இன்று கணிணித்துறையில் பலருக்கு வேலை பாதுகாப்பு இல்லை. முன்பெல்லாம் அதிக சம்பளத்திற்காக ஆறு மாதம் ஒரு முறை வேலையை விட்டு மாறுவார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்தாலும், யார் வேலை கொடுக்கிறார்கள். எல்லா இடங்களிலும் வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இதை பற்றி எல்லாம் யோசிக்காமல் வடிவேலு தன் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்று வேறொரு நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூ செல்கிறார். வடிவேலுவின் நேரம் இன்டர்வியூ பெனலில் அமர்ந்திருப்பவர் பார்த்திபன். பார்த்திபனை பார்த்ததும் தன் தலையில் ஆயிரம் வாலா பட்டாசு கொலுத்திப் போட்டது போல் இருந்தது.
பார்த்திபன் அறையில் கால் வைத்த பிறகு திரும்பி சென்று விடலாமா சென்று கூட நினைத்தார். ஆனால், அவரால் முடியவில்லை.
பார்த்திபன் : உள்ள வாப்பா... வெட்கப்படாத...
வடிவேலு : (உன்ன பார்த்த வெட்கமடா வரும்...? பயம் தான் வருது)
( பார்த்திபன் வடிவேலுவை இன்டர்வியூவில் கேள்வி கேட்கிறார். )
பார்த்திபன் : இன்டர்வியூக்கு...ஏன் லேட்டு...?
வடிவேலு : சாரி.... லிப்ட் 2 மணி நேரம் நின்னு போச்சு...
பார்த்திபன் : எனக்கு கூட தான்... எஸ்கலெட்டர் நின்னு போச்சு.... நான் ஆபிஸ்க்கு கரேக்ட்டா வரல...
வடிவேலு : &$%... (முதல் கேள்விலேயே ஆரம்பிச்சிட்டானே...)
பார்த்திபன்: இன்டர்வியூவுக்கு லேட்டா வர நீ... வேல சேர்ந்தது அப்புறம் எப்படி கரேக்ட்டா வருவ..
வடிவேலு : அப்பாடா... வேலை கிடையாத ( இந்த இடத்த விட்டு காலிப்பண்ணா போதும்.)
பார்த்திபன்: அப்படி நா சொல்லவே இல்ல. என் கேள்விக்கு பதில் சொன்னா வேலை கண்டிப்பா உண்டு.
வடிவேலு : இந்த கொடுமை வேற இருக்க... (மனதுக்குள்) இவன் கேக்குற கேள்விக்கு தப்பு தப்பா பதில் சொல்லனும். வேல மட்டும் கிடைச்சா தினமும் இவன பார்க்க வேண்டியது வரும்.
பார்த்திபன்: கேள்வி கேக்கட்டா....
வடிவேலு : ஆ... கேளுங்க..
பார்த்திபன்: நீங்க யாரு ?
வடிவேலு : (பேரு தெரியாம தான் இன்டர்வியூக்கு கூப்பிட்ட...) என் பேரு வடிவேலு...
பார்த்திபன்: அது உங்க பேரு...நீங்க யாரு ?
வடிவேலு : நான் இதுக்கு முன்னாடி.... சாப்ட்வேர் கம்பனியில வேலை செஞ்சேன்...

பார்த்திபன்: அது உங்களுடைய வேலை... நீங்க யாரு...?
வடிவேலு : ஐயோ... ஏன் சார் என்ன பார்த்தா உங்களுக்கு புடிக்கலையா.... வேலை இல்லனா இல்லனு சொல்லுங்க... இப்படி ஏன் சார் டார்ச்சர் பண்ணி கேள்வி கேக்குறிங்க...
பார்த்திபன்: சரி... அத விடுங்க... கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் ஆகுறாதுக்கு அப்படி கேள்வி கேட்டென்..
வடிவேலு : (இவ ரிலாக்ஸ் ஆக நான் தான் மாட்டுனே பொலிருக்கு )
பார்த்திபன்: முதல் கேள்வி...
வடிவேலு : ….
பார்த்திபன்: லாரிக்காரன் ஒருத்தன் ஒன் வேல போறான். ஆனா போலீஸ் ஒன்னுமே கேக்கல
வடிவேலு : ஏன் ???
பார்த்திபன்: ஏன்னா, அவன் நடந்து போறான்
வடிவேலு : சு..சு... இப்போவே கண்ணு கட்டுதே..
பார்த்திபன்: ஒரு அழகான பொண்ண நீ காதலிக்கிற...
வடிவேலு : அந்த பொண்ணு என்ன காதலிச்சாளா...
பார்த்திபன்: உன்ன ஏவ காதலிப்பா...அவசரப்படாம கேள்விய கேளு... அவக்கிட்ட உன் காதல சொல்லப்போர... அடிவாங்காம்ம எப்படி சொல்லுவ.. ?
வடிவேலு : போறவன்...வரவன் எல்லாம் என்ன அடிக்கிறான்.... அழகான பொண்ணுக்கிட்ட நான் காதலிக்கிறேனு சொன்னா அடிக்காமலா இருப்பா...!
பார்த்திபன்: நான் உன் கிட்ட கேள்வி கேட்கனும்... நீ கேக்க கூடாது....
வடிவேலு : நேரா போய்... ஐ லவ் யூ... சொல்லுவேன்...
பார்த்திபன்: செருப்பால அடிப்பா... வேற எப்படி சொல்லுவ...
வடிவேலு : லவ் லெட்டர் கொடுப்பேன்...
பார்த்திபன்: அண்ணன குடிகிட்டு வந்து கைய வெட்டுவா... வேற எப்படி சொல்லுவ...
வடிவேலு : ( இவன் என்கிட்ட இன்டர்வியூ கேள்வி கேட்குறானா... ஐடியா கேட்குறானா...) மனதில் நினைத்துக் கொண்டான்.
பார்த்திபன்: ஐடியா கேட்குறா வச்சுகொயேன்...
வடிவேலு : (அ..ஆ... மனசில நினைச்சத அப்படியெ சொல்லுறான்... பேசாம தெரியலனு சொல்லுவோம்) தெரியல சார்..
பார்த்திபன்: உன் லவ் ஒரு பொண்ணு கிட்ட கூட சொல்ல தெரியல... நீ எப்படி எங்க கம்பேனி சாப்ட்வேர் பத்தி க்ளைன்ட் கிட்ட சொல்ல போற…?
வடிவேலு : சரி... நீங்க எப்படி சொல்லுவிங்க...
பார்த்திபன்: துடுப்பு இருக்குர போட்டுல அந்த பொண்ண கூட்டிகிட்டு போய்... நடு கடலுல ... ஐ லவ் யூ சொல்லி... ஒத்துக்கலைனா.... துடுப்ப கிழப் போட்டுடுவேனு சொல்லுவேன்...
வடிவேலு : ??? ... ( ஏன் நேரமே சரியில்ல..)
பார்த்திபன்: அடுத்த கேள்வி...
வடிவேலு : (என்ன விட்டா இப்படியே ஓடுவேன்...)
பார்த்திபன் : ஒரு பொண்ணு வீட்டுக்கு லேட்டா போறா... அப்போ அப்பா "ஏன் லேட்டு கேக்குறாரு... அம்மா "ஒய் யூ ஆர் லேட்" கேக்குறாங்க... அண்ணன் "தும் லேட் க்ய கரும்" கேக்குறான்... அக்கா "எந்துக்கு லேட்டுக ஒச்சவு" கேக்குறா... ஏன் ஆழுக்கு ஒரு பாஷையில பேசுறாங்க...?
வடிவேலு : அந்த பொண்ணுக்கு எல்லா பாஷை தெரியும்...
பார்த்திபன்: ஒரு பொண்ணு லேட்ட வந்தா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க.
வடிவேலு : ச்..ச்... முடியல...
பார்த்திபன்: ஆமா.... இன்னும் இன்டர்வியூ முடியல... அடுத்த கேள்வி... STD க்கு எதிர் மறை என்ன?
வடிவேலு : (அழுதுக்கொண்டே) தெரியல...
பார்த்திபன்: No coffee da.
வடிவேலு : அடி செருப்பால நாயே... செல்போன்ல வர சர்தார் ஜோக், கடி ஜோக் எல்லாம் இன்டர்வியூவில கேள்வி கேக்குற... நீ பண்ணுற டார்சருக்கு உன்ன கொன்னா கூட தப்பில்ல..
பார்த்திபன் இதுவரைக்கு பல முறை டார்ச்சர் கொடுத்தாலும் வடிவேலு கோபப்பட்டதில்லை. முதல் முறையாக தன் வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி தீர்த்துவிட்டார் வடிவேலு. பார்த்திபன் எதுவும் பேசாமல் அமைதியாக வடிவேலு திட்டுவதை கேட்டு கொண்டு இருந்தார்.
வடிவேலு பார்த்திபனை மன தார திட்டிய திருப்தியுடன் அறை கதவை திறந்து வெளியே வர அந்த கம்பெனியின் பாதுகாவலர்கள் வடிவேலுவை பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கின்றனர். வடிவேலு பார்த்திபனை திட்டும் போது தன் செல்போன் மூலம் பாதுகாவலர்களை அழைத்து, வடிவேலு திட்டுவதை கேட்ட வைத்தார்.
வேலை கிடைக்காததால் கம்பேனி மேனேஜரை தர குறைவாக பேசிய குற்றத்திற்காக போலீஸ் வடிவேலுவை கைது செய்தனர்.
ஜெயில் செல்லுக்குள்...
வடிவேலு : பேசாம கொடுக்குற சம்பளத்துல பழைய கம்பேனியில வேலை செஞ்சிட்டு இருந்திருக்கலாம். அதிக சம்பளத்துக்கு ஆசப்பட்டு இருக்குற வேலையும் போச்சு... ஜெயில்ல போட்டுட்டானே..