ஹாலிவுட்டில் அத்திப்பூ புத்தது போல் கதாநாயகிகள் மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் வெற்றி கண்டுள்ளன.Tomb Rider, Charles Angels, Evil Resident என்று குறிப்பிட்டு இந்த படங்களை சொல்லலாம். இவை எல்லாம் வியாபார ரிதியான வெற்றிப்படங்கள். இதில் கதாநாயகர்களுக்கு நிகராக நாயகிகள் சாகசம் செயல் செய்திருப்பார்கள். எந்த வித சாகசம் செய்யாமல், கவர்ச்சி காட்டாமல் கதாநாயகி சுற்றி நகரும் படம் தான் ‘Million Dollar Baby’.

குத்து சண்டை வீராங்கனைக்கும், அவள் பயிற்சியாளருக்கும் நடக்கும் பாசம் போராட்டம் தான் கதை. ஓட்டலில் வேலை செய்யும் மெகி பெரிய குத்து சண்டை வீராங்கனையாக வேண்டும் என்பது அவள் வாழ்நாள் லட்சியம். தனக்கு பயிற்சி அளிக்கும் படி ப்ரான்கி என்ற பயிற்சியாளரிடம் கேட்க, அவள் பெண் என்பதால் முதலில் மறுக்கிறார். மெகி மனம் தளராமல் தினமும் ப்ரான்கி முன் தனக்கு தெரிந்த குத்து சண்டையை செய்து காட்டுகிறாள். ஒரு கட்டத்தில் மெகிக்கு பயிற்சி அளிக்க ப்ரான்கி சம்மதிக்கிறான்.
தீவிர பயிற்சி பிறகு மெகியை லோக்கல் போட்டிகளில் பங்கு பெற வைக்கிறார் ப்ரான்கி. ஒவ்வொரு போட்டியிலும் தனது எதிராளியை முதல் ரவுன்டிலே வீழ்த்திவிடுகிறார். இதை பார்த்த ப்ரான்கி மெகியிடம் " உன்னை பாதுகாத்த பிறகே எதிராளியை தாக்க வேண்டும்" என்று அறிவுரை கூறுகிறார். ஆனால், மெகி இதை கேட்காமல் எதிராளியை தாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தினாள். ஒரு போட்டியில் தாக்க முயற்சிக்கும் போது அவள் மூக்கில் காயம் ஏற்ப்படுகிறது. இருந்தும், அந்த போட்டியில் வெற்றி பெற்று விடுகிறாள். தன் மாணவி தொடர்ந்து வெற்றி பெறுவதை பார்த்து உலகளவில் போட்டியில் கலந்துக் கொள்ளும் முயற்சியை செய்கிறாம் ப்ரான்கி.
தனது பயிற்சியாளர் முயற்சியால் சர்வதேச குத்து சண்டை போட்டியில் மெகி கலந்துக் கொள்கிறார். மெகி எதிர்த்து மோதும் ப்ளு பியர் ( லுசியா ரிஜ்கர் - குத்து சண்டை வீராங்கனை) விதிக்கு முரண்பாடாக சண்டை போடுகிறாள். மெகி எதிர்பாராத சமயத்தில் ப்ளு பியர் அடிக்க, மெகி மயங்கி கீழே விழுகிறாள். அவள் விழும் போது ஸ்டுல் மீது வீழ எலும்பு முறிவு ஏற்ப்படுகிறது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் மெகி சேர்க்கப்படுகிறாள். தனது மாணவியின் திறமையை அதிகமாக எடைப்போட்டு விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சியில் ப்ரான்கி தவிக்கிறான்.
மெகி பரிசோதித்த மருத்துவர்கள் அவள் இனிமேல் எழுந்து நட மாட முடியாது என்று கூறுகின்றனர். மெகி படுக்கையிலே கிடக்கிறாள். மெகியின் அம்மா, சகோதரி அனைவரும் அவள் பணத்தில் தான் கவனமாக இருந்தனர். மனமுடைந்த மெகி ப்ரான்கியிடம் தன்னை கொன்று விடும்படி கெஞ்சுகிறாள். ப்ரான்கி அதை செய்ய மறுக்கிறான்.
எழுந்து நடமாட முடியாத மெகி நாக்கை கடித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறாள். மருத்துவர்கள் அவளை தடுத்து காப்பாற்றுகின்றனர். சுறு சுறுப்பாக இயங்கிய தனது மாணவி இப்படி மனமுடைந்து ப்ரான்கியால் பார்க்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் மெகியை தன் கையால் கருணை கொலை செய்கிறான் ப்ரான்கி.
மெகியாக ஹில்லாரி ஸ்வான்க் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதும், கொல்டன் க்லோப் விருதும் பெற்றுயிருக்கிறார். இவர் உடல் பயிற்சி செய்யும் போது கவர்ச்சி நம்மை கவர்வதை விட பிரமிக்க வைக்கிறார். குத்து சண்டை வீராங்கனைக்கான உடல் வாகு, பைசப்ஸ், சிக்ஸ்-பேக் என்று அதிக உழைத்திருக்கிறார். இறுதி காட்சி கண் கழங்கவும் வைக்கிறார்.
ப்ரான்கியாக க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருக்கிறார் (படத்தின் இயக்குநரும் இவரே !). ஒண்டி கட்டையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பவராக வாழ்ந்திருக்கிறார். தன் மகளுக்கு ஒவ்வொரு முறை கடிதம் எழுதி அனுப்பவதும், அதற்கு அவளிடம் பதில் வரால் அனுப்பிய கடிதம் திரும்பி வருவதும் என்று தன் சோகத்தை முகத்தில் கொட்டியிருக்கிறார். இவரின் நண்பராக மொர்கன் ப்ரீமென் நடித்திருக்கிறார். இவர் கதை சொல்வது போல் படம் நகர்கிறது. சிறந்த துணை நடிகனுக்காக ஆஸ்கர் விருது மொர்கன் ப்ரீமென்னுக்கு கிடைத்தது.
பெரிய திருப்பங்கள் இல்லாமல் கதையை அதன் போக்கில் எடுத்து சென்று எதார்த்தமாக நகர்த்திருயிருக்கிறார் இயக்குநர். 2004 ஆண்டுக்கான சிறந்த படம் விருதும், சிறந்த இயக்குனர் விருதும் ‘Million Dollar baby’ படத்திற்கு கிடைத்தது என்பது குறிப்பிட தக்கது.
7 comments:
More reviews please
Senthil
You should watch Hilary's " The Freedom writers" movie. In this movie also she is the main character and the story is a true story. It is a wonderful story and it is about a real person Erin gruell. As usual her performance is excellent and the screenplay is really good. You should review this movie too. enna padam sir adhu thamizla ippadi edutha parpangala theriyala.s
நல்லா எழுதறீங்க..குகன்..
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
// Senthil said...
More reviews please
Senthil //
Surely will do in next review :)
// Sri said...
You should watch Hilary's " The Freedom writers" movie. In this movie also she is the main character and the story is a true story. It is a wonderful story and it is about a real person Erin gruell. As usual her performance is excellent and the screenplay is really good. You should review this movie too. //
I will try to get the movie. Thanks for your information Sri...
// Cable Sankar said...
நல்லா எழுதறீங்க..குகன்.. //
ரொம்ப நன்றி தல...
Post a Comment