பார்த்திபன் : நாம இப்போ ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு போண்ணு பாக்கணும்
வடிவேலு : பையன் எப்படி இருப்பான்
பார்த்திபன் : ஏன்... அழகா இருந்தா நீ கல்யாண பண்ணிக்கலாம் நினைக்கிறியா...
வடிவேலு : ஆ...
பார்த்திபன் : பேசாம... முடிக்கிட்டு வா..
( இருவரும் பண்ணக்கர வீட்டு பையனின் அப்பாகிட்ட போறாங்க.)
பார்த்திபன் : சார்... நான் உங்க பையனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்.
பையன் : அப்பா... என்னக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ப்பா...
பார்த்திபன் : தம்பி... அப்படினா சொல்லாதீங்க... பொண்ணு ஆம்பானி வீட்டு பொண்ணு..
பையன் : அப்படினா சரி..
பையனின் அப்பா : நாங்க சிக்கிரம் அந்த பொண்ண பாக்கனும்.
பார்த்திபன் : கண்டிபா... உங்களுக்கு காட்டாம்ம...யாருக்கு காட்ட போறென்.

(இருவரும் வெளியே வந்தவுடன்.)
வடிவேலு : என்னப்பா... பொண்ணு ஆம்பானி வீட்டு பொண்ணு சொல்லுற... எப்படி இவங்களுக்கு பொண்ணு கொடுப்பாங்க...
பார்த்திபன் : பேசாம... முடிக்கிட்டு வா.. நான் பார்த்துக்கிறேன்...
வடிவேலு : எதுவுமே பேச விடமாடிங்கிரியே...
( இருவரும் ஆம்பானி வீட்டு பொண்ணுடைய ஆப்பாகிட்ட போறாங்க.)
பார்த்திபன் : சார்... நான் உங்க பொண்ணுக்கு ஒரு பையன் பார்த்திருக்கேன்.
ஆம்பானி : என் பொண்ணுக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்கிறதப்பத்தி யோசிக்கல..
பார்த்திபன் : பையன் அடுத்த நிதி அமைச்சரா வருவான்... நம்ப பிரதம மந்திரிக்கு பையன் அப்பா ரொம்ப நெருக்கம்.
ஆம்பானி : அப்படின சர்... அவங்கல பொண்ணு பாக்க வர சொல்லுங்க...
பார்த்திபன் : சரி.... நான் உத்தரவு வாங்கிக்கிறேன்...
(இருவரும் வெளியே வந்தவுடன் வடிவேலு குழப்பத்துடன் பேசினான்.)
வடிவேலு : என்னப்பா... இந்த கல்யாண விஷயத்துல.... பிரதம மந்திரி எல்லாம் இழுக்குறியே... எனக்கு பயமா இருக்குப்பா...
வாயை முடு பார்த்திபன் சைகை காட்டினான்.
வடிவேலு : என் வாய்யை மூடலாம்...ஆனா, பிரதம மந்திரி வரிக்கும் போறியே... அவங்க கருப்பு பூனை தூப்பாக்கிய முட முடியுமா... இது எதுல போய் முடியுமோ....
( இருவரும் பிரதம மந்திரி பார்க்க போறாங்க.)
பார்த்திபன் : எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல பையன் இருக்கான்... அவனுக்கு நிதி மந்திரியா வர தகுதியிருக்குற பையன்...
பிரதம மந்திரி : என் கிட்டயே.... நிறையா மந்திரி இருக்காங்க...
பார்த்திபன் : அந்த பையன் ஆம்பானியோட மாப்பிள்ள...
பிரதம மந்திரி : அப்படினா சரி... இப்போவே ஒரு தொகுதி இடை தேர்தல் நடத்தி... அவன ஜெய்க்க வச்சு... நிதி அமைச்சரா ஆக்கிடுறேன்....
( வேளியே வந்தவுடன்....)
வடிவேலு : உன்னக்கு பயங்கர மூளை.... என்னையும் இதே மாதிரி மத்தவங்க தேடி வர மாதிரி பெரிய மனுஷன ஆக்கிட... உனக்கு பெரிய சிலையே வச்சிடுவேன்...
பார்த்திபன் : அவ்வளவு தானே.... இப்போ பாரு... சார்.. ( கருப்பு பூனை காவல்களிடம்)... இவன் பிரதம மந்திரிய கொள்ளுறதுக்கு உள்ள டைம் பாம் வச்சிருக்கானா... சிக்கிரம் பிரதமர காப்பாத்துங்க... இந்த தீவிரவாதிய நான் பார்த்துகுறேன்...
வடிவேலு : அடபாவி.... நாலு பேரு தேடி வர மாதிரி பண்ணு சொன்னா.... நாடே தேடுற மாதிரி பண்ணிடானே....
*******
பலர் மின்னஞ்சலில் படித்த நகைச்சுவை தான். என் கற்பனை மசாலா கலந்து கொஞ்ச புதுசா கொடுக்க முயற்சி பண்ணியிருக்கேன்.
5 comments:
super masala
நல்ல நகச்சுவை...நீங்கள் கூறியபடி, எற்கனவெ படித்த ஞாபகம் இருந்தாலும், சுவாரச்யம் குறையவில்லை...தொடர்ந்து பதிவிடுங்கள் திரு குகன் அவர்களே...
ஆம்...
// ஷங்கர் Shankar said...
super masala //
Thanks Shankar :)
// RAMASUBRAMANIA SHARMA said...
நல்ல நகச்சுவை...நீங்கள் கூறியபடி, எற்கனவெ படித்த ஞாபகம் இருந்தாலும், சுவாரச்யம் குறையவில்லை...தொடர்ந்து பதிவிடுங்கள் திரு குகன் அவர்களே...
//
இந்த ஊக்கம் போதும்..... இன்னும் எந்த மொக்கை பதிவையும் தைரியமாக போடுவேன் :)
Post a Comment