கடையில எல்லா பன்னும் கிடைக்குமா ?
வடிவேலு : கிடைக்கும்
பார்த்திபன்: அப்படினா... எனக்கு....1 கிலோ ரிப்பன், 1 கிலோ கார்பன் கொடு
வடிவேலு : ச்ச்சு…மனுஷன பொறந்தா வெட்கம், மானம், சுடு சுரணையிருக்கனும்... உன்ன எவ்வளவு திட்டியும் என் பின்னாடி வந்து தொல்ல கொடுக்குறீயே...உனக்கு அசிங்கமாயில்ல...
பார்த்திபன்: நான் மனுஷ்னா பொறக்கலையே.... குழந்தையா தான் பொறந்தேன்.
வடிவேலு : டேய்.. அறிவுக்கெட்டவனே... எது சொன்னாலும் ஒரு 'கௌவ்வுன்டர்' (Counter) கொடுத்திட்டே இருக்கனும்னு பேசாத...
அந்த வழியாக சென்ற ஒருவர் வடிவேலு பார்த்து....
ஒருவர் : என்ன வடிவேலு 'கவுன்டர' பத்தி ஏதோ பேசுற மாதிரி இருக்கு...
வடிவேலு : (அடபாவி... ஜாதி பத்தி பேச ஆரம்பிச்சிட்டானே....)
பார்த்திபன் : ஓ.... இவ ஜாதிய பத்தி தான் ரொம்ப கேவலமா பேசுனியா....
ஒருவன் : எங்க ஜாதிய பத்தி என்னடா பேசுன....
வடிவேலு : அண்ணே.... நான் ஒண்ணும் பேசல... சொல்லுறது கேளுங்க...
ஒருவன் : இல்ல... நீ எதோ பேசுன... சொல்லு. உன்ன சும்மா விடமாட்டேன்...
வடிவேலு : அவ எதோ பைத்தியம் மாதிரி சொல்லுறான். அத கேட்டு நீங்களும் என் கிட்ட சண்டைக்கு வருறீங்களே...
ஒருவன் : அப்போ பைத்தியன் பேச்ச கேக்குற ஆளுனு என்ன சொல்லுற... உன்ன சும்மா விட கூடாது.
வடிவேலு கடையில் இருக்கும் ஒரு பாட்டிலை உடைக்கிறார். அப்போது இன்னொருவர் அந்த வழியாக வருகிறான்.
இன்னொருவன் : டாய்... எங்க ஜாதி வடிவேலு கடைய உடைக்குற... அந்த 'ஒருவனை அடிக்கிறான். அதை பார்த்த ஒருவனின் ஜாதியினர் இன்னொருவரை அடிக்கின்றனர். இப்படி ஒருவன், இன்னொருவன் சண்டையால் பெரிய ஜாதி கலவரமே நடந்து வடிவேலு கடை உட்பட பல பொருட்கள் சேதம் ஏற்ப்பட்டன.
ஜாதி கலவரத்திற்கு காரணமாக 'வடிவேலுவை' போலீஸ் வலைவிசி தேடுகிறது.
5 comments:
good
neengal cinemavil try pannalam.very good sir .
// pukalini said...
good //
Thank you :)
//MUTHU said...
neengal cinemavil try pannalam.very good sir .
//
Nandri... ippti usupethe usupethe udapa rakalam akkurangale...:)
super comedy
Post a Comment